திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் (1-1-2023) புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசிக்கு முந்திய புண்ணிய வேளையில், வளர்பிறை தசமி நாளில் அசுவினி நட்சத்திர வேளையில், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது.
நல்லியக்கோடன் எனும் சங்க கால மன்னனின் பக்திக்கு மெச்சிய திருமால், இந்த ஆலயத்தில் அவனது குறைகளை நீக்கி வெற்றியை அளித்தாராம். இங்கு அலமேலு சமேத ஸ்ரீனிவாசப் பெருமானாக எழுந்தருளி இருக்கும் திருமால் கேட்ட வரங்களை அருளும் வரப்ரசாதியாக வீற்றிருக்கிறார். இங்கு திருமகள் ஸ்ரீஅலமேலு மங்கையாக எழுந்தருளி இருக்கிறார். அவரை எண்ணி இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் கலந்து கொண்டால் சகல வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

அபூர்வ மலர்கள், விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் மகாலட்சுமி மகிழ்வாள் என்றும் அதனால் நீங்கள் வேண்டி விரும்பும் சகல ஐஸ்வர்யங்களையும் அளிப்பாள் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஆரோக்கியம், திருமண வரம், மகப்பேறு, தனம், தான்யம், மகப்பேறு, கால்நடைகள், நிலம், சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு வாய்ப்பு, விரும்பிய வேலை யாவும் அருள்வாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404
முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.
புகழ்மிக்க இந்த ஹோமத்தை சக்தி விகடன் வாசகர்களாகிய உங்கள் குடும்ப க்ஷேமத்துக்காகவும் உங்கள் சுற்றத்தார் வளத்துக்காகவும் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து சக்தி விகடன் ஸ்ரீசூக்த ஹோமத்தை நடத்த உள்ளது. சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சகல சௌபாக்கியங்களும் வேண்டி இந்த ஹோமத்தை நடத்த இருக்கிறோம். திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் ஸ்ரீஅலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் மிகப் பழைமையானது. சங்ககாலம் தொட்டே இருந்து வருவது. அக்காலங்களில் திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்தே வழிபாடும் பரிகாரமும் செய்து வருவது வழக்கமாம்.
அன்னை மகாலக்ஷ்மியின் ஸ்சூக்த மந்திரம் செல்வத்தைப் அள்ளிக் கொடுக்கும் அற்புதமாகக் கருதப்படுகிறது. அஷ்ட ஐஸ்வர்யங்களை மட்டுமில்லாமல் குடும்ப நிம்மதி, ஒற்றுமை யாவும் அருள்பவளும் மகாலட்சுமியே. மகாலட்சுமியை வழிபடும் முறைகளில் மிகச் சிறந்தது ஸ்ரீசுக்த மந்திர பாராயணம்.

இந்திரன் மகாலட்சுமியை வணங்கியே அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவதத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார். ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் உள்ளிட்ட மஹாஞானிகள் கூட நல்ல காரியங்களுக்காக செல்வத்தை வேண்டிப் பெற்றனர் என்கின்றன புராணங்கள். நம்மாழ்வார் 'அகலகில்லேன் இறையும்' என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார். விக்ரமாதித்யன் இழந்த தனது செல்வங்களை, திருமகளை வேண்டியே திரும்பப் பெற்றான் என்கின்றன ஞான நூல்கள்.
எனவே தங்களது விருப்பங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்று வருந்தும் அன்பர்கள் யாவரும் இந்த புனித வழிபாட்டில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் நிச்சயமாக திருமகளின் அருள் பெற்று ஆனந்தமும் ஆரோக்கியமும் ஐஸ்வர்யமும் பெறுவார்கள் என்பது உறுதி.

வாசகர்கள் கவனத்துக்கு:
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404