சத்ய யுக சிருஷ்டி கோயிலில் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி என்ற பெயரில் 18 கரங்களுடன் வீற்றிருக்கும் திருமகள் 16 வகை செல்வங்களையும், அபயமும் ஆற்றலும் தரக்கூடியவளாக எழுந்தருளி இருக்கிறாள்.

பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை என்கிறது திருக்குறள். செல்வம் இருந்தாலே பதவி, புகழ், துணிவு என அனைத்தும் கிட்டிவிடும். அந்த செல்வவளத்தை அருள்பவள் ஸ்ரீமகாலட்சுமி. பாற்கடலில் உதித்த பொற்கொடியாம், அவள் கடைக்கண் பார்வை பெற்றவர்க்கெதுவும் எளிதாம்! நிலைத்த செல்வமும் அருள்வாள்! நீங்காதப் புகழும் அருள்வாள். திருமகள் துணையிருக்க சகலமும் சாத்தியமாகும் என்கின்றன புராணங்கள்.
சகலமும் துறந்த ஞானியருக்கும் திருமகள் கேட்டதை அளித்திருக்கிறாள். அகத்தியருக்கு அருள் செய்தவள் அலைமகள்! வித்யாரண்யருக்கு மலை அளவு செல்வமும், ஆதிசங்கரருக்கு பொன் மழையும் பொழிந்தவள் திருமகள். அதனாலேயே கனகதாரா ஸ்தோத்திரத்தை ஜகத்குருவும் மனமகிழ்ந்து அருளினார். அதில்
'அரவணையில் பள்ளிகொண்ட அரங்கனின் நாயகியே!
முரன் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் விரும்பிட
நீலோற்பவ மலரின் விழிமுகத்தாள் நின்
நீலவிழிப் பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்!' என்று வேண்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணத்துக்காக தங்கம் சேரவேண்டும், குழந்தைகளுக்கு வீடு, மனை என்று சேர்க்க வேண்டும், கடன் இல்லாமல் வாழ வேண்டும், அடகு வைத்த நகைகளை மீட்க வேண்டும், அடுத்தவருக்கு உதவ கொஞ்சம் பணம் வேண்டும், வருங்காலத்தில் நிம்மதியாக இருக்க சேமிப்பு என்றெல்லாம் நியாயமாக ஆசைப்படுபவர்களுக்கு அதை நிறைவேற்றித் தருவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறாள் திருமகள்.
திருமகளைத் திருப்திப்படுத்த எளிய வழிகள் பல உண்டு. நாம் தான் அதையெல்லாம் மறந்துவிட்டோம். மகாலட்சுமியின் அருளைப்பெற ஸ்ரீமஹாலட்சுமி ஹோமம் மிகச் சிறந்தது என்பார்கள் பெரியோர்கள். இந்த மகாலட்சுமி அநேக தலங்களில் வித்தியாசமாக வீற்றிருப்பதைக் கண்டிருப்பீர்கள். வேறெங்கும் இல்லாத வகையில் முப்பெருந்தேவியரின் அம்சமாய் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமியாக வீற்றிருக்கும் திருத்தலம் ஒன்று மதுரை திருமங்கலத்தில் உள்ளது.

மதுரை திருமங்கலத்தில், மதுரை - விருதுநகர் ரோடு, ராயபாளையம் செல்லும் வழியில் உள்ளது சத்ய யுக சிருஷ்டி கோயில். இது ஒரு பிரமாண்டமான கோயில். இதனால் பூரணமான ஆன்மிக கோயில் என்று போற்றப்படுகிறது. முக்தி நிலையம் எனப்படும் இங்கு, எல்லா தெய்வங்களின் சந்நிதிகளும் உள்ளன. 108 சந்நிதிகளில் 600க்கும் மேற்பட்ட தெய்வங்களின் மூர்த்தங்கள் உள்ளன. 12 ஜோதிர்லிங்கங்கள், முப்பெருந்தேவியர், 16 கணபதி, அஷ்ட வசுக்கள், அறுபடை முருகன், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், ரிஷிகள், குண்டலினி சக்திகள், அஷ்ட லட்சுமியர், தச அவதாரங்கள் என இங்கில்லாத தெய்வ வடிவங்களே இல்லை எனலாம்.
தெய்வ சந்நிதிகள் மட்டுமின்றி தியான கூடங்கள், நவராஜ மண்டலம் எனும் அபூர்வ ஆற்றல் மையம் என இந்த ஆலயமே பரந்து விரிந்து ஆன்மிக சேவை மையமாக, முக்தி பெறும் ஆற்றல் மையமாக செயல்பட்டு வருகின்றது. இந்த அற்புத பீடத்தில்தான் ஸ்ரீஅஷ்ட தச புஜ ஆதிமகாலட்சுமி எனும் மகாதேவி வீற்றிருக்கிறாள். இவளை பௌர்ணமியில் வழிபட்டால் சகல வளங்களையும் தருவாள் என்கின்றன சாஸ்திரங்கள். 18 கரங்களுடன் வீற்றிருக்கும் இந்த திருமகள் 16 வகை செல்வங்களையும், அபயமும் ஆற்றலும் தரக்கூடியவளாக எழுந்தருளி இருக்கிறாள்.
15-5-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று (விஷ்ணுபதி புண்ய காலம், பௌர்ணமி, சுவாதி நட்சத்திரம்) காலை 10 முதல் 11.30 மணி வரை நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமகாலட்சுமி ஹோமம் நடத்த இருக்கிறோம். இந்த ஹோமத்தை சத்ய யுக சிருஷ்டி கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளது. அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். இந்த ஸ்ரீமகாலட்சுமி ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நித்ய சௌபாக்கிய, ருண நிவாரண வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.

அபூர்வமான சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் சந்தோஷம், மன நிம்மதி பெருகும். சுற்றத்தார் நம்பிக்கை கூடும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். அனைத்திலும் வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். தனம், தான்யம், காரிய ஸித்தி, மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.
வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள், இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404