Published:Updated:

ஸ்ரீஸூக்த ஹோமம்: விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீஸூக்த ஹோமம்

ஸ்ரீஸூக்த ஹோமம்: வியாபாரம் செழிக்க; தொழில் சிறக்க; கடன் தீர; சொத்து சேர; வெளிநாட்டு வாய்ப்பு கிட்ட; பதவி உயர்வு-சம்பள உயர்வு வேண்ட; குடும்பத்தில் தானே தலைமை ஏற்க என எல்லாவித வேண்டுதலையும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம்.

ஸ்ரீஸூக்த ஹோமம்: விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீஸூக்த ஹோமம்: வியாபாரம் செழிக்க; தொழில் சிறக்க; கடன் தீர; சொத்து சேர; வெளிநாட்டு வாய்ப்பு கிட்ட; பதவி உயர்வு-சம்பள உயர்வு வேண்ட; குடும்பத்தில் தானே தலைமை ஏற்க என எல்லாவித வேண்டுதலையும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம்.

Published:Updated:
ஸ்ரீஸூக்த ஹோமம்

மனிதர்கள் அன்னகோச மயமானவர்கள், அதனால் தங்களது உணவை, உயிர்ச் சத்தை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கிறார்கள். பித்ருக்கள் சூட்சும வடிவம் கொண்டவர்கள், அதனால் அவர்கள் தங்கள் தேவையை நாம் விடும் நீர் வழியாகப் பெற்றுக் கொள்கிறார்கள். தேவர்கள் எங்கும் நிறைந்த பிரம்மத்தின் அம்சமானவர்கள், அதனால் அக்னியின் வழியே தங்களுடைய ஆகுதியைப் பெற்றுக் கொண்டு நமக்கு ஆசிகள் வழங்குகிறார்கள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

ஸ்ரீஸூக்த ஹோமம்
ஸ்ரீஸூக்த ஹோமம்

இப்படி சகல தேவர்களும் தங்களுக்கான ஆகுதியைப் பெற்றுக் கொள்ளவே ஹோமங்கள் உருவாகின. இதில் திருமகளைப் போற்றும் ஸ்ரீஸூக்த ஹோமம் மிக மிக விசேஷமானது என்பார்கள். ஸௌந்தர்யலக்ஷ்மி, வீரலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, சந்தானலக்ஷ்மி, மேதா லக்ஷ்மி, வித்யா லக்ஷ்மி, கீர்த்தி லக்ஷ்மி, துஷ்டி லக்ஷ்மி, புஷ்டி லக்ஷ்மி, ஞான லக்ஷ்மி, சாந்தி லக்ஷ்மி, சாம்ராஜ்ய லக்ஷ்மி, ஆரோக்ய லக்ஷ்மி. அன்ன லக்ஷ்மி, ராஜ்ய லக்ஷ்மி, குபேர லக்ஷ்மி, நாக லக்ஷ்மி, கிருஹ லக்ஷ்மி, மோட்ச லக்ஷ்மி என அனைத்து லக்ஷ்மிகளும் என திருமகளின் அத்தனை வடிவங்களும் இன்பம் கொள்ளும் வேள்வி என்றால் அது ஸ்ரீஸூக்த ஹோமமே. திருமகளுக்கு விருப்பமான வரலட்சுமி விரதம், வெள்ளிக்கிழமை விரதம், வைபவலட்சுமி விரத, கோபூஜை, அட்சய திருதியை பூஜை போன்ற அத்தனை விரதங்களையும் மேற்கொண்ட பலன்களை இந்த ஒரு ஹோமமே அளித்துவிடும் என்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலோகங்களில் தங்கத்தில் லட்சுமி உறைகிறாள். அதனாலேயே திருமாங்கல்யம் தங்கத்தில் செய்யப்படுகிறது. அதனாலேயே தங்கத்தாலான ஆபரணங்களைக் காலில் அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அதுபோல மஞ்சள் மங்கலமான பொருள். சௌபாக்ய லட்சுமி மஞ்சளில் வாசம் செய்வதால் மஞ்சள் பூசிக் குளிப்பது பெண்களுக்கு சௌபாக்கிய வாழ்வைத் தரும் என்பார்கள்.

சுமங்கலி பெண்களின் தலை வகிட்டில் லட்சுமி உறைவதாக ஐதீகம். எனவேதான் சுமங்கலிப் பெண்கள் வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர். பூஜைகளின்போது சமர்ப்பிக்கப்படும் தாம்பூலத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். தாம்பூலம் அளிப்பது செல்வ வளத்தை அளிக்கும் என்பார்கள். ஸ்வஸ்திக் சின்னம், குடை, வெண் சாமரம், பூரணகும்பம், அடுக்கு தீபம், ரிஷபம், வலம்புரிச் சங்கு, ஸ்ரீவத்ஸம் போன்ற எட்டு பொருள்களிலும் லட்சுமி உறைவதால் இவை அஷ்ட மங்கலப் பொருட்கள் என்று போற்றப்படுகின்றன.

ஸ்ரீஸூக்தம்
ஸ்ரீஸூக்தம்

பால், தேன், தாமரை, தானியக் கதிர்கள், நாணயங்கள் என ஐந்திலும் திருமகள் வாசம் செய்வதால் இவை பஞ்சலட்சுமிகள் என்றும் போற்றப்படுகின்றன. பாலை குழந்தைகளுக்கும் தேனை பெண்களுக்கும் தாமரையை அர்ச்சனைக்கும் நாணயங்களை வறியவர்களுக்கும் தானியக் கதிர்களை பறவைகளுக்கும் தானமாகத் தர லட்சுமியின் திருவருள் ஸித்திக்கும்.

நெல்லி, துளசி, மாவிலை, வில்வம், தாமரை, வெற்றிலை போன்ற 6 தாவரங்களும் திருமகள் அருள் பெற்ற தெய்வீக மூலிகைகள். கடலில் இருந்து தோன்றுவதால் உப்பும் லட்சுமியின் வடிவமாகவே கருதப்படுகிறது. அதனால் இன்றும் முதல் தேதியன்று முதன் முதலில் கல் உப்பு வாங்கினால் திருமகள் அருள் கிட்டும் எனும் நம்பிக்கை நம்மிடையே உள்ளது. மேலும் உப்பை சிந்தக்கூடாது என்றும் கூறுகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி காணும் இடம்தோறும் நீக்கமறக் காட்சி அளிக்கும் நீலவண்ணனின் துணைவியை நெஞ்சில் வைத்துப் போற்ற நீங்காத செல்வமும் நிலையான புகழும் நீண்ட ஆயுளும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெறுவார் என்பது ஐதீகம். இதை உறுதி செய்யவே இந்த ஸ்ரீஸூக்த ஹோமத்தை உங்கள் சக்தி விகடன் நடத்த உள்ளது. இந்த ஸ்ரீஸூக்த ஹோமம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இந்த சிறப்பு வாய்ந்த ஹோமம் வரும் புரட்டாசி மாத பௌர்ணமி (20-9-2021) திங்கள்கிழமை நாளில், ஸ்ரீஸூக்த ஹோமம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் இந்த வைபவம் நடைபெற உள்ளது.

ஹோமம்
ஹோமம்

வியாபாரம் செழிக்க; தொழில் சிறக்க; கடன் தீர; சொத்து சேர; வெளிநாட்டு வாய்ப்பு கிட்ட; பதவி உயர்வு-சம்பள உயர்வு வேண்ட; குடும்பத்தில் தானே தலைமை ஏற்க என எல்லாவித வேண்டுதலையும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். குறிப்பாக அரசு பதவி-வேலை விரும்புவோர்களுக்கு இந்த ஹோமம் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்த ஸ்ரீஸூக்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நிச்சயம் உயர்வும் பெருமையும் அடைவர் என்பது நிச்சயம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism