Published:Updated:

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சரண் அடைபவரை சடுதியில் காக்க வரும் சக்கரத்தாழ்வார்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

மகா சுதர்சனர்

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்:எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற இருவரையும் மடக்கி அவர்கள்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு சயனித்தார் திருமால்.

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்: சரண் அடைபவரை சடுதியில் காக்க வரும் சக்கரத்தாழ்வார்! நீங்களும் சங்கல்பியுங்கள்!

ஸ்ரீமகாசுதர்சன ஹோமம்:எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற இருவரையும் மடக்கி அவர்கள்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு சயனித்தார் திருமால்.

Published:Updated:
மகா சுதர்சனர்

ஸ்ரீசுதர்சன மஹாஹோமத்தை விகடன் வாசகர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நலனுக்காக இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்த உள்ளோம்.

மகா சுதர்சனர்
மகா சுதர்சனர்

கால் நடையாகத் திரிந்த மனிதன் சக்கரத்தைக் கண்டு பிடித்ததும் தான் பல வாகனங்களை உருவாக்கி தனது பயணங்களை வேகமாக்கினான். மனிதன் கண்டறிந்ததில் சக்கரமே அற்புதமான முதன்மையான கண்டுபிடிப்பு. அதிலிருந்தே உலகம் நவீனமானது. அதைப்போல புராணத்தில் ஸ்ரீசக்கரம் எனும் திருமாலின் ஆயுதம் செய்த அற்புத லீலைகளாலேயே பல தீயவர்கள் யுகம்தோறும் ஒழிந்து பல நன்மைகள் விளைந்தன என்று குறிப்பிடுகிறது. திருமாலின் 10 அவதாரங்களிலும் ஸ்ரீசுதர்சனரும் உடன் இருந்து சத்ரு சம்ஹாரம் செய்து லோகத்தைக் காத்தார். தீயவர்களை அழித்த அவரே நல்லவர்களையும் காத்தார் என்கின்றன புராணங்கள்.

நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை என்பார்கள் ஆன்றோர்கள்; உடனே தோன்றி துயர் தீர்ப்பவர் நரசிம்மர். அதேபோல வேண்டிய இடத்துக்கே வந்து வரங்களை அளிப்பவர் ஸ்ரீசுதர்சனர். இவரே தமிழில் சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுகிறார். அதனாலேயே கருணையும் உக்கிரமும் கொண்ட இருவரையும் முன்னும் பின்னும் இணைத்து வைத்து ஸ்ரீசுதர்ஸனர் என்ற வடிவமாக வழிபடும் பழக்கம் உருவாகியது.

எதிரிகள், கடன் தொல்லைகள் நீங்க சக்கரத்தாழ்வார் வழிபாடு சிறப்பானதாகும். மந்திர சக்தியாலும் தந்திர சக்தியினாலும், தீய சக்திகளாலும் அவதிப்படும் அன்பர்களுக்கு சக்கரத்தாழ்வாரே ஆறுதல் அளிப்பார் என்கின்றன புனித நூல்கள். வேதாந்த தேசிகர் 'சக்ர ரூபஸ்ய சக்ரிண' என்று போற்றுகிறார். விஷ்ணுவுக்கு இணையானவர் சக்கரத்தாழ்வார் என்பது இதன் பொருள். ஸ்ரீசக்கரத்தை ஏந்தியதால் சக்ரபாணி என்ற திருநாமமே பெருமாளுக்கு உண்டு. திருமாலை விட்டு நீங்காத நித்யசூரியான சுதர்சனர் ஆயிரம் சூரியனுக்கு நிகரானவர்.

சுதர்சன ஹோமம்
சுதர்சன ஹோமம்

8 ஆழ்வார்கள் போற்றிய பெருமைக்கு உரியவர் சுதர்சனர். அதிலும் திருமங்கை ஆழ்வார் பல பாடல்களில் சுதர்சனரைப் போற்றுகிறார். 'சென்றுநின்றாழி தொட்டானை, தேனமர் சோலை மாட மாமயிலை, திருவல்லிக்கேணி கண்டேனே!' ஆதிமூலமே என்று யானைக் கதற விஷ்ணு கரம் தொட்ட ஸ்ரீசக்கரம், அவர் சுழற்றும் முன்னே சென்று முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காத்ததாம். விஷ்ணுவுக்கும் முன்னே அவர் பக்தர்கள் மீது வாத்சல்யம் கொண்டது சுதர்சனம்.

உபாசனைகளில் தீவிரமானது நரஸிம்மம், சுதர்சனம், ஆஞ்சநேயம், ஹயக்ரீவம், வராஹம் என்பார்கள். நியதிப்படி பயபக்தியோடு இவர்களை வணங்க தீமைகள் அண்டவே அண்டாது. அதிலும் சுதர்சனரை ஆராதிக்க உருவான ஸ்ரீசுதர்சன ஹோமத்தை நடத்தி வழிபட்டால் எல்லா தொல்லைகளில் இருந்தும் விடுபட்டு நிம்மதியோடு வாழலாம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். மேலும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வழிபட்டால் நவகிரகங்களால் ஏற்படும் இடையூறுகள், துன்பங்கள் நீங்கும். ஸ்ரீசுதர்சன வழிபாடு கெட்ட கனவு, சித்தபிரமை, மனோவியாதி, வீண் அச்சங்கள், நஷ்டம், கவலை, விபத்துக்கள், அகால மரணம் முதலிய துன்பங்களிலிருந்து காக்க வல்லது. கண்கண்ட தெய்வமான சுதர்சனரை ஆராதிக்கும் வைபவத்தில் முதன்மையானது ஸ்ரீசுதர்சன மஹாஹோமம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இத்தனை முதன்மையான இந்த ஹோமத்தை விகடன் வாசகர்கள் மற்றும் அவர்களின் விருப்பத்துக்குரியவர்கள் நலனுக்காக இறையானூர் ஆதிகேசவ பெருமாள் ஆலயத்தில் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று நடத்த உள்ளோம். சக்திவிகடன் - ஆதிகேசவ கோயில் நிர்வாகம் இணைந்து வழங்கும் மகாசுதர்சன ஹோமம், திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

அழகிலும் அருள்வதிலும் நிகரில்லாத பெருமை கொண்ட கேசவன், தன்னுடைய பக்தர்களைக் காப்பதற்காகக் கோபம் கொள்வதிலும் சமர்த்தன் என்று போற்றப்படுகிறார். ஆம், அவதாரங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவர் கேசவன். அதனாலே அவர் ஆதிகேசவன் என்ற அடைமொழியால் இந்தப் புண்ணிய பூமியில் பல தலங்களில் எழுந்தருளி உள்ளார்.

ஶ்ரீசுதர்சன மகா ஹோமம்
ஶ்ரீசுதர்சன மகா ஹோமம்

அப்படியான தலங்களில் ஒன்று திண்டிவனம் அருகிலுள்ள இறையானூர் (இறைவனூர்). இங்கே கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீஆதிகேசவ பெருமாள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறார். ஏன் அப்படி? திருமாலின் மீது அர்த்தமின்றி அசூயை கொண்டிருந்த நான்முகன், திருமாலைப் புறக்கணித்துவிட்டு சரஸ்வதி நதிக்கரையில் ஒரு யாகம் செய்தார். அதனால் கோபமுற்ற கலைவாணி, நான்முகனுக்கு உண்மையை உணர்த்த, அவர் நாவில் எழுந்து மந்திரத்தின் உச்சரிப்பை மாற்றிவிட்டார். மாறிய மந்திரச் சொல்லின் விபரீதத்தால் யாகத் தீயிலிருந்து கேசன் - கேசி என்ற அரக்கனும் அரக்கியும் தோன்றினர். இதனால் யாகம் அழிந்து நான்முகன் மறைந்து வாழும் நிலை உண்டானது.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

எவராலும் அழிக்க முடியாத வரம் பெற்ற இருவரையும் மடக்கி அவர்கள்மீது ஆதிசேஷனை அமர்த்தி பாம்பணையாக்கிக் கொண்டு சயனித்தார் திருமால். இதனால் அவருக்கு கேசவன் என்ற திருநாமமும் உண்டானது என்கிறது புராணம். அசுரர்களுக்கு அஞ்சி தேவர்கள் ஒளிந்திருந்த திந்திரிவனத்துக்கு (திண்டிவனம்) வந்து காட்சி தந்தார் கேசவர். திருமால் கேசவனாக தேவர்களுக்கு முதன்முதலில் அருளிய தலம் என்பதால் அது இறைவனூர் என்றானது. திண்டிவனத்துக்கு அருகே சென்னை - விழுப்புரம் தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது இறையானூர். இங்குஶ்ரீதேவி பூதேவி சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் ஆதிகேசவர். இங்கே தனி சந்நிதியில் அபூர்வ கோலத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீசுதர்சனர்.

உன்னதமான இந்த ஹோம வைபவத்தில் வாசகர்களும் தங்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும் உற்றார் உறவுகளுக்காகவும் சங்கல்பம் செய்து இறையருள் பெறலாம்!

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீசுதர்சன மகா ஹோமம்
ஶ்ரீசுதர்சன மகா ஹோமம்

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்ப விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.