Published:Updated:

இழந்த சொத்து, சொந்தங்களை மீட்டுத் தரும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீமகா வாராஹி ஹோமம்: இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்திர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அன்னை சக்தியைக் கொண்டாடும் இந்த நவராத்திரி வைபவத்தில் ஸ்ரீமகா வாராஹியை வழிபட்டு ஸ்ரீமகா வாராஹி ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் இழந்துபோன சொத்து, சொந்தங்களை எல்லாம் மீட்டுத் தருவாள் என்கின்றன சாஸ்திரங்கள்.

மனக்கசப்பால் பிரிந்துபோன உறவுகள், வெளிநாட்டில் தங்கிப்போன உறவுகள் என பல காரணங்களால் சில உறவுகள் உங்களை விட்டு பிரிந்து போய் இருக்கலாம். அந்த உறவுகள் உங்களைச் சேரவும், நியாயமாக உங்களுக்கு வர வேண்டிய சொத்துக்கள், உடைமைகள் உங்களை வந்து சேரவும் இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமம் மிகவும் அவசியம் என்கின்றன சாஸ்திர நூல்கள்.

மகா வாராஹி
மகா வாராஹி

இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்துக் கொள்ளும் அன்பர்களுக்கு வந்து சேரும் புனிதமிக்க ஹோம பஸ்மத்தை தொடர்ந்து நெற்றியில் இட்டு வந்தால் நிச்சயம் உங்களை வந்து சேர வேண்டியவை வந்து சேரும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

மேலும் நஷ்டத்துக்கு மேல் நஷ்டம், மாற்றி மாற்றி வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை பாதிப்பு அடைவது, எப்போதும் சண்டை-சச்சரவு; எல்லா நேரமும் மனக்குழப்பம், மனதில் அச்சம் என நிம்மதியே இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஹோமம் மிகச் சிறந்த பரிகாரம் எனலாம்.

ஸ்ரீவாராஹி
ஸ்ரீவாராஹி

வாராஹி அம்மனுக்கு 'சதுரங்க சேனா நாயகி' என்ற திருநாமமும் உண்டு. சக்தியின் நால்வகைப் படைகளுக்கும் சேனாதிபதியாகத் திகழ்பவள் வாராஹி. இவளை, 'தண்டினி' என்றும் வணங்குவர். சிறந்த வரப்பிரசாதியான இந்த தேவியை நவராத்திரி நாள்களில் வேண்டிக் கொள்வது நலம் பயக்கும். எண்ணத்தைக் காரியமாக மாற்றும் மகாசக்தியான ஸ்ரீவாராஹி, தீமைகளை ஒழித்து தன்னை நம்பியவர்களைக் காப்பவள்.

சோம்பல் எனும் மகிஷனை அழிக்க உதவியவள் வாராஹி என்பதால் இவளை வணங்க சுறுசுறுப்பும் வேகமும் அதிகரித்து காரியங்கள் விரைவாக நடைபெறும். எனவே இந்த அற்புதமான மகாஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரார்த்தித்து, காரிய ஸித்தி பெறுவது இந்தக் காலகட்டத்தில் மிக அவசியம் எனலாம். நீண்ட நாள்களாக தள்ளிப்போன உங்கள் விருப்பங்கள் யாவற்றையும் பூர்த்தி செய்ய வல்லது இந்த ஹோமம்.

அந்த வகையில், ஸ்ரீவாராஹிக்கு உகந்த இந்த ஸ்ரீமகா வாராஹி ஹோமத்தை நவராத்திரி வைபவத்தை முன்னிட்டு விஜயதசமி நன்னாளில் உலக நன்மைக்காகவும் வாசகர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் நலன் வேண்டியும் சக்தி விகடன் சார்பில் நடத்தவுள்ளோம்.

வாராஹி ஹோமம்
வாராஹி ஹோமம்

அதன்படி சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சக்தி விகடன் இணைந்து வாசகர்களுக்காக ஸ்ரீமகா வாராஹி ஹோமம் நடத்தவுள்ளோம். இது வரும் 15-10-21 அன்று விஜயதசமி நன்னாளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் ஆயுள் விருத்தியும் ஆரோக்கிய வாழ்வும் கிடைக்கும். சோம்பல் நீங்கும், விரும்பியதை வசமாகும், தொலைந்த உறவுகளும் சொத்தும் கிடைக்கும், சுப காரியத் தடைகள் விலகும், தோஷங்கள் நீங்கும், மேலும் வாராஹியின் பரிபூரண ஆசி பெற்று சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சி கோயில்கள் - 15: மதுரை கள்ளழகர், கூடலழகர் தெரியும்... அன்பில் அழகரின் சிறப்புகள் தெரியுமா?!
இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்திர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன. இதனால் இந்த வைபவத்தில் இணைந்து சங்கல்பம் செய்து கொள்வது விசேஷம் எனலாம்.
சங்கல்பம்
சங்கல்பம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு