Published:Updated:

கோகுலாஷ்டமிக்கு லண்டனிலிருந்து ஊர் திரும்பும் கிருஷ்ணர்!

சி.வெற்றிவேல்

தமிழகத்திலிருந்து சிலைக் கடத்தல் திருடன் சுபாஷ் கபூரால் கடத்தப்பட்ட நாயக்கர் கால கிருஷ்ணர் இந்தியா திரும்புகிறார்.

கிருஷ்ணர்
கிருஷ்ணர்

இங்கிலாந்தில் நடைபெற்ற சுதந்தர தின விழாவில், இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்குச் சட்ட விரோதமாகக் கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மற்றும் புத்த ஸ்தூபி ஆகியவற்றை இங்கிலாந்து அரசு இந்தியாவிடம் திருப்பி ஒப்படைத்திருக்கிறது. இவை இரண்டும் சிலைக் கடத்தல் திருடன் சுபாஷ் கபூரால் கடத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டன்
லண்டன்

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கிருஷ்ணர் சிலை கி.பி 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்தில் செய்யப்பட்ட வெண்கலச் சிலையாகும். இதன் உயரம் ஆறு இன்ச் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணர் சிலையோடு மீட்கப்பட்டிருக்கும் புத்த ஸ்தூபி கி.மு 1 - கி.பி 1 நூற்றாண்டுக்கு இடைப்பட்டது. இது லைம்ஸ்டோன் பாறையால் செய்யப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூணாகும். இந்தப் புத்த ஸ்தூபி ஆந்திரப் பிரதேசம், வட்டமானு பகுதியைச் சேர்ந்ததாகும்.

லண்டன் கிருஷ்ணர்
லண்டன் கிருஷ்ணர்

இந்தப் பகுதியிலிருந்து திருடப்பட்ட பல்வேறு தூண்கள் உலகின் பல்வேறு அருங்காட்சியகங்களிலும் காட்சிப் பொருளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை ஏன்?

இந்தியாவைச் சேர்ந்த இந்த இரண்டு தொல்லியல் சின்னங்களையும் லண்டனைச் சேர்ந்த மெட்ரோபொலிடியன் போலீஸார் இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். கடந்த வருடம் புத்தர் சிலையை மீட்பதில் முக்கியப் பங்கு வகித்த இந்தியா பிரைட் பிராஜக்ட்டின் விஜயகுமார்தான் இந்த இரண்டு தொல்லியல் சின்னங்கள் மீட்பிலும் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணர் சிலை
கிருஷ்ணர் சிலை

இது குறித்துப் பேசிய அவர், ``நாளந்தா புத்தர் சிலை மற்றும் கிருஷ்ணர் சிலைகள் மட்டுமல்லாமல் சுபாஷ் கபூரால் கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தையும் மீட்க வேண்டும்” என்று தெரிவித்தார்.