Published:Updated:

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: திருமகளின் அருள் பெற, செல்வ கடாட்சம் பெருக நீங்களும் சங்கல்பியுங்கள்!

லட்சுமி குபேர ஹோமம்

பருத்த உடல், சரிந்த தொந்தி, சிரித்த வதனம் என அழகிய தோற்றம் கொண்டவர் குபேரன். குபேர பட்டினமான அளகாபுரி அத்தாணி மண்டபத்தில் மீனாசனத்தில் தாமரை மலர் மெத்தை மீது அமர்ந்து இருப்பவர்

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்: திருமகளின் அருள் பெற, செல்வ கடாட்சம் பெருக நீங்களும் சங்கல்பியுங்கள்!

பருத்த உடல், சரிந்த தொந்தி, சிரித்த வதனம் என அழகிய தோற்றம் கொண்டவர் குபேரன். குபேர பட்டினமான அளகாபுரி அத்தாணி மண்டபத்தில் மீனாசனத்தில் தாமரை மலர் மெத்தை மீது அமர்ந்து இருப்பவர்

Published:Updated:
லட்சுமி குபேர ஹோமம்

வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடைபெற உள்ளது.

லட்சுமி குபேர ஹோமம்
லட்சுமி குபேர ஹோமம்

செல்வத்துக்கு அதிபதி திருமகள் என்றால், அதை சீராக விநியோகித்துக் கண்காணிப்பவர் குபேரர். சங்கம், பத்மம், மஹாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், நீலம், பத்மினி ஆகிய ஒன்பது நிதிகளைக் கொண்டு உலகம் யாவையும் செல்வ கடாட்சத்தோடு விளங்கச் செய்பவர் ஸ்ரீகுபேரர். எண்திசை பாலகர்களில் ஒருவரான இவர் பெருமாளுக்கே கடன் தந்து திருமணம் நடத்த உதவியவர் என்று நீங்கள் அறிந்து இருக்கலாம்.

பருத்த உடல், சரிந்த தொந்தி, சிரித்த வதனம் என அழகிய தோற்றம் கொண்டவர் குபேரன். குபேர பட்டினமான அளகாபுரி அத்தாணி மண்டபத்தில் மீனாசனத்தில் தாமரை மலர் மெத்தை மீது அமர்ந்து இருப்பவர். அபயமுத்திரை, சங்க, பதும நிதிகளுடன் முத்துக் குடையின் கீழ் மனைவி சித்திரலேகா எனும் யட்சியுடன் எழுந்தருள்பவர் குபேரன். நளகூபன், மணிக்ரீவன் என்ற இரு மகன்களும் இவருக்கு உண்டு.

லட்சுமி
லட்சுமி


செல்வத்தின் மூலபண்டாரமாக இவர் விளங்கினாலும் திருமகளின் அருள் இன்றி இவரிடம் செல்வம் அடைய முடியாது என்றே புராணங்கள் கூறுகின்றன. திருமகளையும் குபேரனையும் ஒருசேரப் போற்றும் உயர்ந்த வழிபாடு தான் ஸ்ரீலட்சுமி குபேர ஹோமம் என்று நீங்கள் அறிந்து இருக்கலாம். வேண்டியதை அருளும் கற்பக விருட்சம் போன்றவை ஹோமங்கள், நாம் விரும்புவதை அக்னி தேவனின் வழியேக் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு அறிவித்து அடையச் செய்பவை ஹோமங்கள். உலகத்தைப் படைத்தபோதே பிரமன் ரிஷிகளுக்கு ஹோமங்கள் செய்யும் நியம நிஷ்டைகளை அளித்தார் என பகவத் கீதை ஸ்லோகம் ஒன்று கூறுகிறது.

நமது வேதங்களில் 400-க்கும் மேற்பட்ட ஹோமங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன என்கிறார்கள் பெரியோர்கள். இதில் ஸ்ரீலட்சுமி குபேரனுக்கு செய்யப்படும் ஹோமங்கள் நவ நிதிகளையும் அள்ளித்தரும் ஆற்றல் கொண்டவை. குபேர ஹோமங்கள் வீட்டில் செய்வதைவிடவும் லட்சுமி, குபேரர் வீற்றிருக்கும் ஆலயங்களில் செய்வது இன்னும் சிறப்பானது என்பர்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்


சென்னையை அடுத்த அரக்கோணம் பருத்திபட்டூரில் எழும்பியுள்ளது பிரசித்தி பெற்ற ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம். அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த ஆலயமே உள்ளது. இங்கு ஸ்ரீமகாலட்சுமி 84 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீகுபேரரும் அவர் மனைவி சித்ரலேகா அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி உள்ளார்கள். 3 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஆலயம் செல்வ விருத்தி தலமாகவும் கடன் நிவர்த்தி தலமாகவும் விளங்கி வருகிறது.

அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்
அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலயம்


இங்கு சொர்ணாகர்ஷண பைரவரும், அஷ்ட லட்சுமியரும், சரஸ்வதி, விநாயகப்பெருமான், முருகப்பெருமான், நவகிரக சந்நிதிகளும் அமைந்துள்ளன. இங்கு திருமகள் புஷ்பவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு சேவை சாதித்து வருகிறார். திருப்பதி, சோளிங்கர் செல்லும் புனித யாத்திரீகர்கள் எல்லோரும் வணங்கிச் செல்லும் இந்த ஆலயத்தில் லட்சுமி குபேரரை வணங்குவது மிகவும் சிறப்பு என்கிறார்கள் ஊர் மக்கள்.

இந்த சுபகிருது ஆண்டில் கடந்த இரு ஆண்டுகளில் தொடர்ந்த பொருளாதாரச் சிக்கல்கள் யாவும் தீர்ந்து நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது. அதற்கேற்ப உங்கள் நன்மைக்காக சக்தி விகடனும் அரக்கோணம் ஸ்ரீலட்சுமி குபேரர் ஆலய நிர்வாகமும் இணைந்து ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம் நடத்த உள்ளோம். வரும் 18-9-2022 ஞாயிறு, புரட்டாசி மாதம் முதல் நாளில் மத்யாஷ்டமி, லட்சுமி பூஜை தினமான சுபயோக தினத்தில் காலை 10.30 தொடங்கி 12 மணி வரை இந்த மஹாஹோமம் நடைபெற உள்ளது. கடன்கள் தீர்ந்து வியாபார விருத்தி உண்டாகவும், தொழில் வளம், உத்தியோக உயர்வு, உத்தியோகப் பிராப்தி, வெளிநாட்டு யோகம் யாவும் கிடைத்து செல்வவளம் சேரவும் இந்த ஹோமம் வழி வகுக்கும் என்பதில் ஐயம் இல்லை. திருமகளின் அருளாலும் குபேர பகவானின் கடாட்சத்தாலும் உங்கள் வறுமை நீங்கி செல்வச்செழிப்பு உண்டாகும். இங்கு வந்து வேண்டிக் கொண்டவர் பலரும் தங்கள் துயரங்கள் நீங்கி சுபீட்சம் கண்டதை இன்றும் சத்திய சாட்சியாக கூறியும் வருகிறார்கள்.

சொந்த வீடு, வாகன வசதிகள் நிறைவேறவும், அதிகாரம் பெருகவும், ராஜயோகப் பலன்கள் உண்டாகவும் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வது சிறப்பு. அரிய வகை மூலிகைகள், சமித்துக்கள், திரவியங்கள் கொண்டு செய்யப்படும் இந்த ஹோமத்தால் உங்கள் இன்னல்கள் யாவும் தீரும். சகல தோஷங்களும் நீங்கும் என்பது உறுதி. மேலும் ஹோமத்தோடு அபிஷேகங்கள், ஆராதனைகளும் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்து கொண்டு சகலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபட்டு ஐஸ்வரியங்களைப் பெற அன்போடு அழைக்கிறோம்.

ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்
ஸ்ரீராஜலட்சுமி குபேர ஹோமம்


வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.