Published:Updated:

இனிதே நடைபெற்றது ஸ்ரீராஜகுபேர மஹாஹோமம்!

குபேர மஹாஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர மஹாஹோமம்!

குபேர மஹாஹோமம்!

இனிதே நடைபெற்றது ஸ்ரீராஜகுபேர மஹாஹோமம்!

குபேர மஹாஹோமம்!

Published:Updated:
குபேர மஹாஹோமம்!
பிரீமியம் ஸ்டோரி
குபேர மஹாஹோமம்!

காஞ்சிபுரம் - பெங்களூரு சாலையில் வெள்ளைகேட் அருகே உள்ள குபேரபட்டினத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீராஜ குபேரர் சித்தர் பீடம். இந்த பீடத்தால் அமைக்கப்பட்டதே ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி உடனமர் ஸ்ரீராஜ குபேரர் ஆலயம்.

குபேரர் ஆலயம்
குபேரர் ஆலயம்


இங்கு, கடந்த 14-ம் தேதி சுபகிருது தமிழ்ப் புத்தாண்டை ஒட்டியும் குருப்பெயர்ச்சியை முன்னிட்டும் சகலருக்கும் இறையருளும் குருவருளும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டி சக்தி விகடன் சார்பில் ராஜகுபேர மஹா ஹோமம் நடைபெற்றது.

வைத்தியநாதசுவாமி அருளும் இத்தலம் தன விருத்தியைத் தந்து, கடன் நிவர்த்தியை அருளும் தலமாக உள்ளது. செல்வங்களுக்கு அதிபதியான ராஜகுபேரர் இங்கு பிரமாண்ட திருமேனியராக அருள்கிறார். அவருக்கு முன்பாகத் திருமகளும், கருவறைக்கு முன்பு இருபுறமும் சங்க நிதியும் பதுமநிதியும் வீற்றிருக் கிறார்கள்.

ராஜகுபேர சித்தர்
ராஜகுபேர சித்தர்
ராஜ குபேர யாகம்
ராஜ குபேர யாகம்
ராஜ குபேர யாகம்
ராஜ குபேர யாகம்
ராஜகுபேர மகாஹோமம்
ராஜகுபேர மகாஹோமம்
ராஜகுபேர மகா ஹோமம்
ராஜகுபேர மகா ஹோமம்


குபேரருக்கு செல்வம் அருளிவர் காசி வைத்தியநாத சுவாமி. அவரும் இத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகும். ஆக, செல்வ வளம் சேர அனைவரும் வழிபட வேண்டிய தலம் இது.இங்கே அருளும் மூர்த்திகள் அனைவரையும் ஒருமுறை தரிசித்து வழிபட்டாலே கடன் பிரச்னைகள் நீங்கி செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்புகள் உடைய இந்தத் தலத்தில், குருப்பெயர்ச்சி நாளான 14.4.22 அன்று செல்வச்செழிப்பை அருளும். ராஜ குபேர யாகம் நடைபெற்றது. குபேரருக்கு உரிய வியாழக்கிழமையில் இந்த வைபவம் நடைபெற்றது மிகவும் சிறப்புக்குரியது. மங்கல முழக்கங்களும் கயிலாய வாத்தியங்களும் முழங்க ராஜகுபேர மகாஹோமம் இனிதே தொடங்கியது.

காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த மகா ஆராதனை மதியம் 12 மணி வரை விஸ்தாரமாக நடைபெற்றது. வேத சிரோமணிகள் கலந்துகொள்ள 108 விதமான அபூர்வ மூலிகைகளைக் கொண்டு நடைபெற்ற இந்த ஹோமத்தில், முன்பதிவு செய்து கொண்ட சக்தி விகடன் வாசகர்களின் பெயர், நட்சத்திரம் சொல்லி சிறப்பு சங்கல்பமும் பிரார்த்தனையும் மேற்கொள்ளப்பட்டன.

ராஜகுபேர சித்தர், வாசகர்களின் நல்வாழ்வுக்காகச் சிறப்பு பிரார்த்தனைகளைச் செய்து வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் பக்தர்களுக்கு அன்னதானம் என சீரும் சிறப்புமாக நடந்தேறியது ஹோம வழிபாட்டு வைபவம்!

வாசகர்கள் யாவரும் கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி, தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, அரசியல் செல்வாக்கு, அரசபோகம், வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் பெற்று வாழ சக்திவிகடன் சார்பில் நாமும் வேண்டுதல் செய்து கொண்டோம். இறையருளால் வாசகர்கள் பிரார்த்தனைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism