Published:Updated:

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: செல்வவளத்தோடு அனைத்து மங்கல நிகழ்வுகளும் தடையின்றி நிகழ சங்கல்பியுங்கள்!

லட்சுமி குபேர ஹோமம்

திருமகளையும் குபேரனையும் ஒருசேரப் போற்றும் சிறந்த வழிபாடு ஸ்ரீலட்சுமி குபேர ஹோமம். ஸ்ரீலட்சுமி குபேரனுக்கு செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை.

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: செல்வவளத்தோடு அனைத்து மங்கல நிகழ்வுகளும் தடையின்றி நிகழ சங்கல்பியுங்கள்!

திருமகளையும் குபேரனையும் ஒருசேரப் போற்றும் சிறந்த வழிபாடு ஸ்ரீலட்சுமி குபேர ஹோமம். ஸ்ரீலட்சுமி குபேரனுக்கு செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை.

Published:Updated:
லட்சுமி குபேர ஹோமம்

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

லட்சுமி குபேர ஹோமம்
லட்சுமி குபேர ஹோமம்

திருமகள் செல்வவளம் மட்டும் அளிக்கும் தேவி இல்லை. இவள் 108 வடிவங்களில் நிலை கொண்டு எல்லாவிதமான மங்கல நிகழ்வுகளையும் தடையின்றி நடைபெற அருள் புரிகிறாள். தனலட்சுமி செல்வத்தையும், சந்தான லட்சுமி மகப்பேறையும், மகாலட்சுமி திருமண வரத்தையும், சௌந்தரிய லட்சுமி அழகையும், சாம்ராஜ்ஜிய லட்சுமி அதிகாரத்தையும், தீப லட்சுமி மங்கல வாழ்வையும், கஜலட்சுமி சொர்க்கலோக வாழ்வையும் ஆரோக்கியலட்சுமி நலத்தையும், கீர்திலட்சுமி புகழையும் அருள்பவர்கள் என்று புராணங்கள் கூறும்.

வைகுந்தத்தில் லட்சுமியை சொர்க்கலட்சுமி எனவும் இல்லங்களில் கிருகலட்சுமி எனவும் அரசிகளில் ராஜலட்சுமி எனவும் போற்றுவர். அலைகடலில் உதித்த அலைமகளை விரும்பி அழைக்க எல்லோரது இல்லங்களிலும் விரும்பி நுழைவாள் எனப் போற்றுகின்றன புராணங்கள். செல்வத்தின் அதிபதியாக விளங்குபவள் மகாலட்சுமி என்று புராணங்கள் கூறும். திருமகளின் அருளைப் பெற வேண்டி விசேஷ நாள்களில், லட்சுமி பூஜை, விளக்கு பூஜை, லட்சுமி குபேர பூஜை மற்றும் ஹோமங்கள் செய்வது உண்டு. சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப் பொருட்களை தானம் செய்வதும் அப்போது வழக்கம்.

சத்தியம் பேசுபவர்கள், நல்ல குணங்கள் கொண்டவர், சுத்தமாக இருப்பவர்கள், தம்மிடத்தை அழகாக வைத்திருப்பவர்கள், பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள், கருணை கொண்டவர்கள், எல்லோருக்கும் உதவி செய்பவர்கள், புறம் பேசாதவர்கள், ஆணவம் இல்லாதவர்கள், அதிதிகளை உபசரிப்பவர்கள், எவரையும் சொல்லாலும் செயலாலும் துன்புறுத்தாதவர்கள் ஆகியவர்களிடம் மகாலட்சுமி எப்போதும் இருப்பாள் என்கின்றன புராணங்கள். அதனால் மகாலட்சுமியின் வழிபாடு என்பது இக வாழ்வின் நலன்களை பெற்றுத் தருவதாக நம்பப்படுகிறது.

மகாலட்சுமி
மகாலட்சுமி

நெய் இட்டு தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றுவதும், கோபூஜை செய்வதும் மகாலட்சுமிக்கு உகந்த வழிபாடுகளாகும். திருமகள் வழிபாடு செல்வம் தரும் என்ற நம்பிக்கை நம்மிடம் வெகுகாலமாக நிலவுகிறது. லட்சுமி பூஜையோடு குபேர வழிபாடும் சேர்ந்து கொண்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும் என்பது நம் நம்பிக்கை. பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தந்ததாக மகாபாரதம் கூறும். திருமகளுக்கு அடுத்ததாக குபேரன் செல்வத்துக்கு உரியவராக வணங்கப்படுகிறார். இவர் வடக்கு திசைக்கு உரிய திக் பாலகன். உலகின் அனைத்து செல்வங்களுக்கும் எல்லாப் புதையங்களுக்கும் இவரே நிர்வாகி. பணம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்துப் பொருள்களுக்கும் இவர் உரியவர் என விஷ்ணு தர்மோத்தர புராணம் கூறும்.

திருமகளையும் குபேரனையும் ஒருசேரப் போற்றும் சிறந்த வழிபாடு ஸ்ரீலட்சுமி குபேர ஹோமம். ஸ்ரீலட்சுமி குபேரனுக்கு செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை. குபேர ஹோமங்கள் வீட்டில் செய்வதைவிடவும் லட்சுமி, குபேரர் வீற்றிருக்கும் ஆலயங்களில் செய்வது இன்னும் சிறப்பானது என்பர். சென்னையை அடுத்த அரக்கோணம் பருத்திபட்டூரில் எழும்பியுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த ஆலயமே உள்ளது. இங்கு ஸ்ரீமகாலட்சுமி 84 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகுபேரரும் அவர் மனைவி சித்ரலேகா அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார்கள். 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் செல்வ விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது.

குபேர வழிபாடு
குபேர வழிபாடு

திருமகளின் அருளையும் கடாட்சத்தையும் அள்ளித்தரும் இந்த ஆலயத்தில் சொர்ணாகர்ஷண பைரவரும், அஷ்ட லட்சுமியரும், சரஸ்வதி, விநாயகப்பெருமான், முருகப்பெருமான், நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்கு திருமகள் புஷ்பவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு சேவை சாதித்து வருகிறார். திருப்பதி, சோளிங்கர் செல்லும் புனித யாத்திரீகர்கள் எல்லோரும் வணங்கிச் செல்லும் இந்த ஆலயத்தில் லட்சுமி குபேரரை வணங்குவது மிகவும் சிறப்பு என்கிறார்கள் ஊர் மக்கள்.

உங்கள் நன்மைக்காக, உங்கள் குடும்ப நலனுக்காக சக்தி விகடனும் அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடத்த உள்ளோம். வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த மஹாஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்

தடைப்பட்டு நிகழாமல் இருக்கும் சகல சுபகாரியங்களும் இனிதாக நிறைவேறவும், உங்களைத் துன்பப்படுத்தும் அத்தனை தொல்லைகளும் நீங்கவும், வாட்டும் பிணிகள், தோஷப் பிரச்னைகள், எதிரிகளின் தொல்லைகள், அடிக்கடி நிகழும் பண விரயங்கள், காரணமற்ற பயங்கள், சொல் பேச்சு கேளாத உறவுகள் இவை யாவும் மாறி சுபங்கள் சூழவும் இந்த ஹோமம் பெருமளவு பயன்படும் என்பது உறுதி. எனவே இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமத்தில் நீங்களும் கலந்து கொண்டு சகலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபட்டு ஐஸ்வரியங்களைப் பெற அன்போடு அழைக்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.