சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும்

சூக்த ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
சூக்த ஹோமம்

சூக்த ஹோமம்

அபூர்வ மலர்கள், விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு லட்சுமி தேவியை வேண்டிச் செய்யப்படுவது சூக்த ஹோமம். அந்த அன்னை இந்த ஹோமத்தால் மகிழ்வாள்; நீங்கள் விரும்பும் சகல வரங்களை யும் அளிப்பாள் என்கின்றன வேதங்கள்.

சூக்த ஹோமம்
சூக்த ஹோமம்


ஆம்! திருமகளைப் போற்றி வணங்கும் வழிபாடு சூக்த ஹோமம். அற்புதமான இந்த ஹோமம், புத்தாண்டு தினத்தன்று (1.1.23) திண்டிவனம், நல்லியக்கோடன் நகர் அலமேலுமங்கை சமேத னிவாசப் பெருமாள் கோயிலில் நடைபெற்றது.

நல்லியக்கோடன் எனும் சங்க கால மன்னனின் பக்திக்கு மெச்சிய திருமால், இந்த தலத்தில் அவனுடைய குறைகளை நீக்கி வெற்றியை அளித்தாராம். ஈராயிரம் ஆண்டு களைக் கடந்த மிகத் தொன்மையான ஆலயம் இது; `நடுநாட்டுத் திருப்பதி' எனச் சிறப்பிக்கப் படுவது. திருப்பதிக்குச் சென்று பிரார்த் தனையை நிறைவேற்ற இயலாதவர்கள், இங்கு வந்து தங்களின் வேண்டுதல் வழிபாடு களைச் செய்து கொள்ளலாம் என்கிறது தல வரலாறு. `இந்தத் தலத்தை ஒருமுறை தரிசித் தாலே போதும்; தாயார் மற்றும் பெருமாளின் அருளால் நம் இல்லத்தில் செல்வகடாட்சம் பொங்கிப் பெருகும்' என்கிறார்கள் பக்தர்கள்.

நம் வாசகர்களும் இவ்வூர் பெருமாளின் திருவருளைப் பெற்றுச் சிறக்கும் விதமாக புத்தாண்டு தினத்தில் சக்தி விகடன் சார்பில் இந்த ஆலயத்தில் சூக்த ஹோமம் நடை பெற்றது. காலை 10 முதல் 12:30 மணி வரை நடைபெற்ற இந்த ஹோமத்தில், சங்கல்ப முன்பதிவு செய்திருந்த அனைவருக்காகவும் விசேஷ பிரார்த்தனை செய்யப்பட்டது.

உள்ளூர் பக்தர்கள் மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினரின் சிறப்பான ஏற்பாடுகளுடன் விசேஷ அபிஷேக ஆராதனைகள் அற்புதமாக நடைபெற்றன. வழிபாட்டில் சமர்ப்பிக்கப் பட்ட வாசகர்கள் அனைவரின் பிரார்த்தனை களும் அலமேலுமங்கை சமேத னிவாசப் பெருமாள் அருளால் விரைவில் நிறைவேறும்!