Published:Updated:

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்: சஷ்டியில் சங்கல்பித்தால் சகலமும் நிறைவேறும்; உடனே சங்கல்பியுங்கள்!

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்: அதன்படி கடும் விரதமிருந்த முசுகுந்தனுக்கு முருகப்பெருமான் காட்சி தந்து, அவன் வேண்டிய வரங்களைக் கேட்டார். எதிரிகள் யாரும் தன்னை எதிர்க்காத வண்ணம் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களையும் தனக்கு சேனாதிபதிகளாக அளிக்குமாறு கேட்டான்.

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்: சஷ்டியில் சங்கல்பித்தால் சகலமும் நிறைவேறும்; உடனே சங்கல்பியுங்கள்!

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்: அதன்படி கடும் விரதமிருந்த முசுகுந்தனுக்கு முருகப்பெருமான் காட்சி தந்து, அவன் வேண்டிய வரங்களைக் கேட்டார். எதிரிகள் யாரும் தன்னை எதிர்க்காத வண்ணம் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களையும் தனக்கு சேனாதிபதிகளாக அளிக்குமாறு கேட்டான்.

Published:Updated:
ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம் வரும் ஐப்பசி திங்கள் கந்த சஷ்டி ஆறாம் நாளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (அக்டோபர் 30-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்
ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்
திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு முசுகுந்த மன்னன் ஆட்சி செய்து வந்தான். ஆதிகாலச் சோழ மன்னனாக இருந்து வந்த முசுகுந்தன், தனது ஆட்சியை விரிவாக்கவும் எதிரிகளே இல்லாத நிலையை அடையவும் எண்ணி வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டான். விரதங்களில் மிகவும் பலன் தரக்கூடிய கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகளைக் கூறி அதை அனுஷ்டிக்கவும் சொன்னார் மாமுனிவர்.

அதன்படி கடும் விரதமிருந்த முசுகுந்தனுக்கு முருகப்பெருமான் காட்சி தந்து, அவன் வேண்டிய வரங்களைக் கேட்டார். எதிரிகள் யாரும் தன்னை எதிர்க்காத வண்ணம் வீரபாகு உள்ளிட்ட நவவீரர்களையும் தனக்கு சேனாதிபதிகளாக அளிக்குமாறு கேட்டான். முருகப்பெருமானும் அவ்வாறே அளிப்பதாகக் கூற, நவவீரர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். 'ஆனானப்பட்ட சூரபத்மாதியரை வெல்ல அவதரித்த தாங்கள், ஒரு மானுடனுக்கு சேவை செய்வதா!' என்று மறுத்தனர். அவர்களிடம் முருகப்பெருமான் சினந்து 'கந்த சஷ்டியில் விரதமிருந்து என் மூலமந்திர ஹோமத்தை நடத்திய முசுகுந்தனுக்கு ஈரேழ் லோகங்களையும் கொடுக்கலாம். அத்தனை சிறப்பு பெற்றது இந்த வழிபாடு. எனவே என் கட்டளைப்படி செய்யுங்கள்' என்று கூறி மறைந்தார்.

பெருமானின் வாக்குப்படி அவர்களும் முசுகுந்தனுக்கு சேனாதிபதிகளாகி மண்ணுலகையும் இந்திரனுக்கு உதவியாக விண்ணுலகை தாக்கிய வலாசுரன் படையையும் வென்று மாபெரும் வெற்றிகளையும் தந்தனர் என்று புராணங்கள் கூறுகின்றன. கந்த சஷ்டி விரதமிருந்த முசுகுந்தனுக்கு அளப்பரிய வரங்களை அள்ளித் தந்த முருகப்பெருமான் நிச்சயம் உங்களின் அத்தனை தேவைகளையும் நிறைவேற்றித் தருவான் என்பது உறுதி! அதிலும் பிள்ளைபேறு வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது நம்பிக்கை.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

கந்த சஷ்டி நாளில், சூரனை சம்ஹரித்த வேளையில் ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம் செய்து வணங்கினால் வேண்டியது கைகூடும். தீராத வினைகள் தீர்த்துவிடும். தடைப்பட்ட காரியங்கள் விரைவாக நடைபெறும். சேராத உறவுகள் சேரும். கூடாத பழக்கங்கள் விட்டுப்போகும். நோய்கள் விலகும். செல்வமும் புகழும் தானாகச் சேரும். செவ்வாய் உள்ளிட்ட தோஷங்கள் நீங்கும். வீண் விரயம், தரித்திரம் நீங்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

இப்படி எல்லா நன்மைகளையும் அருளும் இந்த ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம் வரும் ஐப்பசி திங்கள் கந்த சஷ்டி ஆறாம் நாளில் ஞாயிற்றுக்கிழமை அன்று (அக்டோபர் 30-ம் தேதி) காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.

திண்டிவனம், கோட்டைமேடு, செந்தமிழ்நகர் ஞானவேல் கோட்டம் நவசித்தர் பீடத்தில் உள்ள அறுபடை வீடு ஆலயத்தில் கந்த சஷ்டி தினமான சூரசம்ஹார நாளில் ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம் நடைபெற உள்ளது. முருக சித்தர் என்றும், வேல் சித்தர் என்றும் பக்தர்களால் பரவசத்தோடு அழைக்கப்பட்ட திருநீலகண்ட சுவாமிகளால் ஞானவேல் கோட்டம் என்னும் இம்முருகவேள் ஆலயம் உருவாக்கப்பட்டது. இங்கு சுமார் 11 அடி உயரமுள்ள வேல் முருகப்பெருமானின் திருப்பாதங்களின் அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கவலைகளை வேரறுக்கும் கந்தனின் கைவேல் அபூர்வ சக்தி கொண்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வேலும் வருவோர் பிணி நீக்கி அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அருள்கிறது. இத்தலத்தில் நவ சித்தர்களும், அறுபடை வீடு முருகர்களும், வேம்படியில் வாலை புவனை திரிசூலி அம்மனும் அருளாட்சி செய்கிறார்கள்.

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்
ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்

சகல காரிய சித்தி பெற நடத்தத் துவங்கிய இந்த ஹோமம் இன்றளவும் மிகச் சிறந்த பலன்களைத் தந்து வருவது அதிசயம். அபூர்வ ஹோம சமித்துக்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தீயில் வேல், மயில், பாம்பு, ஒம்காரப் பிரணவம் போன்ற அருள்காட்சிகள் தெரிவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்கிறார்கள். உட்பகைகள் ஆறினையும், வெளிப்பகை யாவற்றையும் அகற்றும் விசேஷ ஹோமம் இது. இதனால் தீய சக்திகளால் உண்டாகும் துன்பங்களையும், தோஷங்களையும் போக்க வல்ல ஹோமம் இது.

முருகப்பெருமானோடு ஆறு என்ற எண் அதிகம் தொடர்பு கொண்டது. எனவே தான் கந்த சஷ்டி விரதமும் ஆறு நாள்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன் முருகன். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, உறைப்பு, துவர்ப்பு, கார்ப்பு என ஆறு வகை சுவைகளாக இருப்பவன் முருகன். ஸாங்க்யம், வைசேஷிகம், யோகம், ந்யாயம், மீமாம்ஸம், வேதாந்தம் என ஆறு சாத்திரங்களாக இருப்பவன் முருகன்.

ஞானவேல் கோட்டம் நவசித்தர் பீடத்தில் உள்ள அறுபடை வீடு ஆலய முருகன்
ஞானவேல் கோட்டம் நவசித்தர் பீடத்தில் உள்ள அறுபடை வீடு ஆலய முருகன்

சைவம், சாக்தம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம் என ஆறு மதங்களுக்கும் தத்துவமாக இருப்பவன் முருகன். ஆறு வேத அங்கங்களாக இருப்பவன் முருகன். ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம், அதோ முகத்துடன் இருப்பவன் ஆறுமுகன். அதேபோல் ஆறு நாள்கள் போரிட்டு அசுர சக்திகளை அடக்கியவன் முருகன். அந்த நாள்களே கந்த சஷ்டி விரத நாள்களானது. இந்த நாளில் இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் தீய சக்திகள் விலகி நன்மைகள் சூழும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமான் செவ்வாயின் அதிபதி என்பதால்,வீண் விரயம், கடன், திருமணத்தடை போன்றவை நீங்கும். காரிய ஸித்தி உண்டாகும். அச்சங்கள் விலகும். பொன்-பொருள் சேரும், சோதனைகள் தீரும். திருமண பாக்கியம், சந்தானப் பேறு போன்ற மங்கலப் பிரார்த்தனைகள் நிறைவேறும். எண்ணியவை யாவும் அருளும் இந்த ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமத்தில் கலந்து கொண்டு அருளும் பொருளும் நிறைவும் பெற்று வாழ வேண்டுகிறோம்.

ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்
ஸ்ரீசுப்ரமண்ய மூலமந்திர மஹாஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.