திருக்கதைகள்
Published:Updated:

ஆனந்தம் தரும் ராம புஜங்க அஷ்டகம்!

ராம புஜங்க அஷ்டகம்
பிரீமியம் ஸ்டோரி
News
ராம புஜங்க அஷ்டகம்

ராம புஜங்க அஷ்டகம்

‘ராமன் என்றால் ஆனந்தம்!’

`ராமன் என்றாலே, ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம்’ என்பது காஞ்சி மகாபெரியவரின் அமுத மொழிகள். ஜகம் புகழும் ராமனின் மகிமைகளை மேலும் பலவாறு புகழ்ந்துள்ளார் காஞ்சிமுனிவர்.

ராமன் என்றால் ஆனந்தம்
ராமன் என்றால் ஆனந்தம்

`எத்தனைவிதமான துக்கங்கள் வந்தாலும், அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்த மாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ராமன்தான். சுக-துக்கங்களில் சலனம் அடையாமல், தான் ஆனந்தமாக இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. அப்படி, ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து வாழ்ந்து காட்டுவதற்காக நாராயணனே ராமனாக வந்தார்.

சகல வேதங்களின் பயனாக அறியப்பட வேண்டிய பரமபுருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக்கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக்கொண்டு வாழ்ந்தார்.

ராமன் இன்றும், ‘ராமோ விக்ரஹவான் தர்ம:’ என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான்.

சாக்ஷாத் ராமனை லட்சியமாகக் கொண்டு ‘ராம ராம’ என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்கு ஸித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தைவிட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்’ என்கிறார் மகாபெரியவர்.

அவ்வகையில் நாமும் ராமனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழ, மிக அற்புதமான துதிப்பாடல் இங்கே தரப்பட்டுள்ளது.

வியாசரால் அருளப்பட்ட `ராம புஜங்காஷ் டகம்’ எனும் இந்தத் துதிப்பாடலைப் படிப்பதால் வித்யை, ஐஸ்வர்யம், சகல செளபாக்கியம், புத்ர லாபம், தீர்க்காயுள் ஆகிய அனைத்தும் கிடைக்கும். ஜாதகத்தில் புதன், சனி, ராகு, கேது, சந்திரன், சுக்கிரன் தோஷம் இருப்பவர்களும் இந்தத் துதிப் பாடலைப் படித்துத் தோஷம் நீங்கப் பெறலாம்.

ராம புஜங்க அஷ்டகம்
ராம புஜங்க அஷ்டகம்

ராம புஜங்க அஷ்டகம்:

பஜே விசேஷ சுந்தரம்

ஸமஸ்த பாப கண்டனம்

ஸ்வபக்த சித்த ரஞ்ஜனம்

ஸ தைவ ராமமத்வயம்

கருத்து: மிகுந்த அழகு வாய்ந்த தெய்வமும் எல்லா பாவங்களையும் போக்குபவரும், பக்தர்களின் மனதை இன்பத்தால் களிப்படையச் செய்ப வருமான ராமனைப் பூஜிக்கிறேன்.

ஜடா கலாப சோபிதம்

ஸமஸ்த பாப நாசகம்

ஸ்வபக்த பீதி பஞ்ஜனம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: ஜடைகளின் கூட்டத் தால் அழகு பெற்றவரும், சகல பாவங்களையும் நாசம் செய்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குபவரும் தனக்கு இணையற்றவருமான ராமபிரானை வணங்குகிறேன்.

நிஜ ஸ்வரூப போதகம்

க்ருபாகரம் பவாபஹம்

ஸமம் சிவம் நிரஞ்ஜனம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: ஆதம் ஸ்வரூபத்தை உபதேசிப்பவரும் கருணைக் கடலும் ஜனன - மரண பயத்தைப் போக்குபவரும், எங்கும் சமமாக இருப்பவரும், மங்கலத்தை அருள் பவரும், தோஷம் இல்லாதவரும் இணையற்றவருமான ராம பிரானை வணங்குகிறேன்.

ஸ ப்ரபஞ்ச கல்பிதம்

ஹ்யநாமரூப வாஸ்தவம்

நிராக்ருதிம் நிராமயம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: உலகங்களுக்கு இருப்பிட மானவரும், நாமரூபம் அற்றவரும், எப்போதும் உள்ள வரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ராமபிரானை வணங்குகிறேன்.

ராம புஜங்க அஷ்டகம்
ராம புஜங்க அஷ்டகம்

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப

நிர்மலம் நிராமயம்

சிதேகரூப ஸந்ததம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: உலக சம்பந்தம் இல்லாதவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், தேஜோரூபியாக இருப்பவரும், இணையற்றவருமான ராமபிரானைப் பூஜிக்கிறேன்.

பவாப்தி போத்ரூபகம்

ஹ்யசேஷ தேஹ கல்பிதம்

குணாகரம் க்ருபாகரம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: சம்சார கடலுக்குப் படகு போன்றவரும், சகல சரீரங்களிலும் வியாபித்தவரும், குணங் களுக்கு இருப்பிடமானவரும், கருணைக்கு சமுத்திரமானவரும், இணையற்ற வருமான ராமனைப் பூஜிக்கிறேன்.

மஹாவாக்ய போதகைர்

விராஜமான வாக்பதை

பரம்ப்ரஹ்ம வ்யாபகம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: மகா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்தும் - சிறந்த சொற்களால் கூறப்படும் பரப் பிரம்மமாகவும், வியாபகமாகவும், இணையற்றவராகவும் திகழும் ராமனைப் பூஜிக்கிறேன்.

சிவப்தரம் சுகப்ரதம்

பவச்சிதம்ப்ர மாபஹம்

விராஜமான தேசிகம்

பஜேஹ ராமமத்வயம்

கருத்து: மங்கலத்தைக் கொடுப்பவரும், சுகத்தை வழங்குபவரும், ஜனன - மரண பயத்தைப் போக்குகிறவரும், அஞ்ஞானத்தை நீக்குபவரும், ஆசார்யராய் ஜொலிப்பவரும், இணையற்றவருமான ராமனை வணங்குகிறேன்.

ராம புஜங்க அஷ்டகம்
ராம புஜங்க அஷ்டகம்

ராமாஷ்டகம்படதி

யஸ்ஸுகரம் ஸீபுண்யம்

வ்யாஸேன பாஷிதமிதம்

ச்ருணுதே மனுஷ்ய:

வித்யாம்ச்ரியம் விபுல

ஸெளக்யமனந்த கீர்த்திம்

ஸம்ப்ராப்யதேஹ விலயே

லபதே ச மோக்ஷம்

கருத்து: வியாச மகரிஷியால் அருளப்

பட்டதும் சுலபமானதும் புண்ணியத்தைத் தருவதுமான இந்தத் துதிப்பாடலைப் படிப்பவரும் கேட்பவரும் சகல சுகத்தை யும் அடைவார்கள். அவர்களுக்கு வித்யை, ஐஸ்வர்யம், அளவற்ற சுகம், கீர்த்தி ஆகியவை கைகூடும். நிறைவில் மோட்சத்தை அடைவார்கள்.