Published:Updated:

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சுதர்சனருக்கு அருளிய கேசவன் உங்களுக்கும் அருளுவார்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்

சுதர்சனரை வழிபட்டு பலன்பெற உகந்த வழிபாடு ஸ்ரீசுதர்சன மகாஹோமம்! எப்படிக் கலந்துகொள்வது?

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சுதர்சனருக்கு அருளிய கேசவன் உங்களுக்கும் அருளுவார்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுதர்சனரை வழிபட்டு பலன்பெற உகந்த வழிபாடு ஸ்ரீசுதர்சன மகாஹோமம்! எப்படிக் கலந்துகொள்வது?

Published:Updated:
ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்

எண்ணியதை உடனே அருளும் ஸ்ரீசுதர்சன மஹாஹோமம், சுதர்சனருக்கு உகந்த நாளான 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவிருக்கிறது. சக்தி விகடன் - ஆதிகேசவ கோயில் நிர்வாகம் இணைந்து திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் இதை நடத்தவுள்ளனர்.

ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்
ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்

தீமைகளை ஒழித்து நன்மைகளை அளிப்பதில் ஸ்ரீசுதர்சனருக்கு இணையானவர் யாருமில்லை என்கிறது வைணவம். திருமாலை விட்டு எந்நாளும் நீங்காத நித்யசூரியான ஸ்ரீசுதர்சனர் எல்லா காலத்திலும் திருமாலின் பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர். சூரிய மூர்த்தியைப் போன்று ஸ்ரீசக்கரத்தாழ்வார் எனப்படும் சுதர்சனரும் பிரதட்சய தெய்வம் என்கின்றன புனித நூல்கள். நேரிலேயே தரிசிக்கக் கூடிய கடவுள் சுதர்சனர். நல்வழி காட்டுபவர், இனியவர், சௌலப்யமானவர் என்று இவரைப் புராணங்கள் போற்றுகின்றன. சுதர்சனரை வழிபட்டு பலன்பெற உகந்த வழிபாடு ஸ்ரீசுதர்சன மகாஹோமம்!

நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்னைகள், தொல்லைகள், அச்சங்கள், நோய்கள், தோஷங்கள் ஏராளம். வம்பு வழக்கு, கடன், எதிரிகள் என ஏகப்பட்ட கொடூரங்களை எதிர்த்துப் போராட வேண்டி உள்ளது. முன்னேறவே முடியாத அளவுக்குத் தடைகள், கஷ்டப்பட்டு முன்னேறினாலும் ஏகப்பட்ட திருஷ்டிகள்... அப்பப்பா... இந்த மாதிரியான சமயத்தில் நம்மைக் காப்பாற்றும் தெய்வம்தான் ஸ்ரீசுதர்சனர். அவரை முறைப்படி வழிபட்டு வந்தால் சகல நன்மைகளையும் பெறலாம் என்கின்றன சாஸ்திரங்கள். அதில் முதன்மையானது ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்.

‘ஸஹஸ்ரார ஹூம்பட்’ என்ற உக்கிர மந்திரத்தால் வழிபடப்படும் சுதர்சனர் அனுகிரகம் செய்தால் தீமைகள் அகன்று, நன்மைகள் பெருகும் என்பது ஐதிகம். ராஜ மந்திரங்களுள் சிறப்பானதான மகாசுதர்சன மந்திரம் சொன்னால் அச்சங்கள் நீங்கிய வாழ்வை அடைவர் என்பதும் நம்பிக்கை. ஆற்றலைப் பெருக்கி, செல்லும் இடமெங்கும் வெற்றியை அருளும் வழிபாடு சுதர்சன வழிபாடு. வீண் அச்சங்கள், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், வழக்குகள், தீராத பகை என அனைத்தையும் நீக்க வல்லது சுதர்சன மகாஹோமம். எண்ணியவைகளை எண்ணியவாறே அருளும் அற்புதமான இந்த ஹோமத்தில் ஸ்ரீசுதர்சனரின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் ஆகியவற்றைச் சொல்லி ஹோமம் செய்வார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

பூரண ஆயுசு கிடைக்க: பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும், கொடும் நோய்கள் நம்மை விட்டு நீங்கவும் சுதர்சன ஹோமம் அருள் செய்யும்.

சகல ஐஸ்வர்யம் கிடைக்க: வறுமை எனும் கொடிய துன்பத்தை விரட்ட சுதர்சனரின் அருளைப்பெற்றுத் தரும்.

எதிரிகள் பயம் நீங்கும்: பகவானின் பிரயோகச் சக்கரமான ஸ்ரீசுதர்சன மூர்த்தியை மனதார தியானித்து, உளமாரப் பிரார்த்தித்துச் செய்யப்படும் இந்த ஹோமத்தால் சத்ரு பயம் நீங்கும். எதிரிகளின் சூழ்சிகள், சதித் திட்டங்கள் முதலானவற்றிலிருந்து இந்த ஹோமம் நம்மைக் காக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்
ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்

ஸ்ரீசுதர்சன மூர்த்தியை தியானித்து வணங்கிச் செய்யப்படும் இந்த ஹோமம் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காக்கும். பயணம், நெருப்பு தொடர்பான பணிகள், போர்ச் சுழல், காட்டுப் பணிகள் முதலான சூழலில் நம்முடன் இருந்து ரக்ஷிக்கும் சுதர்சனமூர்த்தியின் துணையை இந்த ஹோமம் பெற்றுத் தரும்.

தீவினைகள் நீங்கவும் தீய சக்திகள் விலகவும்: பூர்வஜன்ம வினைப் பயனால் சிலர் தீவினைகளுக்கும் தீய சக்திகளின் பாதிப்புகளுக்கும் ஆளாக நேரிடும். இதுபோன்ற பாதிப்புகள் நம்மை அணுகவிடாமல் காக்கும் வல்லமை கொண்டது ஸ்ரீசுதர்சன ஹோமம்.

மேலும் மகா சுதர்சன ஹோமத்தில் சங்கல்பித்து வழிபடுவதால், எளிதில் கிரஹிக்கும் ஆற்றல் கிடைக்கும், வீட்டில் கால்நடைச் செல்வங்கள் நிறைய பலனளிக்கும், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாவார்கள், கண்ணுக்குத் தெரியாத நோய்கள் குணமாகும். அத்துடன், குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய பாவம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

பாரத பூமி, கர்ம பூமி. எந்த ஒரு செயலை உத்தேசித்தும் இங்கு சொல்லப்படும் மந்திரங்கள் ஸித்திக்கும். அதாவது பலிக்கும். இந்த பூமிக்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. ஆகவே நம் தேசத்தில் செய்யப்படும் ஹோமங்களும் மந்திர ஜபங்களும் கோடானுகோடி பலன்களை நமக்கு அள்ளித் தரும்.

அவ்வகையில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் பலன் பெறவும், அவர்களின் குடும்பம் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் செழித்தோங்கும் பொருட்டும் மிக வல்லமை மிக்க ஸ்ரீசுதர்சன ஹோமம் நடைபெறவுள்ளது. எண்ணியதை உடனே அருளும் ஸ்ரீசுதர்சன மஹாஹோமம், சுதர்சனருக்கு உகந்த நாளான 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கவிருக்கிறது. சக்தி விகடன் - ஆதிகேசவ கோயில் நிர்வாகம் இணைந்து திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் இதை நடத்தவுள்ளனர்.

அது ஏன் இறையானூரில்?

கேசன் - கேசி என்ற எவராலும் அழிக்க முடியாத, வரம் பெற்ற இருவரையும் மடக்கி அவர்கள்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு சயனித்தார் திருமால். இதனால் அவருக்கு கேசவன் என்ற திருநாமமும் உண்டானது என்கிறது புராணம். அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் ஒளிந்திருந்த திந்திரிவனத்துக்கு (திண்டிவனம்) வந்து காட்சி தந்தார் கேசவர். திருமால் கேசவனாக தேவர்களுக்கு முதன்முதலில் அருளிய தலம் என்பதால் அது இறைவனூர் என்றானது.

ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்
ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்

திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் ஆதிகேசவர். இங்கே தனி சந்நிதியில் அபூர்வ கோலத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீசுதர்சனர். இங்கு ஸ்ரீசுதர்சன மகாஹோமத்தை நடத்தினால் சுதர்சனரின் பரிபூரண அருளைப் பெறலாம் என்கின்றன தலபுராணங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீஆதிகேசவ பெருமாள்
ஶ்ரீஆதிகேசவ பெருமாள்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.