Published:Updated:

வாழ்க்கையின் அனைத்து நற்பலன்களையும் அளிக்கும் ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

சுக்கிரப் பரிகார ஹோமம் : வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரப் பரிகார ஹோமம் நடைபெற்று வருகிறது. நல்ல துணை, புகழ், வீடு, நிலபுலம், வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் கீழ்ப்பசார் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர். அம்பிகை மரகதாம்பிகை. சந்திரனைச் சூடிய ஈசன் என்பதால் இவர் குளுமையான வாழ்க்கையை அருளும் மகா வரப்பிரசாதி என்ற பெருமையைக் கொண்டிருக்கிறார். சோழர்களும், விஜய நகர மன்னர்களும் கொண்டாடிய இந்த ஆலயம் காலப்போக்கில் அழிந்து போக, அடியார்களும் அன்புள்ளம் கொண்டவர்களும் சக்தி விகடன் வாசகர்களும் இணைந்து பொருளுதவி செய்து ஆலயத்தை எழுப்பினார்கள். சென்ற ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.

சுக்கிரப் பரிகார ஹோமம்
சுக்கிரப் பரிகார ஹோமம்

சித்தர் பெருமக்கள் பலரும் அரூபமாக இன்றும் இங்கு வந்து ஈசனை வழிபடுவதாக இவ்வூர் மக்கள் பலரும் கூறுகிறார்கள். மழலை வரம் அருளும் மகேசனாக இங்கு ஈசன் எழுந்தருளி உள்ளார். இங்கு வந்து குழந்தை வரம் பெற்ற பல அன்பர்களின் அனுபவங்களை நாம் ஏற்கனவே எழுதியும் இருக்கிறோம். மேலும் இங்கு தேவ பிரச்னம் பார்த்தபோது வந்த தகவல்கள் ஆச்சர்யமானவை. சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் முன்பு சுக்கிரப் பரிகாரத் தலமாக இருந்து வந்துள்ளது. அசுர குருவான சுக்கிரன் மகாபலியின் தானத்தைத் தடுத்து வாமனப் பெருமாளின் காரியத்துக்கு இடையூறு செய்த பாவம் நீங்க சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்று கூறப்படுகிறது. ஈசனின் கருணையால் பாவம் நீங்கிய சுக்கிரன் பெரும் வரங்களைப் பெற்றார் என்றும் சகலருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார் என்றும் தெரியவந்தது. அதனால் இந்தத் தலம் சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் திகழ்ந்தது எனவும் தெரியவந்தது. அதையொட்டி தற்போதும் கீழ்ப்பசார் சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் சுக்கிரப் பரிகாரத் தலமாக இருந்து வருகிறது.

ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்
ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்

வேறெங்குமே இல்லாத வகையில் பெரிய சுக்கிர பகவான் சிலையும் சந்நிதியும் இங்கு உருவாக்கப்பட்ட்டிருக்கிறது. அத்துடன் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான், கற்பக விநாயகர், லட்சுமி குபேரர் சந்நிதிகளும் இங்கு உள்ளன. சுக்கிரப் பரிகாரத் தலமாக பிரபலமாகி வரும் இங்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரப் பரிகார ஹோமம் நடைபெற்று வருகிறது. நல்ல துணை, புகழ், வீடு, நிலபுலம், வாகனம், மகிழ்ச்சியான வாழ்க்கை என அனைத்து நற்பலன்களையும் தருபவர் சுக்கிரன் ஒருவரே. அதனால் லௌகீக வாழ்க்கைச் சுகங்களுக்கு சுக்கிரனே அதிபதி எனலாம். ஒருவரின் ஜாதகத்தில் சுபராக வலுப்பெற்ற சுக்கிரன் இருந்தால் அவர் எந்த நிலையிலும் மேம்பட்டே வாழ்வார் என்கிறது ஜோதிடம். சுக்கிரன் ஒருவர் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் கேந்திரங்களில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவார். மற்ற கிரகங்களுக்கு இந்தச் சிறப்பு கிடையாது. ஒருவருக்கு சுக்கிர யோகம் கிடைத்துவிட்டால் அவரை வெல்வது கடினம். சுக்கிர யோகம் கொண்டவர்கள் தொட்டது எல்லாம் துலங்கும்.

வம்சத்தை விருத்தி செய்யும் கிரகமும் சுக்கிரன்தான், அதனாலேயே இவரை `களத்திரகாரகன்' என்கிறோம். கலைத்துறையில் வெற்றி பெறவும் இவர் அருளே தேவை. தொட்டதை எல்லாம் பொன்னாக்கித் தரும் இந்த சுக்கிரன் அருள் இருந்தால் ஏழேழ் தலைமுறைக்கும் நீங்காத செல்வம் வந்து சேரும் என்பது ஜோதிட நம்பிக்கை. இந்த சுக்கிரனுக்கு உரிய பரிகாரப் பொருள்கள், மந்திரங்கள், சமித்துக்கள் கொண்டு இவரை ஹோமம் செய்து ப்ரீத்தி செய்பவருக்கும் எந்நாளும் துணை இருந்து அனுக்ரஹிப்பார் என்பது நம்பிக்கை. இதனால் நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமண வரம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, மகிழ்ச்சியான வாழ்வு பெற என வாசகர்களின் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமத்தை திண்டிவனம் கீழ்ப்பசாரில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நடத்தவுள்ளோம்.

ஸ்ரீசுக்கிர ஹோமம்
ஸ்ரீசுக்கிர ஹோமம்

வரும் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (3-12-21) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுக்கிர ஹோரையில் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் உலகத்து லௌகீக சுகங்கள் அனைத்தும் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல திருமண வரன் கிடைக்கும். செல்வவளம் சேரும். சுக்கிர யோகத்தால் பூமியில் உள்ள அத்தனை போகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் அமையும். மேலும் தாங்கள் எண்ணிய யாவும் நிறைவேறும் என்று சொல்லி நல்லதே நடைபெற இறைவனை வாழ்த்தி வேண்டுகிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் YouTube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு