Published:Updated:

ஏன் செய்ய வேண்டும் ஸ்ரீசுக்கிர பரிகார ஹோமம்! எல்லா ராசிக்காரர்களும் பலனடைய ஒரு எளிய வழிகாட்டுதல்!

சுக்கிர பரிகாரம்
News
சுக்கிர பரிகாரம்

ஸ்ரீசுக்கிர பரிகார ஹோமம்

பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் சுக்கிரன். இது பெண் கிரகமாக இருப்பதால் சுக்கிரன் அருள்பெற்றோர் அற்புதமான குடும்ப வாழக்கையை மேற்கொள்வார்கள். புத்திர செல்வங்களை ஒருவருக்கு அருள்பவர் சுக்கிரபகவான், ஜாதகத்தில் சுக்கிர தோஷம் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலை ஏற்படுகிறது. திருமணம் தள்ளிப்போவதும், திருமணம் முடித்தவர்கள் ஒத்துப்போகாமல் விவாகரத்துப் பெறுவதும், சண்டை சச்சரவோடு வாழ்வதும் எல்லாமே சுக்கிர பலம் குறைவதால் உண்டாவதே என்கிறது ஜோதிடம்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்

ஜோதிடத்தில் ஒரு மனிதனின் ஆயுள் 120 ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அப்போது மனிதனின் ஆயுள் காலமும் அப்படியே இருந்துள்ளது.கேது தசை முதல் புதன் தசை வரை 9 தசா புக்திகளாக பிரித்த பராசர மகரிஷி சுக்கிரனுக்கு மட்டும் 20 ஆண்டுகள் என ஒதுக்கியுள்ளார். ஒரு மனிதனின் வாழ்வில் சுக்கிர தசை 20 ஆண்டுகளுக்கு அவனை ஆளுமை செய்யும். 9 கிரக தசைகளில் அதிகமான ஆளுமையைக் கொண்டது சுக்கிரன் மட்டுமே.

சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் கொண்டாலும், செவ்வாயுடன் கன்னியில் சேர்ந்து இருந்தாலும் சுக்கிரனின் வலிமை குறைந்துவிடும். சுக்கிரன் ஒருவரின் லக்னத்துக்கு 8-ம் இடத்தில் இருந்தாலும் சுக்கிர தோஷம் என்கிறது ஜோதிடம். எனினும் அந்த 8-ம் வீடு சுக்கிரனின் ஆட்சி வீடுகளாகிய ரிஷபம், துலாம் என்று இருந்தாலோ, உச்ச வீடான மீன ராசியாகவோ இருந்தால், சுக்கிர தோஷம் உண்டாகாது. ஆனால் ஜாதகத்தில் சுக்கிரன் 7-ம் இடத்தில் இருப்பதும் 3, 6, 12 ஆகிய இடங்களில் ஒன்றில் மறைந்து இருப்பதும் சுக்கிர தோஷத்தை உண்டாக்கும். இப்படி தோஷம் உருவானால் வாழ்க்கையில் பல தடைகளையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும். சாதாரணமான சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க முடியாமல் போய்விடும். இல்லறத்தில் இன்பமே இல்லாமல் இருந்துவிடும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சுக்கிரன்
சுக்கிரன்

மத்திம வயதில் ஜாதகத்தில் சுக்ர தோஷம் உள்ளவர்கள், பொருளாதாரக் கஷ்டம், இல்லற வாழ்வு சீர்கெடுதல், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்களால் அவதிப்படுதல், தேவையற்ற வம்புகளில் சிக்கிக் கொள்ளுதல், சொத்துகள் தேயும், இளமைப் பொலிவு குன்றும், விரக்தியும் கவனக் குறைவும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள். இவர்களுக்கு ஒரே ஆறுதல் என்று ஜோதிடம் உரைப்பது சுக்கிர வழிபாடுதான்.

அதே ஒருவர் வாழ்வில் சுக்கிரன் சுபமாக அமர்ந்தால், வாழ்வின் எல்லா இன்பங்களையும் அனுபவித்து இந்திரனைப் போன்ற வாழ்வு பெறுவர் என்கிறது ஜோதிட சாஸ்திரம். பணப்புழக்கத்தை தரும் கிரகம் சுக்கிரன், நோயாளிகளின் நோயை குணப்படுத்துபவர் சுக்கிரன், வருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை அளிப்பவர் சுக்கிரன், தாம்பத்ய வாழ்வை இன்பமாக்குபவர் சுக்கிரன், எனவே சுக்கிரனைப் பணிந்து அவருக்குப் பரிகாரம் செய்பவர்களுக்கு அவர் நலமே அளிப்பார் என்பது திண்ணம். சுக்கிர பரிகாரங்களில் சிறப்பானது ஸ்ரீசுக்கிர பரிகார ஹோமம். அதுவும் இது சுக்கிரனுக்கான பரிகார தலமாகிய திண்டிவனம் கீழ்ப்பசாரில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை சமேத ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் நடத்த இருப்பது விசேஷத்திலும் விசேஷம்!

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்
ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்

வேறெங்குமே இல்லாத வகையில் பிரமாண்ட வடிவில் சுக்கிரன் எழுந்தருளி இருக்கும் ஒரே தலம் திண்டிவனம் கீழ்ப்பசார் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயமே. சுமார் 1500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம் முன்பு சித்தர் பெருமக்கள் வழிபட்ட ஆலயமாக இருந்து வந்துள்ளது. மேலும் சிறப்பான சுக்கிரப் பரிகாரத் தலமாகவும் இருந்து வந்துள்ளது. அசுர குருவான சுக்கிரன் மகாபலியின் தானத்தைத் தடுத்து வாமனப் பெருமாளின் காரியத்துக்கு இடையூறு செய்த பாவம் நீங்க இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி வழிபட்டார் என்று கூறப்படுகிறது. ஈசனின் கருணையால் பாவம் நீங்கிய சுக்கிரன் பெரும் வரங்களைப் பெற்றார் என்றும் சகலருக்கும் நன்மைகளை வழங்கும் தேவகிரகமாக மாறினார் என்றும் கூறப்படுகிறது.

கீழ்ப்பசார் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் ஆலயம்:

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்.

இறைவி திருப்பெயர்: ஸ்ரீமரகதாம்பிகை

தீர்த்தம்: சந்திர தீர்த்தம்.

வழிபட்டோர்: அம்பிகை, சுக்கிரன், பிருகு முனிவர், சித்தர் பெருமக்கள் போன்றோர்.

வரும் கார்த்திகை மாதம் 17-ம் நாள் (3-12-21) வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுபயோக சுக்கிர ஹோரையில் ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் குடும்ப வாழ்க்கையில் மேம்பாடு அடைந்து சகல செல்வங்களையும் அடையலாம் என்பது நம்பிக்கை.

ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்
ஸ்ரீசுக்கிரப் பரிகார மஹாஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் - 30.11.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில் வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் YouTube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.