Published:Updated:

ஶ்ரீராமன் நிகழ்த்திய லீலை

ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்

ஶ்ரீராமன்

ஶ்ரீராமன் நிகழ்த்திய லீலை

ஶ்ரீராமன்

Published:Updated:
ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்

கபீர்தாசர் ஸ்ரீராமன் மீது அளவற்ற பக்தி கொண்டவர். பொருளாசையைத் துறந்தவர். இவர்மீது பொறாமை கொண்ட சிலர், கபீர்தாசருக்குக் கெட்ட பெயர் விளைய வேண்டும் என்று எண்ணினர்!

அப்போது ராமநவமி உற்சவம் நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாக கபீர்தாசர் எளிமையாக அந்த விழாவைக் கொண் டாடுவார். இருப்பதைக் கொண்டு இறையருள் தேடுவார். கபீரின் எதிரிகள் ஒரு திட்டம் தீட்டினர். கபீர்தாசர் எழுதுவதுபோல் ஒரு மடல் எழுதினர்.

அதில், `வரும் ராமநவமியை மிகவும் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறேன். எனவே பக்தர்கள் திரளாக வந்திருந்து கலந்துகொள்ள வேண்டு கிறேன். உணவு உறைவிடம் இலவசம்' என்று எழுதி, அதை மதுரா, ஹரித்துவார் என்று புனிதத் தலங்கள் அனைத்திலும் பரப்பினர்.

பக்தர்களும் இதை உண்மை என்று நம்பிக் காசியை நோக்கிக் குவியத்தொடங்கினர். இதையறிந்த கபீர்தாசர் வருந்தினார். வரும் பக்தர்கள் தேவையில் லாமல் தொல்லைக்குள்ளாவார்களே என்று கலங்கினார். கபீரின் எண்ணத்தை அறிந்த ராம பிரான் ஒரு லீலை செய்தார்.

ராமநவமி
ராமநவமி


அந்த நகரின் செல்வந்தர்கள் அனைவரின் மனத் திலும் கபீர் குறித்த சிந்தனையை ஒரே நேரத்தில் தோன்றச் செய்தார். அவர்கள் கபீரைத் தேடி வந்தனர். `இவ்வளவு பெரிய ஆன்மிகச் செயலைச் செய்ய இருக் கிறீர்களே... அதில் எங்களுக்கும் இடம் கொடுங்கள்' என்று கேட்டு ஒவ்வொருவரும் ஒரு பணியைக் கேட்டு வாங்கிச் செலவு செய்ய ஆரம்பித்தனர்.

ராமநவமி உற்சவம் தொடங்கியது. நம்பி வந்த பக்தர்கள் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தன. ஒருவர் கூட எதுவும் இல்லை என்று திரும்பிச் செல்லவில்லை. அந்த அளவுக்கு நிறைவாக விழா நடந்துமுடிந்தது. இதை எல்லாம் கண்ட கபீர்தாசர் ஸ்ரீராமனின் லீலை களை எண்ணி வியந்தார்.

அதேவேளை அவரின் எதிரிகள் அவரை நாடிவந்து மன்னிப்புக் கோரினர். அவரின் சீடர்களாகவும் மாறினர். இறைவன் நம்மோடு இருந்தால் யார் நமக்கு எதிராக இருக்க முடியும் என்னும் வாக்கியம் சத்திய மானது என்பதற்கு கபீர்தாசரின் இந்த வாழ்க்கை நிகழ்வு ஒரு சாட்சியாகும்.