Published:Updated:

ஸ்ரீபாதுகா தரிசனம்!

ஸ்ரீபாதுகா தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபாதுகா தரிசனம்

ரம்யா வாசுதேவன்

ஸ்ரீவைகுந்தம்! மகாவிஷ்ணு உள்ளே நுழையும் முன் தன் பாதுகைகளை வெளியே கழற்றிவிட்டு உள்ளே போனார். அங்கே இருந்த ஆசனத்தில் தன் கிரீடத்தைக் கழற்றிவைத்தார்.

காலம் காலமாய் இது நடந்து கொண்டிருந்தது. பாதுகைகளுக்கு மகாவிஷ்ணுவிடம் சொல்ல வேண்டும் என்று ஒரு விஷயமும் இருந்தது. ஆனால் சொல்லவில்லை. ஒருமுறை மகாவிஷ்ணு தன் பாதுகைகளைக் கழற்றும்போது அவை கழற்ற வரவில்லை. பெருமாளின் பாதங்களை கெட்டியாய்ப் பிடித்திருந்தன பாதுகைகள்.

ஸ்ரீபாதுகா தரிசனம்!

அவருக்கு ஏதோ புரிந்தது. பாதுகைகள் சொல்லின... `‘பகவானே! நாங்கள் குறை சொன்னதாய் நினைக்கக்கூடாது. அந்தக் கிரீடத்தைக் கண்டித்து வைக்கக் கூடாதா? அது, எங்களைப் பல காலமாய் கேலி பேசி வருகிறது.

`பார்த்தீர்களா... பகவான் உங்களை வெளியே விட்டுவிடுகிறார். ஏனெனில் நீங்கள் இருக்கவேண்டிய இடம் அதுதான்.ஆனால் என்னை எங்கே வைக்கிறார் பார்த்தீர் களா. சிம்மாசனத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். நான் இருக்கவேண்டிய இடம் எதுவென்று அவருக்கே தெரிந்திருக்கிறது' என்றபடி தினமும் வம்பு செய்கிறது'’ என்று பாதுகைகள் கலங்கின.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்ரீபாதுகா தரிசனம்!

பாதுகைகளின் வருத்தத்தையும் புரிந்துகொள்பவர் அல்லவா பகவான். ‘கவலைப்படாதீர்கள் திரேதா யுகத்தில் நீங்கள் ஆசனத்தில் அமர்வீர்கள். கிரீடம் உங்களைத் தலைவணங்கும்'’ என்று திருவாய் மலர்ந்தருளினார் பகவான்.

ஸ்ரீராமனின் கால் படவில்லை; ஆனால், அவன் நடந்து வந்தபோது அவனுடைய கால் பட்டு தெறித்த துகள் பட்டதால், கல்லாகிக் கிடந்த அகலிகை பெண்ணென மீண்டாள். அந்தக் கால்களிலிருந்த அதாவது ராமபிரான் அணிந்திருந்த பாதுகாவிலிருந்து கழண்ட துகளினால்தான் அகலிகை சாப விமோசனம் பெற்று மறுபடி வாழ்வு பெற்றாள் என பாதுகாதுளியைப் போற்றுகிறார் கம்பர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கம்பனின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டு மென்றால்...

கண்ட கல் மிசைக் காகுத்தன்

கழல் துகள் கதுவ,

உண்ட பேதைமை மயக்கு அற,

வேறுபட்டு, உருவம்

கொண்டு மெய் உணர்பவன்

கழல் கூடியது ஒப்பப்

பண்டை வண்ணம் ஆய் நின்றனள்;

மாமுனி பணிப்பான்.

இப்பேற்ப்பட்ட சிறப்புடையன திருவடிகள். அந்தத் திருவடிகளையே தாங்குகின்றன என்றால், பாதுகைகள் எவ்வளவு சிறப்பு மிகுந்தவை!

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனைத் தடுக்க முயன்ற ஜடாயு, ராவணனால் சிறகுகள் வெட்டப் பட்டுச் சாய்ந்தார். அவ்வழியே வந்த ராமன் லட்சுமண னிடம் விவரங்களைச் சொன்னார்.

ஸ்ரீபாதுகா தரிசனம்!

அங்ஙனம் வீழ்ந்து கிடந்த ஜடாயு, முதலில் தரிசித்தது ராமபிரானின் திருவடிகளையே. இப்படி, வேதங்களும் காண மாட்டாத எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்கப் பெற்றதாலேயே, அவரது இறுதிச் சடங்குகளை ராமனே செய்யும் பெரும்பேற் றினையும் பெற்றார் ஜடாயு.

எம்பெருமான் சேவையினாலும் எம்பிரானின் திருவடி தரிசனத்தாலும் முக்தியடைந்தார் ஜடாயு. இத்தகு மகிமை வாய்ந்த திருவடிகளைத் தாங்கும் பாதுகா எப்பேற்பட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... பகவானின் திருவடிகளும் பாதுகைகளும் வேறு வேறா என்ன! இதன்மூலம் பாதுகை களுக்கு ராமனின் திருவடிகளுக்குச் சமமான பெருமை உண்டு என்று தெரிந்துகொள்கிறோம்.

வேதாந்த தேசிகர், திருவரங்கம் பெரிய பெருமாளின் பாதுகைகளைப் புகழ்ந்து ஆயிரம் பாடல்களைப் பாடியிருக்கிறார்! ‘பாதுகா சகஸ்ரம்’ என்பது அந்த நூலின் பெயர். இது ஒரே நாள் இரவில் எழுதப்பட்டது. அதிலிருந்து சில ஸ்லோகங்களைப் பார்த்தால் பாதுகையின் பெருமைகளை நாம் அறியலாம்.

`ஸ்ரீரங்கனின் பாதுகையே! அனைத்து உலகங்களையும் ஸ்ரீரங்கநாதனின் திருவடித் தாமரைகள் தாங்கி நிற்கின்றன. அப்படிப்பட்ட அவனுடைய திருவடிகளை நீ தாங்கி நிற்கிறாய். ஆக மூன்று உலகங்களுடன் சேர்த்து ஸ்ரீரங்க நாதனையும் தாங்கி நிற்பதால், உனக்குக் களைப்பு காரணமாக வியர்வை துளிகள் தோன்றுகின்றன. இவையே உன் முத்துக்கள் போன்று அழகாக தோன்றுகின்றன போலும்.

ஸ்ரீபாதுகா தரிசனம்!

ஸ்ரீரங்கநாதனின் திருவடிகளைக் காப்பாற் றும் பாதுகையே, எந்தவிதமான உதவியும் இல்லாத ஒருவன், மிகவும் அழகானதும், அழியாததும், பகவானை அடையும் பாலம் போன்றதும் ஆகிய உன்னைச் சரணமென்று அடைந்து விட்டால் போதும். அவன் இன்பம் துன்பம் என்று மாறி மாறி எழும் அலைகள் நிறைந்த சம்சார சாகரத்திலிருந்து மீண்டு, திருமகள் வாசனின் திருவடி என்ற அழியாத செல்வத்தைப் பெற்றுவிடுகிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்ரீரங்கநாதனின் பாதுகா தேவியே! ஸ்ரீரங்கநாதனின் திருவடிகள் எப்போதும் தூய்மையாகவும் திடமாகவும் உள்ளன. அந்தத் திருவடிகளில் நீ எப்போதும் நிலையாக எல்லையற்ற பெருமையுடன் விளங்குகிறாய் . இப்படியாக உள்ள உன்னை வேதங்கள், `ஆனந்த மயம்' என்று கூறுகின்ற மணிமண்டபமாகவே எண்ணுகிறேன்' எனச் சிறப்பிக்கிறார் வேதாந்த தேசிகர்.

கிருஷ்ணரின் அவதாரக் காலம் முடியும் நேரம் நெருங்கியது. அப்போது உத்தவர் கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, அவரின் பாதங்களில் விழுந்து திருவடிகளைத் தன் கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்கு தன்னுடைய பாதுகைகளை அளித்தார். அவற்றை தன் தலையில் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார்.

பிறகு பத்திரிகாச்ரமம் சென்று கிருஷ்ணனைத் தன் இதய பீடத்தில் நிலைபெறச் செய்து தியானித்து, அவருடைய அறிவுரைகளை கடைப்பிடித்து நிறைவில் பரமபதத்தை அடைந்தார். எல்லா யுகங்களிலும் பெருமாளின் பாதுகை களே விசேஷமானவை.

ஸ்ரீவைஷ்ணவம் பகவானைவிட ஆச்சார்யனைத்தான் விசேஷமாகக் கொண்டாடுகிறது. அப்படிப்பட்ட ஆச்சார்யனின் பாதுகை ரொம்ப விசேஷமாகக் கருதப் படுகிறது. ஏகாதசி முடிந்து துவாதசி அன்று ஸ்ரீபாத தீர்த்தம் என்று ஆச்சாரியனின் திருப்பாத சம்பந்தத்தைத் தீர்த்தமாக அளிப்பார்கள். அதை சுவீகரித்துக் கொள்வது விசேஷம். அப்போதுதான் ஏகாதசியின் பலன் முழுமையாக கிடைக்கும் என்பார்கள்.

நாம் நேரடியாக முயற்சி செய்தால் மோட்சம் அடைய முடியாது. ஆச்சாரியன் மூலமாகத்தான் அடைய முடியும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆச்சார்ய பக்தியும் ஆச்சார்யரின் திருவடியும்தான் ரொம்ப விசேஷம்.

இங்ஙனம் திருவடிகளைப் பற்றியும் அதைத் தாங்கும் பாதுகைகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்போதைய அகோபில மடம் 46-ம் பட்டம் ஸ்ரீஅழகிய சிங்கர் ஸ்வாமிகளிடம்தான் நான் பஞ்ச ஸம்ஸ்காரம் பெற்றுக் கொண்டேன். அதனால் அவரே என் ஆச்சார்யர். அவரது திவ்ய ஆசியால் வாழ்வில் உயர்வும் பேறும் பல பெற்றேன். நான் வேண்டிக்கொண்டபடி என் ஆச்சார்யரான ஸ்வாமியின் திருவடிகளைத் தாங்கும் திருப்பாதங்கள் எனக்கு வரமாக கிடைத்தன. அதை இன்றும் என் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி வருகிறேன். அந்த திருப் பாதுகைகள் வந்த நாள் முதல், என்னோடு இருந்து என் ஆச்சார்யாரே அருள்வதாக உணர்கிறேன். இது என் பிறவிக்குக் கிடைத்த பெரும் வரம்!

ஸ்ரீபாதுகா தரிசனம்!

கமலக் கண்ணனும் கறுப்பு வண்ணமும்!

ஒருமுறை யசோதை கண்ணனிடம் கேட்டாள்:

``கண்ணா நீ ஏன் கறுப்பு வண்ணத்தின் ஆனாய்?''

குழந்தைக் கண்ணன் குறும்பாக பதில் சொன்னான்: ``நான் பிறக்கும்

போது சிவப்பாகவே பிறந்தேன். ஒருநாள் இரவு நான் முழிச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க எல்லோரும் தூங்கிக்கிட்டு இருந்தீங்க. சுற்றிலும் இருட்டா இருந்தது. நான் புரண்டு படுத்தேன். அந்த இருட்டு என் உடம்பில் அப்பிக் கொண்டது!''

யசோதை வெகுளி. கண்ணன் சொன்னதை அப்படியே நம்பினாள். இதே கேள்வியைக் கண்ணனிடம் வேறு பலரும் கேட்டனர்.

அவர்களுக்குக் கண்ணன் தந்த அழகிய விளக்கங்களை வீடியோ வடிவில் காண இங்குள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்.