Published:Updated:

ஸ்ரீசூக்த ஹோமம்: வைகுண்ட ஏகாதசியில் திருமகளைப் போற்றும் மாபெரும் வேள்வி! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீசூக்த ஹோமம்

ஸ்ரீசூக்த ஹோமம்: குபேரனை அதிகாரியாகக் கொண்டு நவநிதிகளையும் சகலருக்கும் அளிப்பவள் இவளே. ஜொலிக்கும் நிறத்தினள். நான்கு திசைகளும் யானைகளாகி, அதன் துதிக்கையால் அமிர்த கலசங்களால் அனவரதமும் அபிஷேகம் செய்விக்கப்படுபவள்.

ஸ்ரீசூக்த ஹோமம்: வைகுண்ட ஏகாதசியில் திருமகளைப் போற்றும் மாபெரும் வேள்வி! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீசூக்த ஹோமம்: குபேரனை அதிகாரியாகக் கொண்டு நவநிதிகளையும் சகலருக்கும் அளிப்பவள் இவளே. ஜொலிக்கும் நிறத்தினள். நான்கு திசைகளும் யானைகளாகி, அதன் துதிக்கையால் அமிர்த கலசங்களால் அனவரதமும் அபிஷேகம் செய்விக்கப்படுபவள்.

Published:Updated:
ஸ்ரீசூக்த ஹோமம்
திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், ஞாயிற்றுக் கிழமை வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது.
அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்
அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் பெருமாள்

வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் கருணை கொண்டவள் திருமகள். இவளை சரண் அடைந்தவருக்கு துன்பமே இல்லை. செந்தாமரையில் அமர்ந்து சங்கு சக்கரம் ஏந்திய திருமகளை சரண் அடைந்த ஜீவன்கள் எக்காலமும் துன்பம் கொள்வதில்லை என்கிறார்கள் ஆன்றோர்கள். தாமரை, வில்வம், நெல்லிக்கனி, இலந்தை, துளசி என இந்த ஐந்தின் அம்சமும் திருமகளே என்கின்றன ஞான நூல்கள். அண்டசராசரங்களையும் ஆட்டுவிக்கும் தேவியாம் ஆதிபராசக்தி எடுத்த தச மகாவித்யை ரூபங்களில் 10-வது வித்யையாக அவதரித்தவள் இந்த கமலாத்மிகா.

குபேரனை அதிகாரியாகக் கொண்டு நவநிதிகளையும் சகலருக்கும் அளிப்பவள் இவளே. ஜொலிக்கும் நிறத்தினள். நான்கு திசைகளும் யானைகளாகி, அதன் துதிக்கையால் அமிர்த கலசங்களால் அனவரதமும் அபிஷேகம் செய்விக்கப்படுபவள். ரத்னாபரணங்கள் பூண்டு, சிவப்பு பீதாம்பரம் உடுத்தி, மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு திருக்கரங்களில் அபய வரதம் அளிப்பவள். சர்வாலங்கார பூஷிதையாக சதா கருணை கொண்ட மனத்தினளாகக் காட்சி தருபவள் திருமகள்.

திருமகள்
திருமகள்

மங்கலங்கள் நிறைந்த எல்லா இடங்களிலும் திருமகள் நீக்கமற நிறைந்திருக்கிறாள் என்கின்றன புராணங்கள். சுடர்விடும் தீபத்தில் தீபலட்சுமியாக, ஏற்றும் தூபத்தில் பரிமள லட்சுமியாக, இல்லத்தில் கிரஹ லட்சுமியாக, நைவேத்தியத்தில் அன்ன லட்சுமியாக, மணிச் சத்தத்தில் வேதலட்சுமியாக, நெற்றியில் உள்ள திலகத்தில் பாக்கிய லட்சுமியாக, கருணை பொங்கும் இடத்தில் மகாலட்சுமியாக...இப்படி எல்லா இடங்களிலும் திருமகள் நிறைந்து எல்லா வகை செல்வங்களையும் அளிக்கிறாள் என்கின்றன புராணங்கள்.

தரித்திரம், நோய்நொடிகள், கவலை, அச்சம் எல்லாம் நீங்க இவளைச் சரண் அடைந்தால் நீங்கும் என்கின்றன ஞான நூல்கள். திருமகளைக் கொண்டாடும் உன்னத வழிபாடுகளில் ஸ்ரீசூக்த ஹோமம் சிறப்பானது என்பார்கள். வேதத்தின் ஒரு அங்கமாக விளங்குவது ஸ்ரீசூக்தம்.

'ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண ரஜ தஸ்ராஜாம்' எனத் தொடங்கும் ஸ்ரீஸூக்தத்தின் பொருள்...

சகலரும் அறிந்த அக்னி பகவானே! தங்க நிறம் கொண்டவளும், பாவங்களை அழிப்பவளும், பொன் ஆபரணங்களை அணிந்தவளும், மகாலட்சுமி என அழைக்கும் திருமகளை என் அகத்தில் எழுந்தருள செய்வாய். அஷ்ட ஐஸ்வர்யங்களும் அருளும் திருமகளை என்னிடம் இருந்து எப்போதும் விலகாதிருக்க செய்ய வேண்டுகிறேன்! என ஆரம்பிக்கும். இதை அன்றாடம் பாராயணம் செய்தால் அந்த வீட்டில் செல்வவளம் சேர்ந்து கொண்டே இருக்கும். இதை ஹோமத்தில் உச்சரிக்க கூடுதல் நன்மை என்கிறார்கள். ஸ்ரீசூக்த ஹோமத்தை நடத்தினாலோ அதில் கலந்து கொண்டாலோ அவர்கள் விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.

நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்
நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

வில்வம், தாமரை, விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் திருமகள் மகிழ்வாள் என்றும் அதனால் நீங்கள் வேண்டி விரும்பும் சகல ஐஸ்வர்யங்களையும் அளிப்பாள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியம், திருமண வரம், மகப்பேறு, தனம், தான்யம், மகப்பேறு, கால்நடைகள், நிலம், சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு வாய்ப்பு, விரும்பிய வேலை யாவும் அருள்வாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

புகழ்மிக்க இந்த ஹோமத்தை சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் வளத்துக்காகவும் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து சக்தி விகடன் ஸ்ரீசூக்த ஹோமத்தை நடத்த உள்ளது. சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சகல சௌபாக்கியங்களும் வேண்டி இந்த ஹோமத்தை நடத்த இருக்கிறோம்.

திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. நல்லியக்கோடன் எனும் சங்க கால மன்னனின் பக்திக்கு மெச்சிய திருமால், இந்த ஆலயத்தில் அவனது குறைகளை நீக்கி வெற்றியை அளித்தாராம். இங்கு அலமேலு சமேத ஸ்ரீனிவாசப் பெருமானாக எழுந்தருளி இருக்கும் திருமால் கேட்ட வரங்களை அருளும் வரப்ரசாதியாக வீற்றிருக்கிறார். இங்கு திருமகள் ஸ்ரீஅலமேலு மங்கையாக எழுந்தருளி இருக்கிறார். அவரை எண்ணி இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் கலந்து கொண்டால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்
நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.