Published:Updated:

ஆன்மிகக் கதைகள் தகவல்கள்!

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

வாசகர் பகிர்வுகள்

இந்தச் சந்நிதியில் இறைவன் இல்லை

போஜ ராஜனைப் பார்ப்பதற்கு, கவி ஒருவர் நீண்டநாட்களாக முயன்று கொண்டிருந்தார். காவலாள் ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணத்தைச் சொல்லி அவரைத் தடுத்து வந்தான்.

ஆன்மிகக் கதைகள் தகவல்கள்!

ருநாள், அரசன் உள்ளூர்க் கோயிலுக்குச் சென்றிருந்த நேரத்தில், கவியும் அங்கே போனார். கோயிலில் எல்லோருக்குமே அந்தக் கவியின் புலமையில் மோகம் உண்டு. எனவே, அவரை உள்ளே அனுமதித்தார்கள்.

அரசன் சிவபெருமானைத் துதித்துக்கொண்டிருந்தபோது, கவி அவருக்குப் பின்னால் போய் நின்றார். குருக்கள் ஆரத்தி எடுத்தார். அப்போது கவி, ‘அங்கே சிவபெருமான் இல்லை!’ என்று கத்தினார். பின்னாலிருந்து வந்த ஒலியைக் கேட்டு அரசன் திடுக்கிட்டான்.

கவியைத் திரும்பிப் பார்த்து, ``எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?’’ என்று கண்டிப்போடு கேட்டான். `‘வெகு நாளைக்கு முன்பே சங்கரனார் தமது உடலில் பாதியை நாராயணனுக்குக் கொடுத்துவிட்டார். மற்றொரு பாதியை மலைமகளுக்குக் கொடுத்துவிட்டார். அதனால் அவருடைய அடையாளத்தைச் சுட்டிக்காட்ட ஏதுமில்லை!’’ என்றார் கவி.

``அவர் தலையில் இருந்த கங்கை எங்கே போயிற்று?’’ என்று போஜ ராஜன் கேட்டான். ‘`அது கடலில் கலந்துவிட்டது!’’ என்றார் கவி.

உடனே ராஜா, ``அவர் தலையில் அணியாகத் திகழ்ந்த வெண்மதி என்னவாயிற்று?’’ என்று கேட்டார். அதற்குக் கவி, `‘அது வானத்துக்குச் சென்று, இப்போது அங்கேயே நிலவுகிறது!’’ என்றார்.

உடனே போஜராஜன், ``ஆனால், அவருடைய சக்தி மட்டும் கட்டாயம் இருக்க வேண்டுமே?’’ என்றார்.

``அதுவும் இல்லை! அதையும் அவர் தங்களுக்குத் தந்துவிட்டாரே!’’ என்றார் கவி.

கவியின் இந்த பேச்சைக் கேட்டு அரசன் போஜராஜன் மகிழ்ந்து, புன்னகை பூத்தபடியே, ‘`எல்லாம் போனாலும் அவருடைய பிச்சைப் பாத்திரம் மட்டும் அவசியம் இருக்குமே!’’ எனக் கேட்டார்.

கவி சொன்னார்: ``அதுவும் அவரிடம் இல்லை! அதை அவர் எனக்குத் தந்துவிட்டார்!’’

இதன் மூலம் கவியின் வறுமையை உணர்ந்த போஜராஜன், அவரது வறுமையை அறவே துடைத்து, அவருடைய காவியம் மலரவும் வழி செய்தான். எதையும் பக்குவமாகச் சொன்னால், உருகாத மனத்தையும் உருக வைத்துவிடலாம். மட்டுமன்றி, எப்போதும் ஒருவரிடம் கருத்துச் சொல்கிறபோது, சாதகங்களை முதலில் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு பாதகங்களைச் சொல்ல வேண்டும். அப்போதுதான், எதிராளி நம் கருத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்வார். இந்தக் கதை அதற்குச் சான்று!

- கே.சூரியகலா, விருதுநகர்

ஆன்மிகக் கதைகள் தகவல்கள்!

பெரிய ஐயப்பன்!

மிழகமெங்கும் சிற்றூர்களில் ஐயனார் வழிபாடு ஆதிகாலம் தொட்டு வழக்கத்தில் உண்டு. எனினும், சபரிமலை ஐயப்பனின் திருவடிவிலேயே திகழும் ஐயப்பனின் விக்கிரகம் தமிழகத்தில் முதன்முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எங்கு தெரியுமா

சென்னை-பாரிமுனையில் உள்ள அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயிலில்தான். சபரிநாதனை விடவும் உருவில் சற்றுப் பெரியவராகத் திகழும் இங்குள்ள ஐயனை, பெரிய ஐயப்பன் என்று சிறப்புடன் அழைப்பார்கள் பக்தர்கள்

செங்கோட்டையிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள குளத்துப் புழை கோயிலில் பாலகனாகக் காட்சி தருகிறார் ஐயப்பன்.

திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பட்டூர் திருத்தலத்தில் கையில் சுவடி ஏந்தியபடி, ஆயக் கலைகளைக் கற்பிப்பவராக அருள்கிறார் ஐயன். தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்குமுன், இந்த ஐயனின் சந்நிதிக்கு அவர்களை அழைத்துவந்து வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

- அரவிந்த், கோவை-3

ஆன்மிகக் கதைகள் தகவல்கள்!

புஷ்கலா திருக்கல்யாணம்!


நேபாளத்தை ஆட்சிசெய்த மன்னர் ஒருவரின் பெயர் பலிஞன். மந்திர தந்திரங்களில் சிறந்தவர். கன்னிப் பெண் ஒருத்தியைக் காளிதேவிக்குப் பலியிட்டால் முதுமையை வெல்லலாம் என்பதை அறிந்தார். அவரின் ஆணைக்கிணங்க கன்னிப் பெண் ஒருத்தி பலிக்குத் தயார் செய்யப்பட்டாள்.

அவள் சிவபக்தை. பலி பீடத்தில் அமர்த்தப்பட்டபோதும் சிவனாரையே தியானித்தாள். அவளைக் காக்கும்படி சாஸ்தாவைப் பணித்தார் சிவபெருமான். அதன்படி அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அருளினார் சாஸ்தா. ஆனாலும் அவர் தன் உருவை வெளிக்காட்டவில்லை.

பலிஞன் ஏதேதோ மந்திரங்கள் செய்தும், பெண்ணைக் காப்பாற்றியது யாரென்று அவரால் அறியமுடியவில்லை. அப்போது தன்னை வெளிப்படுத்திய சாஸ்தா அன்பே உருவான அன்னைக்கு பலியிடுதல் தவறு என்று மன்னனுக்குப் புரியவைத்தார். சாஸ்தாவை வணங்கித் துதித்த பலிஞன், தன் மகளைத் திருமணம் செய்து அருள வேண்டும் என வேண்டினார். அதன்படி அவரின் மகள் புஷ்கலாவை மணந்தார் சாஸ்தா.

கறுத்த திருமேனி கொண்டவளும் சாஸ்தாவின் இடப்புறம் அமர்ந்து அருள்பவளுமான புஷ்கலாதேவியை தியானித்து வணங்குவோம். சாஸ்தாவின் அருள் பெறுவோம்.

- பி.பரசுராம், சென்னை-67

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆன்மிகக் கதைகள் தகவல்கள்!

குளவியும் சீதையும்!

ப்போதும் இறைச் சிந்தையில் லயித்திருந் தால் இறைத்தன்மையை அடையலாம் என்பது ஞானநூல்கள் தரும் வழிகாட்டல்.

அசோக மரத்தடியில் அமர்ந்திருந்த சீதாதேவி ஆச்சரியத்துடன் ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மரக் கிளையில் ஒரு குளவி, சின்னஞ்சிறு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து, அதைத் தன் கொடுக்கால் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருந்தது.

அருகிலிருந்த திரிசடையிடம் சீதை கேட்டார்: ``திரிஜடா! என்ன செய்கிறது இந்தக் குளவி?’’

‘`தாயே! அந்தக் குளவி புழுவைக் கொட்டிக் கொட்டி, ஒரு கட்டத்தில் அதைத் தன்னைப் போன்றதொரு குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால், அந்தப் புழு தானும் குளவி யாகவே உருமாறி விடும்!’’ என்றாள் திரிசடை.

இதைக்கேட்டு சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்த சீதாதேவி மெள்ள கேட்டார்... ‘`அடியே திரிசடை! நான் எப்போதும் ஸ்ரீராமனையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனில், நானும் விரைவில் ராமனாகவே மாறிவிடுவேனா? அப்போது உலகில் இரண்டு ராமர்கள் அல்லவா இருப்பார்கள்?’’

திரிஜடை கலகலவெனச் சிரித்தபடி சொன்னாள்: ‘`அப்போதும் உலகில் ஒரே ஒரு ராமர்தான் இருப்பார். அம்மா! நீங்கள் ராமராக உருமாறியது போன்று, உங்களையே எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கும் ராமர், சீதா தேவியாக உருமாறிவிடுவார், இல்லையா?!’’

- பி.சங்கரி, திருநெல்வேலி-1