Published:Updated:

வேலையில் மட்டுமே கவனம்!

ஶ்ரீஅகத்தியர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஅகத்தியர்

- சி.நாகராஜ்,

வேலையில் மட்டுமே கவனம்!

- சி.நாகராஜ்,

Published:Updated:
ஶ்ரீஅகத்தியர்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீஅகத்தியர்

ஒரு காட்டில் யானை ஒன்று, மரத்தின் இலைகளைப் பறித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது ஒரு வண்டு அதன் காதுப்புறமாகப் பறந்து ரீங்காரம் செய்தது. யானை அதை லட்சியம் செய்யாமல், இலைகளைச் சாப்பிடுவதில் கவனமாக இருந்தது.

வேலையில் மட்டுமே கவனம்!

னால், வண்டு மீண்டும் மீண்டும் சத்தமிட்டபடியே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பொறுமை இழந்த யானை ஒரு கட்டத்தில் வண்டைப் பார்த்து, ‘`நீ ஏன் இப்படி அமைதியில்லாமல் சத்தமிட்டபடி பறந்துகொண்டிருக்கிறாய்?’’ என்று கேட்டது.

அதற்கு வண்டு, ‘`நான் இங்கே பார்க்கும் பொருளையெல்லாம் விரும்புகிறேன். பல வண்ணப் பூக்களை நுகர்கிறேன். அவற்றில் தேன் குடித்து மகிழ்கிறேன். எனவே, உற்சாக மிகுதியில் ரீங்காரம் செய்கிறேன். அது சரி, நீ எப்படி இவ்வளவு இரைச்சலுக்கிடையேயும் அமைதியாக இருக்கிறாய்?’’ என்று கேட்டது.

‘`என் புலன்கள் என்னை ஆட்டிப்படைக்க நான் அனுமதிப்பது இல்லை. செய்யும் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறேன். இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். அதில் மட்டும் நான் கவனம் செலுத்துகிறேன். ஆதலால், அமைதி யாக இருக்கிறேன்’’ என்றது யானை. புலன்களை அடக்கிச் செயல் புரிந்தவன், அமைதியும் நிம்மதியும் நிச்சயம் பெறுவான்.

வேலையில் மட்டுமே கவனம்!

அகத்தியர் தந்த பாடம்!

சிவனாரின் ஆணைப்படி, பூமியை சமநிலைப்படுத்த தெற்கு நோக்கி வந்தார் அகத்தியர். வழியில், விந்தியமலை தடையாக நின்றது. ஆணவம் மிக்க விந்தியன், தன் பெயரைச் சொல்லி வணங்கினால் வழிவிடுவதாகக் கூறினான். இறைவனுக்கு மட்டுமே தலைவணங்கும் அகத்தியருக்கு இது பிரச்னையாக அமைந்தது. விந்தியனை வணங்காமல், அவனது கர்வத்தை அடக்கி மலையைத் தாண்டுவதுதான் பிரச்னைக்குத் தீர்வு. மலையைச் சிறிதாக்க அவர் நினைக்கவில்லை. அவரே விஸ்வ ரூபம் எடுத்தார். விந்தியமலை அவர் பாதத்தைவிட சின்னதாகப் போயிற்று. ஒரே எட்டில் மலையைத் தாண்டிச் சென்றார். விந்தியன் மலைத்து நின்றான். ஆணவம் நீங்கி, அகத்தியர் அடிபணிந்தான்.

பிரச்னைகள் மலைபோல் நிற்கும்போது, அதை ஒழிக்கவோ, சிறிதாக்கவோ முயலாதீர்கள். உங்கள் சக்தியைப் பெரிதாக்கும் வழியைத் தெரிந்துகொள்ளுங்கள். மலையளவு பிரச்னையும் கடுகளவாகிப் போகும்!