Published:Updated:

களத்திர தோஷம் நீங்கி கல்யாண வரம் கூடிவர ஸ்ரீசுக்கிர பரிகார மஹாஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம் செய்வதும் நன்று எனப்படுகிறது. திருமண வரம் போல சந்தானப்பேறு அளிப்பதும் சுக்கிர பகவானின் அருளால் எனப்படுகிறது.

அசுர குரு என்று போற்றப்படுபவர் சுக்கிரன். வெள்ளிக் கோள் என்றும் இவரை ஜோதிடம் குறிப்பிடுகிறது. தெளிவு, அதிர்ஷ்டம், தூய்மை, நன்மை, பிரகாசம் ஆகியவற்றின் அடையாளம் இவர். பிரம்மனின் மானஸ புத்திரரான பிருகு முனிவரின் மகன் இவர். இதனால் பார்கவன் என்ற திருநாமமும் உண்டு. ஆற்றல் கொண்டவர் என்பதால் கவி என்றும் அழைப்பர். ஈஸ்வர கிருபையால் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி என்ற மந்திரத்தைக் கற்றவர் இவர். வெள்ளி நிறம் கொண்ட சுபர் இவர். வெண் பட்டாடை உடுத்தி வெண்தாமரை மலர் மாலை அணிந்து கருட வாகனத்தில் வீற்றிருப்பவர். முதலை வாகனமும் இவருக்கு உண்டு. ஜங்கோண மண்டலத்தில் சூரியனுக்கு வடக்கே தெற்கு நோக்கிய நிலையில் வீற்றிருக்கிறார்.

சுக்கிரன்
சுக்கிரன்

சுக்கிரன் ரிஷப துலா ராசிக்கு அதிபதி ஆவார். பரணி, பூரம், பூராடம், நட்சத்திரத்திற்கு உரியவர். ஒருவரின் சுக்ர திசை என்பது 20 ஆண்டுகள் கொண்டது. இவர் மீன ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமும் அடைவார். ஒரு ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் காலம் சுமார் ஒரு மாதம். சுக்கிரனுக்கு நட்பு - புதன், சனி! பகை - சூரியன், சந்திரன். சமன் - செவ்வாய், குரு. சுக்கிரனின் உலோகம் - வெள்ளி, கல் - வைரம், தான்யம் - வெள்ளை மொச்சை, சமித்து - அத்தி, அதிதேவதை - இந்திராணி, பிரத்யதி தேவதை - இந்திரன்.

அநேக சுப காரியங்களைச் செய்து தரும் சுக்கிரபகவான், ஜாதகப்படி அவர் அமர்ந்திருக்கும் இடம் பொறுத்து சில தோஷங்களையும் உண்டாக்குவார். குறிப்பாக திருமணத் தடைகள் இவரால் உருவாகும் என்கிறது ஜோதிடம். சுக்கிரனுடன் சூரியன், ராகு அல்லது சனி, கேதுவுடன் கூடி இருந்தாலும், 7-ம் இடம் பாவ கிரகங்களின் வீடாகி அதில் சுக்கிரன் இருந்தாலும், மிகவும் பாதகமான களத்திர தோஷம் உண்டாகும் என்கிறது ஜோதிடம். ஆண்களின் ஜாதகத்திலும் களத்திர தோஷம் என்பது மேல்காணும் தோஷங்களோடு சூரியன், சுக்கிரன் இருவரும் 5, 7, 9-ம் வீட்டில் இருந்தாலும், சூரியன், ராகு அல்லது கேது சேர்ந்து 7-ம் வீட்டில் இருந்தாலும் 2-ம் வீடு பாதகப்பட்டாலும் உண்டாகும் என்பார்கள்.

ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம்
ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம்

சுக்கிரனால் தோஷம் உண்டானால் ஒரு வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீரங்கம் சென்று காவிரியில் குளித்து ஒரு சொம்பு பாலை காவிரியில் விட்டு பெருமாளுக்கும் தாயாருக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்பார்கள். அதேபோல் களத்திர தோஷங்களுக்கு, ஸ்ரீசுக்கிரப் பரிகார ஹோமம் செய்வதும் நன்று எனப்படுகிறது. திருமண வரம் போல சந்தானப்பேறு அளிப்பதும் சுக்கிர பகவானின் அருளால் எனப்படுகிறது. அதனாலேயே இவரை `களத்திர காரகன்' என்கிறோம். தொட்டதை எல்லாம் பொன்னாக்கித் தரும் இந்த சுக்கிரன் அருள் இருந்தால் சகல சம்பத்துக்களையும் பெறலாம் என்பது ஜோதிட விதி. சுக்கிரனுக்கு உரிய பரிகாரப் பொருள்கள், மந்திரங்கள், சமித்துக்கள் கொண்டு இவரை ஹோமம் செய்து ப்ரீத்தி செய்பவருக்கும் எந்நாளும் துணை இருந்து அனுக்ரஹிப்பார் என்பது நம்பிக்கை.

இதனால் நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், குழந்தைப்பேறு, திருமண வரம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, மகிழ்ச்சியான வாழ்வு பெற என வாசகர்களின் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமத்தை திண்டிவனம் கீழ்ப்பசாரில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நடத்தவுள்ளோம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - ஆவணிப்பூர் சாலையில் கீழ்ப்பசார் என்ற ஊரில் எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்

சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் முன்பு சுக்கிரப் பரிகாரத் தலமாக இருந்து வந்துள்ளது. அசுர குருவான சுக்கிரன் மகாபலியின் தானத்தைத் தடுத்து வாமனப் பெருமாளின் காரியத்துக்கு இடையூறு செய்த பாவம் நீங்க சுக்கிரபகவான் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்று கூறப்படுகிறது. ஈசனின் கருணையால் பாவம் நீங்கிய சுக்கிரன் பெரும் வரங்களைப் பெற்றார் என்றும் சகலருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார் என்றும் கூறப்படுகிறது.

வரும் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (3-12-21) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுபயோக சுக்கிர ஹோரையில் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் உலகத்து லௌகீக சுகங்கள் அனைத்தும் பெறலாம் என்பது நம்பிக்கை. இந்த ஹோமத்தில் கலந்து கொள்வதால் சந்தான பாக்கியம் கிடைக்கும். நல்ல திருமண வரன் கிடைக்கும். செல்வவளம் சேரும். சுக்கிர யோகத்தால் பூமியில் உள்ள அத்தனை போகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டும். வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் அமையும். மேலும் தாங்கள் எண்ணிய யாவும் நிறைவேறும் என்று சொல்லி நல்லதே நடைபெற இறைவனை வாழ்த்தி வேண்டுகிறோம்.

பரிகார மஹாஹோமம்
பரிகார மஹாஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் YouTube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு