Published:Updated:

முதலுக்கே மோசம் வந்ததே!

கருடன்
பிரீமியம் ஸ்டோரி
கருடன்

ஸ்ரீவேதாந்த தேசிகரின் சரித்திரம்

முதலுக்கே மோசம் வந்ததே!

ஸ்ரீவேதாந்த தேசிகரின் சரித்திரம்

Published:Updated:
கருடன்
பிரீமியம் ஸ்டோரி
கருடன்

ஸ்ரீநிவாஸனின் திருமணி அம்சமாகப் பிறந்தவர் ஸ்ரீவேதாந்த தேசிகர். இவருக்கு அப்புள்ளார் முதன்முதலில் கருட மந்திரத்தை உபதேசம் செய்தார். திருவந்திபுரத்தில் ஒளஷதகிரி எனும் இடத்தில் கருட மந்திரத்தை பலகாலம் உச்சாடனம் செய்ததால், கருடன் தேசிகருக்கு தரிசனம் தந்து ஹயக்ரீவ மந்திர உபதேசம் செய்து, தேசிகர் விருப்பப்படி அவரது நாக்கில் குடிகொண்டார் என்கிறது தேசிகரின் சரித்திரம்.

கருடன்
கருடன்


ஒருமுறை அவர் காஞ்சியில் வசித்தபோது, அவர் மீது பொறாமை கொண்ட சிலர் ஒரு பாம்பாட்டியை அழைத்து வந்து அவர் மீது கொடுமையான 7 நாகங்களை ஏவிவிட்டனர். பகவானை துதித்த தேசிகர், தரையில் ஒரு கோடு கிழித்து `பாம்புகள் இந்தக் கோட்டைத் தாண்டட்டும் பார்க்கலாம்' என்றார்.

விஷப் பாம்புகள் கோட்டைத் தாண்ட முயன்றபோது, தேசிகர் உச்சரித்த கருட மந்திரங்களைக் கேட்ட கருடன் பறந்து வந்து அத்தனை பாம்புகளையும் தூக்கிச் சென்றார். இறுதியாக அந்த பாம்பாட்டி சங்க பாலன் எனும் கொடிய நாகத்தை ஏவினான். அது கோட்டினைத் தாண்டி தேசிகரை நெருங்கியது. அப்போதும் தேசிகர் பகவானைத் துதிக்க, விஷ்ணு வாகனமான கருடன் தோன்றி பாம்பை அழித்தார்.

அதிர்ந்துபோன அந்தப் பாம்பாட்டி ``சுவாமி! தீயவர்கள் தருவதாகச் சொன்ன பொருளுக்கு ஆசைப்பட்டு முதலுக்கே மோசம் போனேன்! இந்தப் பாம்புகள் இல்லாவிட்டால் எனக்குப் பிழைப்பே இல்லை. எனவே கருணைகூர்ந்து என் பாம்புகளை மீண்டும் தாருங்கள்!'' என்று மன்றாடி தேசிகரின் காலில் விழுந்தான்.

கருணைக்கடலான தேசிகரும் மனம் குளிர்ந்து கருடனைத் துதித்துப் பாடினார். அதனால் மகிழ்ந்த கருடன், மீண்டும் அந்தப் பாம்புகளை வரவழைத்துக் கொடுத்தார். சர்ப்ப தோஷங்கள் கொண்டவர்கள், பாம்புக் கனவுகளால் அவதிப்படுவோர் கருடனை மட்டுமல்ல, வேதாந்த தேசிகரை வணங்கினாலும் நிவர்த்தி பெறலாம் என்பது நம்பிக்கை.

-எஸ். ஸ்ருதி, சென்னை-4