திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிவிடைதாங்கி, மதுரா பைரவபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசொர்ணகால பைரவர் ஆலயம் சுமார் 600 ஆண்டுகள் பழைமையானது.
14-ம் நூற்றாண்டில் வீரசம்புவரையன் என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்துவந்தபோது வடக்கேயிருந்து பெரும் படை ஒன்று தாக்க வந்தது. அப்போது இந்தப் பகுதியையும் கோட்டையையும் பாதுகாக்க எண்ணிய வீரசம்புவரையன் கால பைரவரை வணங்கினான். பெருமான் அருளால் பெரும் வெற்றி பெற்றதால் இந்த சொர்ணகால பைரவர் ஆலயத்தை எழுப்பியதாக தலவரலாறு கூறுகிறது.
புராண பெருமையும் வரலாற்றுப் புகழும் கொண்ட இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் விகாரி ஆண்டு கார்த்திகை மாதம் 29-ம் நாள் (15-12-19) ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை சதுர்த்தி, பூச நட்சத்திரம், சித்தயோக சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறவுள்ளது. வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்கும் இந்த விழா டிசம்பர் 16-ம் தேதி கலை நிகழ்ச்சியோடு நிறைவடைகிறது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யார் ஸ்வாமிகளின் பரிபூரண ஆசியுடன் ஆன்மிகப் பெரியோர்களின் துணையுடன் நடைபெறவுள்ளது. எண்ணிய காரியங்களை விரைவாக முடித்துக்கொடுக்கும் இந்த ஸ்ரீசொர்ணகால பைரவரை வணங்கி அருள்பெறுவோம்.

செல்லும் வழி : காஞ்சிபுரத்திலிருந்து ஆற்காடு செல்லும் எண் 75, எண் 57 பேருந்துகள் இங்கு செல்லும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசிம்ம ராசியினர் பைரவரை ஞாயிற்றுக் கிழமையில் வழிபடுவதால், தள்ளிப்போகும் திருமணம் கை கூடும்.
கடக ராசியினர் திங்கள் கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தி தினத்தில் பைரவரை வழிபடுவதால் நோய்கள் குணமாகும்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியினர் செவ்வாய்க் கிழமையில் பைரவரை வழிபடுவதால் இழந்த பொருளைத் திரும்ப பெறலாம்.
மிதுனம், கன்னி ராசியினர் புதன் கிழமைகளில் பைரவரை வழிபடுவதன் மூலம் பூமி லாபம் பெறலாம்.
தனுசு, மீன ராசியினர் வியாழக்கிழமையில் பைரவரை வழிபடுவதன் மூலம் தீமைகள் விலகும்.
ரிஷபம், துலாம் ராசியினர் வெள்ளிக் கிழமை மாலையில் வழிபடுவதால் வறுமை நீங்கி செல்வம் பெறுவர்.
மகரம், கும்ப ராசியினர் சனிக்கிழமையன்று பைரவரை வழிபடுவதால் தொல்லைகள் நீங்கி, நல்லவை பெறுவர்.