Published:Updated:

செல்வகடாட்சம் அருளும் ஶ்ரீசுக்த ஹோமம்

ஶ்ரீசுக்த ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசுக்த ஹோமம்

ஶ்ரீசுக்த ஹோமம்

செல்வகடாட்சம் அருளும் ஶ்ரீசுக்த ஹோமம்

ஶ்ரீசுக்த ஹோமம்

Published:Updated:
ஶ்ரீசுக்த ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசுக்த ஹோமம்

`உன்னை நீயே உயர்த்திக்கொள்' என்கிறார் பகவான் கிருஷ்ணர். எவ்வளவு திட்டமிட்டாலும் எவ்வளவு ஒழுங்குடன் வாழ்க்கையை நடத்தினாலும் சில துன்பங்கள் நம்மை வாட்டத்தான் செய்கின்றன. அவை பூர்வ ஜன்ம வினைகளால் நிகழ்கின்றன எனப் பொதுவாகச் சொல்லப்படுகிறது.

அவற்றையும் தெய்வ அருளால் நீக்கி நலம் பெறலாம் என்பதே ஆன்மிகத்தின் நம்பிக்கை. தெய்வ பலத்துக்கு உறுதுணையாக இருப்பவை ஹோமங்கள். 400-க்கும் மேற்பட்ட ஹோமங் கள் உண்டு என்கின்றன ஞானநூல்கள்.

ஹோமங்களில் மிகச் சிறப்பானது ஸ்ரீசூக்த ஹோமம். `ஸ்ரீ' என்றால் மகாலட்சுமி.

சூக்த ஹோமம்
சூக்த ஹோமம்


கமலாத்மிகா, லட்சுமி, ஸ்ரீகமலா, ஜலஜா, கமலாலயா, பத்மா, ரமா, நளினீ, யுக்மகரா, மா, க்ஷீரோதஜா, அம்ருதா, கும்பகரா, விஷ்ணுப்ரியா என்றெல்லாம் போற்றப்படும் லட்சுமிதேவி கருணை மயமானவள்; தோஷங்களை நிவர்த்திப்பவள். விஷ்ணுவின் அனுக்கிரஹத்தை நமக்குக் கிடைக்கச் செய்பவளும்; நம்மை ரக்ஷிப்பவளும் திருமகளே ஆவாள். பாற்கடலில் இருந்து தோன்றிய இந்த அன்னையே சகல சம்பத்துகளுக்கும் அதிபதி; எல்லா வேண்டு தலையும் நிறைவேற்றுபவள்!

`மகாலட்சுமிதேவி மனத் திருப்தியளிப்பவள். பொலிவும் அழகும் தருபவள். திருமாலின் போக சக்தி' என்றெல்லாம் ஸௌபாக்ய லக்ஷ்மி உபநிஷத் கூறுகிறது.

இந்த தேவியை வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பானது. பௌர்ணமி நாள் எனில் மிகவும் விசேஷம். அன்று வில்வம், தாமரை, மல்லிகை, விசேஷ சமித்துகள் கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் செய்து வழிபட் டால் செல்வ வளம், கடன் நிவர்த்தி, வியாபார அபிவிருத்தி, பதவி உயர்வு என சகல வரங்களும் அருள்வாள் என்கின்றன ஞானநூல்கள்.

செல்வகடாட்சம் அருளும் ஶ்ரீசுக்த ஹோமம்
லட்சுமி நரஸிம்ஹர்
முத்துசுவாமி கனபாடிகள்
முத்துசுவாமி கனபாடிகள்
ஆனந்தாச்சாரியர்
ஆனந்தாச்சாரியர்


ஸ்ரீமகாலட்சுமியை துதித்துச் செய்யப்படும் ஸ்ரீசூக்த ஹோமம் விருப்பங்களை நிறைவேற்றும் விருத்தி ஹோமம் என்று பெரியோர்கள் சொல் வார்கள். அவ்வகையில் உலக நன்மைக்காகவும், வாசகர்களின் குடும்பத்தாரும் சுற்றமும் சகல சம்பத்துகளையும் பெற்றுச் சிறக்கவேண்டியும் வரும் புரட்டாசி மாதம் பௌர்ணமி (20.9.2021 திங்கள் கிழமை) அன்று ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெறவுள்ளது.

சக்தி விகடனும் ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடமும் இணைந்து வழங்கும் ஸ்ரீசூக்த ஹோமம், தென்காசி மாவட்டம்- கீழப்பாவூரில் ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் நடைபெறவுள்ளது.

16 வகை லட்சுமி தேவியரில் ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி, அதிகாரங்களை வழங்கும் ஆற்றல் கொண்டவள். ஆக இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் சங்கல்பித்து வேண்டிக்கொள்வதன் மூலம், செல்வ கடாட்சத்துடன் பதவி யோகம், தலைமைப் பதவி, ஆளுமைத் திறன், சொல்வாக்கு, செல்வாக்கு ஆகியற் றுடன் சகல சம்பத்துகளும் உண்டாகும்.

மேலும், இந்த பீடத்தில் எழுந்தருளி இருக்கும் பிரகலாத வரத ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பவர். இங்கே ஸ்ரீமகாலட்சுமி ஸ்வாமியின் மடியில் அமர்ந்து சேவை சாதிக்கிறாள். ஸ்வாமியின் திருமார்பில் அமர்ந்திருந்தால் அவரின் திவ்ய முகத்தை தரிசிக்க முடியவில்லை என்பதால், நரஸிம்ஹ மூர்த்தி யின் மடியில் அமர்ந்து அருள்பாலிக்கிறாள். ஆக, ஸ்ரீநரசிம்மரின் அருளைப் பெற்றுத் தருவதுடன், நவ நிதிகளையும் கம்பீர வாழ்வையும் அருளும் நாயகியாய் திகழ்கிறாள்!

இத்தகு சிறப்புமிக்க புண்ணிய தலத்தில், மிக விசேஷமான இந்த ஹோமத்தை ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தின் சார்பாக ஸ்ரீமுத்துசுவாமி கனபாடிகள், ஸ்ரீஆனந்தாச்சாரியர் இணைந்து நடத்தித் தர உள்ளார்கள். கடன் பிரச்னை, வியாபாரத்தில் தடைகள், நல்லதொரு வேலை அமையாமை, வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்காத நிலை போன்றவற்றுக்கு நல்ல தீர்வு வேண்டும் அன்பர்கள் இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வேண்டிக்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

`சர்வ துக்க ஹரே தேவி மகாலட்சுமி நமஸ்துதே!'

பூக்களுடன் பிள்ளையார்!

பிள்ளையார்
பிள்ளையார்


திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதஸ்வாமி கோயிலின் தென்பிராகாரத்தில், சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார் சான்று விநாயகர். சிவனாரின் கட்டளைப்படி, ஸ்ரீநாகராஜா முதலில் அவரை வழிபட்டதற்குச் சான்றாக விளங்கியதால் ‘சான்று விநாயகர்’ எனப் பெயர் பெற்றாராம். சண்முக விநாயகர், நாகநாத கணபதி என்ற பெயர்களும் உண்டு. இவரை வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

நாகர்கோவில் அருகில் அமைந்துள்ள ஊர் ‘கோட்டார்’. இங்குள்ள ஸ்ரீதேசிக விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு தினமான சித்திரை முதல் நாளன்று மட்டும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாம்பழம் பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த வழக்கம் வேறு எங்கும் இல்லை.

எல்லா கோயில்களிலும் அங்குசம், பாசம், கோடரி, மோதகம், தந்தம் ஆகியவற்றுஅன் அருளும் பிள்ளையார், கடலூர் ஸ்ரீபாடலீஸ்வரர் கோயிலில் மலர்க் கொத்துகளுடன் அருள்பாலிக்கிறார். இங்கே அவர் பார்வதிதேவையை பாதிரி மலர்களால் பூஜித்தாராம். ஆகவே பாதிரி மலர்களை ஏந்திய நிலையில் பாதிரி விநாயகராக அருள்கிறார்.

- வி.பாரதி, சென்னை-55

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாசகர்களின் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப் படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism