Published:Updated:

ஆறு மனமே ஆறு

மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
மாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

Published:Updated:
மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
மாதா அமிர்தானந்தமயி

`இனி பிறவி வேண்டாம்; முக்தி வேண்டும் எனப் பலரும் வேண்டிக்கொள்வதை அறிவோம். முக்தி என்றால் என்ன? அம்மா வின் ஆசை என்ன?’ - இப்படி அன்பர்கள் சிலர் என்னிடம் கேட்டது உண்டு.

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயி


என்னைப் பொறுத்தவரையிலும் இது வேடிக்கையான கேள்வி என்றே சொல்வேன். மறுபிறவி என்பது கடவுளின் சித்தம் மட்டுமல்ல, தனிமனித சித்தாந்தம். முக்தி என்பதைப் புரிந்துக்கொள்வது சாதாரண மனிதனுக்கு மிகவும் கடினம். மகான்கள், ஞானிகள், ரிஷிகள் ஆகியோரே `முக்தி வேண்டும்’ எனச் சங்கல்பித்துக் கொள் வார்கள் எனப் படித்திருக்கிறோம்.

அது இருக்கட்டும்... நம்மைப் பொறுத்த வரையிலும் இந்தப் பிறவிக்கு முன்பு என்னவாக இருந்தோம் என்பது நமக்குத் தெரியாது. அதேபோல், இந்தக் கூட்டைவிட்டு ஆத்ம விடுதலை அடைந்தபிறகு என்ன நடக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. இந்தப் பிறவியில் - வாழும் காலத்தில் நல்லன செய்தோமா அல்லது பலரும் வருந்தும் அளவுக்கு நடந்துகொண்டோமா என ஆத்மவிசாரம் செய்தாலே, நமக்கான விடை கிடைத்துவிடும்.

அன்பர்கள் கேட்டார்களே எனது ஆசை குறித்து... அது என்ன தெரியுமா? என்னால் மக்களுக்கு உதவியாக இருக்க முடியும் என்றால் எத்தனை பிறவிகள் வேண்டுமானாலும் எடுக்க சித்தமாக இருக்கிறேன். அதுவே என் பிரார்த்தனையும் ஆகும்! முக்தி - மறுபிறவி கேள்வியைப் போன்றே ஆதிசங்கரர், அவரின் அத்வைதம், சனாதன தர்மம் குறித்தும் அன்பர்கள் கேட்பது உண்டு. அதுபற்றியும் நாம் அறிவது அவசியம்.

ஆதிசங்கரரின் அவதாரம் 2500 ஆண்டுகளுக்கு முன்பானது. இதற்கான கிரந்த ஆதாரங்கள் பல உண்டு. அவரின் காலத்தில் பெளத்தம் செழித் திருந்தது என்றும் குறிப்புகள் உண்டு. சங்கரர் பல தர்க்கங்களில் ஈடுபடடு வேத-வேதாந்தம், வழிபாடு, சாஸ்திரம் ஆகியவற்றை நிலை நிறுத்தியது, சனாதன தர்மத்தைப் பாரதம் முழுவதிலும் பரப்பியது குறித்துமான பல தகவல்கள் உண்டு.

குமரில பட்டரின் சீடரான மந்தனமிஸ்ரரை ஆதிசங்கரர் தர்க்கத்தில் வென்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது. பாகவதம், உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்களுக்கு பாஷ்யங்களும் (விளக்கவுரை) இயற்றியுள்ளார் ஆதிசங்கரர். தேசத்தின் நான்கு திசைகளிலுமாக திக்விஜயம் செய்து மடங்களை நிறுவியவர். மட்டுமன்றி, பழங்கால சந்நியாசப் பரம்பரை சூட்சுமங்களைத் தசனானி மரபுகள் என்று அவர் மறுசீரமைத்தது சிறப்பான விஷயம்.

அவ்வகையில் மாதாஅமிர்தானந்தமயி மடம், யஜுர் வேத - பூரி மரபில், அஹம் பிரம்மாஸ்மி எனும் மஹா வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. ஆதிசங்கரரின் அத்வைதம் குறித்துப் பேசவேண்டும் என்றால் நாள்கள் போதாது. அம்மா எப்போதும் சொல்வதுதான்... இறைவன் எங்கோ ஒரு காட்டிலோ அல்லது மலையின் மீதோ இல்லை; நமக்குள்தான் இருக்கிறார் எனும் தத்துவத்தை உணர்த்துவது அத்வைதம். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வெவ்வேறல்ல; இரண்டுமே ஒன்றுதான் என்றும் பிரகடனப்படுத்தும்.

ஆக, பிரம்மத்திலிருந்து ஆத்மா வேறுபடாத - இரண்டற்ற நிலை எனும் அத்வைத தத்து வத்தை உலகெங்கும் பரப்பியவர் ஆதிசங்கரர்.

இனி சனாதன தர்மம் என்பது குறித்து அறிவோம்.

மனிதன், இயற்கை, கடவுள் இந்த மூன்றின் முழுமையான தொடர்பை வெளிப்படுத்துவதே சனாதன தர்மம். இது மதம் அல்ல; ஒரு கொள்கை - கோட்பாடு கொண்ட வாழ்வியல் என்றே சொல்ல வேண்டும். நற்குணம், அனைத்து ஜீவராசிகளின் நல்வாழ்வு ஆகியவற்றை இலக்காகக் கொண்ட, வழிவழியாக போதிக்கப்பட்ட வாழ்வியல் முறையே சனாதன தர்மம். தர்மார்த்த காம மோக்ஷம் என்பனவெல்லாம் இதனுள் அடக்கம். பஞ்சபூதங்களை அடிப் படையாகக் கொண்ட வாழ்வியலையும் நமக்குப் போதிக்கிறது சனாதனம். பிற்காலத்தில் இதை மதம் என்று அழைத்தனர்.

நாம் வேற்று மதத்தின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கையை மதிக்க வேண்டியது மிக மிக அவசியம். அதேநேரம், சனதான தர்மம் என்பது குறிப்பிட்ட பிரிவினர் அல்லது தனிப்பட்டவர்களுக்காக வரையறுக்கப்பட்டது அல்ல என்பதை உலகுக்கு உணர்த்தவேண்டும். இது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் தேவையான உண்மையான அகநிலை அனுபவம் என்றே நாம் வலியுறுத்த வேண்டும்.

அடுத்து ஷண்மதங்கள். இவை இந்து மதத்தில் வெகுவாகப் பரவி யிருந்த வழிபாட்டு முறைகள். இவ்வாறான அனைத்துக் கிளைகளையும் சீரமைத்துச் சிவபெருமானைக் குறிக்கும் சைவம், விஷ்ணுவைக் குறிக்கும் வைணவம், தேவியைக் குறிக்கும் சாக்தம், கணபதியைக் குறிக்கும் காணாபத்யம், முருகப்பெருமானைக் குறிக்கும் கெளமாரம், சூரியனைக் குறிக்கும் செளரம் எனும் ஆறு வழிபாட்டு முறைகள் அல்லது ஆறு சமயங்களாகத் தொகுத்தளித்துள்ளார் ஆதிசங்கரர்!

-மலரும்...

மாதா அமிர்தானந்தமயி
மாதா அமிர்தானந்தமயி

அம்மாவின் பதில்கள்

? துன்பம் - வந்தாலும் சிரித்து வாழவேண்டும். முடியுமா?

முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். துன்பம் என்பதற்கு `அந்தப் பொழுதில் நாம் மகிழ்ச்சியாக இல்லாத நிலை’ என்று பொருள். மகிழ்ச்சி, மன நிறைவு, மற்றவருக்கு உதவுவது ஆகியவை பற்றி நிறைய பேசிவிட்டோம். சாதகமான சூழலா அல்லது பாதகமான சூழலா என்றெல்லாம் விவாதித்தால் முடிவே இருக்காது.

ஏனெனில் அவை அனைத்தும் ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை, செயல் ஆகியவற்றைப் பொருத்தே அமையும். இன்று நன்றாகப் பேசும் ஒருவன், நாளை நம் மீது சேற்றை வாரி இரைப்பான். இரண்டையும் சமநிலையில் ஏற்றுச் செயல்படுவது நம்முடைய முழுமையான இயல்பாக இருக்கவேண்டும். அப்படிப் பழகிக் கொண்டால், துன்பம் வந்தாலும் புன்னகைத்து ஏற்றுக் கொள்வதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது?