Published:Updated:

ஶ்ரீராம தரிசனம்

பட்டாபிஷேக தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
பட்டாபிஷேக தரிசனம்

ஓவியம்: ம.செ., பத்மவாசன்

ஶ்ரீராம தரிசனம்

ஓவியம்: ம.செ., பத்மவாசன்

Published:Updated:
பட்டாபிஷேக தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
பட்டாபிஷேக தரிசனம்

பட்டாபிஷேக தரிசனம்

ராமபிரான் வலப்புறத்தில் சீதா தேவியுடன் ஸ்வாமி அருள்வதை திருக்கல்யாண கோலம் என்பார்கள். பிராட்டியார், ஸ்வாமிக்கு இடப்புறத்தில் காட்சி தந்தால்... அது பட்டாபிஷேகத் திருக்கோலம் ஆகும். புண்ணிய தலங்களில் பட்டாபிஷேக கோலத்தில் அருளும் ஸ்ரீராமபிரானை தரிசித்தால் அரசபோகம் வாய்க்கும் என்பது நம்பிக்கை.

லவ-குசா பாத தரிசனம்
லவ-குசா பாத தரிசனம்


ஸ்ரீராமன் தர்ப்பசயனத்தில் அருளும் திருப்புல்லாணி தலத்தில், பட்டாபிஷேகக் கோலத்தில் தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீபட்டாபி ராமனை தரிசிக்கலாம்.

இலங்கை சென்று ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டு திரும்பும் வழியில், ஸ்ரீராமன் இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீஆதிஜெகந்நாதரை பூஜித்ததாக தலபுராணம் சொல்கிறது. இந்தத் தலத்துக்கு வந்து இவரைத் தரிசித்து வழிபட்டால் தொழிலில் மேன்மை, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

செங்கல்பட்டில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பொன்விளைந்த களத்தூர். பெருமாள், வெள்ளைப் பரிமுகனாக வந்து ஸ்வாமி தேசிகனுக்கு அருள் செய்த தலம் இது. இங்கு இரண்டு கோயில்கள். ஒன்று லட்சுமிநரசிம்மர் ஆலயம். மற்றொன்று ஸ்ரீராமர் ஆலயம். இந்தக் கோயிலில் மூன்று கோலங்களில் ஸ்ரீராமரை தரிசிக்கலாம்.

மூலவர் ஸ்ரீபட்டாபிராமர் சீதாதேவியை மடியில் அமர்த்தியபடி பட்டாபிஷேகக் கோலத்தில் அருள்கிறார். உற்ஸவர் ஸ்ரீகோதண்டராமர் நின்ற கோலத்தில் அருள்கிறார். சயனக் கோலத்தில் அருள்வது ஸ்ரீதர்ப்பசயன ராமர்.

லவ-குசா பாத தரிசனம்!

சென்னை- கோயம்பேடு அருகில் லவனும் குசனும் வழிபட்ட லவகுசபுரீஸ்வரர் ஆலயத்தை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். ஆந்திர மாநிலத்திலும் சுருட்டப்பள்ளியில் லவ-குசனின் பாதச் சுவடுகள் பூஜிக்கப்படுகின்றன!

சுருட்டப்பள்ளி சிவதரிசனத்துக்கு பேர்பெற்ற தலம். ஈசன் பள்ளி கொண்ட அபூர்வ கோலத்தில் அருளும் தலம் இது. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தைப் பருகி அண்டபகிரண்டத்தையும் காத்தருளினார் சிவபிரான். விஷம் உண்ட சோர்வு நீங்க சிவபெருமான் பள்ளிகொண்ட தலம் சுருட்டப் பள்ளி என்கின்றன புராணங்கள். ‘நஞ்சுண்டேஸ்வரர்’ என்று பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர். மேலும், வால்மீகி முனிவர் வழிபட்ட ‘வால்மீகீஸ்வரர்’ சந்நிதியும் ராமபிரான் பூஜித்த ராமநாதேஸ்வரர் சந்நிதியும் இங்குள்ளன. எதிரில் ஸ்ரீராமன், சீதை, லட்சுமணன், பரத-சத்ருக்னன் ஆகியோரையும் தரிசிக்கலாம். இந்தச் சந்நிதிக்கு முன்புறம்தான் லவகுசர் ‘பாதக் கல்’ உள்ளது.

கர்ப்பவதியாக இருந்த சீதாபிராட்டி, ஸ்ரீராமரைப் பிரிந்துவால்மீகி ஆசிரமத்தில் தங்கியிருந்த வேளையிலதான் லவனும் குசனும் பிறந்தனர். ஆசிரமத்தில் வளர்ந்த லவ-குசா சகோதரர்கள் ஓடியாடி விளையாடிய போது, பதிந்த பாதத் தடங்களில் ஒரு பகுதிதான் இது என்கிறார்கள். ஆதியில் இந்தக் கல் வழிபாட்டில் இல்லை. காஞ்சி முனிவர் ஒருமுறை இந்தக் கோயிலில் லவ-குசனின் ஸ்பரிசம் இருக்கிறது என்று அருளினாராம். அதன்பின்னரே, கோயில் வளாகத்தில் இருந்த இந்தக் கல் கண்டெடுக்கப்பட்டு, ராமநாதேஸரர் சந்நிதிக்கு முன் வைக்கப்பட்டதாம்.

பட்டாபிஷேக தரிசனம்
பட்டாபிஷேக தரிசனம்


தினமும் இந்த பாதங்களுக்கு ஒரு கால பூஜை உண்டு. திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தைப் பாக்கியம் இல்லாதோர், `லவ-குசனைப் போன்று வீரமான, அறிவான பிள்ளைகள் பிறக்க வேண்டும்’ என்று பிரார்த்தித்து இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்!

யோக ராமர் தரிசனம்!

ஜகதாம்பிகையாம் அம்பாள் ரேணுகாதேவியாகக் கோயில் கொண்டிருக்கும் தலம் படைவீடு எனப்படும் படவேடு. இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீயோக ராமர் திருக்கோயில்.

பட்டாபிஷேகத்துக்குப் பிறகு, ஸ்ரீராம ராஜ்ஜியம் உலகம் உவக்கத் திகழ்ந்த காலம். அப்போது பெருங்கடலில் மிகப் பிரமாண்டமாக- ஹேம சிருங்க பட்டணம் எனும் நகரை நிர்மாணித்து ஆண்டு வந்தான் சதகண்ட ராவணன் எனும் அசுரன். எல்லோருக்கும் துன்பம் விளைவித்த இவனை அழிக்க ராம சேனை புறப்பட்டது. சீதாதேவியும் உடன் சென்றாளாம்.

யோக ராமர்
யோக ராமர்
யோக ராமர்
யோக ராமர்


சமுத்திரக் கரையை அடைந்தனர். அனுமன் விஸ்வரூபம் எடுத்து, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, தன் தேகத்தையே பாலம் ஆக்கினாராம். அனைவரும் கடல் கடந்து அசுரனின் நகரை அடைந்தனர். ஆனால், சதமுக ராவணனை வெல்வது அத்தனை எளிதாக அமையவில்லை.

கண்மூடி தியானித்தார் சீதாபிராட்டி. அவளுக்கு ஓர் உண்மை புலப் பட்டது. ஆஞ்சநேயனை அழைத்தாள். ‘`அனுமந்தா, இந்த அசுரன் ரேணுகாதேவியின் தீவிர பக்தன். அவள் கோயில் கொண்டிருக்கும் குண்டலீபுரத்தில், ஒரு தடாகத்தில் மலர்ந்திருக்கும் கமலத்தில்தான் இவனின் ஜீவன் பாதுகாக்கப்படுகிறது. அந்த அன்னையின் அனுக்கிரகத்தால் ஐந்து வண்டுகள் கமலத்தைக் காவல் காக்கின்றன. நீ ஒரு நாழிகைப் பொழுதுக்குள் குண்டலீபுரம் சென்று வண்டுகளை வதைத்து, அந்த ஜீவனைப் பறித்து வா!’’ என்று கட்டளையிட்டாள்.

அனுமனும் குண்டலீபுரம் சென்றார். அவரைத் தடுத் தாள் அம்பிகை ரேணுகாதேவி. அனுமன் ஏற்கவில்லை. அவரை நூறு கற்களாகும்படி சபித்தாள் அன்னை. பதிலுக்கு அனுமனும், ‘மண்மாரி பெய்து குண்டலீ புரம் அழியக்கடவது’ என்று சாபம் தந்தார்.

இதையறிந்த ஸ்ரீராமன் குண்டலீபுரத்துக்கு எழுந்த ருளினார். அசுரவதம் நிகழ வேண்டியதன் அவசியத்தை அம்பிகையிடம் எடுத்துரைத்தார். தேவியும் சினம் தணிந்தாள். அனுமனுக்கு அவள் தந்த சாபம் மாற்றி அமைக்கப்பட்டது. ‘`நூறு தலைகளுடன் இவன் வந்ததால், இவனின் அம்சம் நூறு சிலைகளாக மாறட்டும். இந்த குண்டலீபுரத்தின் எண் திசைகளிலும் இருந்து இவனே காவல் காக்கட்டும்!’’ என்று அருளினாள். அதன் பிறகு, அம்பிகையின் அனுக்கிரகத்தால் தடாகத்தில் இருந்த வண்டுகள் அழிக்கப்பட்டன. அசுரனும் வீழ்த்தப்பட்டான்.

போர் முடிந்த பிறகு, சீதாதேவியுடனும் தம்பி லட்சுமணன் மற்றும் அனுமனுடனும் குண்டலீபுரம் எனும் இந்தத் தலத்துக்கு (படவேடு) வந்து கோயில்கொண்டாராம் ஸ்ரீராமன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism