Published:Updated:

சிந்தனை விருந்து! - புத்தகம் என்ன செய்யும்?

சிந்தனை விருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனை விருந்து!

1953-ல் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி என்பவரால் எழுதப்பட்ட நாவல் `ஃபாரன்ஹீட் 451.

`ஒரு புத்தகம் வாங்க நீங்கள் செலவழிக்கும் காசைக்கொண்டு வேறு எந்த நல்ல காரியமும் செய்ய முடியாது’ என்கிறது ஒரு சீனப் பழமொழி. சில நாள்களுக்கு முன்பு நண்பர் ஒருவருக்கு போன் செய்தேன். ``சமீபத்துல என்ன புக் படிச்சீங்க?’’ என்று கேட்டேன். ``படிக்கறதுக்கு எங்கங்க நேரம் இருக்கு?’’ என்று சலித்துக்

கொண்டார். நான் அதிர்ந்துபோனேன். இத்தனைக்கும் அவர் தீவிர வாசகர். அவருடைய பணி, வாழ்க்கைச் சூழல்கூட அவர் படிக்க முடியாததற்குக் காரணமாக இருக்கலாம்.

நேர்த்தியான வடிவமைப்பில் வெளியாகும் புத்தகங்கள்; வருடம் முழுக்க நடக்கும் புத்தகக் கண்காட்சிகள், தள்ளுபடி விற்பனை... என வாசகர்களை ஈர்க்க என்னென்னவோ நடக் கின்றன. ஆனாலும் தொடர் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் வெகு சொற்பமானவர்களே. அப்படிப் புத்தகங்களில் என்னதான் இருக்கிறது... புத்தகங்களைப் படிக்காவிட்டால் என்ன ஆகும்?

1953-ல் அமெரிக்க எழுத்தாளர் ரே பிராட்பரி என்பவரால் எழுதப்பட்ட நாவல் `ஃபாரன்ஹீட் 451. இதன் கதைக்களம் 2049-ல் நடப்பதாக விரிகிறது. ஃபாரன்ஹீட் 451 என்பது காகிதம் எரியும் வெப்பநிலை. நாவலின் கதாநாயகன் கை மான்டேக் ஒரு தீயணைப்பு வீரர். ஏதோ ஒரு வீட்டில் புத்தகங்கள் இருப்பதாக நிலையத்துக்குத் தகவல் கிடைக்கிறது மான்டேக், சக வீரர்களுடன் போவான். அந்த வீட்டிலிருக்கும் புத்தகங்கள், நூலகம், சமயத்தில் வீடும்கூட தீயணைப்பு வீரர்களால் கொளுத்தப்படும். அவன் மனைவி மைல்ட்ரெட்டுக்கு சதா தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா பார்ப்பதுதான் பொழுது போக்கு.

ஒருநாள் மூதாட்டி ஒருவரின் வீட்டில் புத்தகங் கள் இருப்பதாகக் கேள்விப்பட்டு மான்டேக் அங்கு செல்ல... புத்தகத்தை எரிக்கவிடாமல் தடுக்கும் மூதாட்டி சட்டென்று தனக்குத் தானே தீ வைத்துக்கொள்கிறார். அப்போதுதான் மான்டேக்குக்குப் புத்தகத்தை ஏன் எரிக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிறது.

சிந்தனை விருந்து! - புத்தகம் என்ன செய்யும்?

யாருக்கும் தெரியாமல் அங்கிருக்கும் ஒரு புத்தகத்தை எடுத்து வந்து படிக்கிறான். போகுமிடமெல்லாம் ஒவ்வொரு புத்தகமாக எடுத்து வந்து படிக்கிறான்... இப்படி விரிகிறது நாவல். நாவல் சொல்லும் முக்கியமான செய்தி, `புத்தகம், சுதந்திர உணர்வைத் தரும்; சுயமாகச் சிந்திக்கக் கற்றுத்தரும்; கேள்வி கேட்கச் செய்யும். இதையெல்லாம் மக்கள் செய்துவிடக் கூடாது; மந்தமாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அங்கு புத்தகங்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன' என்பதுதான்.

நாவலில் வருவதுபோல அரசோ, தீயணைப்பு நிலையமோ இருக்கிறதோ இல்லையோ... நம்மைப் படிக்கவிடாமல் செய்வதற்காகவே வந்திக்கிறது மொபைல்போன். ஓர் எழுத்தாளர், மற்றோர் எழுத்தாளருக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார்.

``என்னங்க... வெறும் மெசேஜை அனுப்பி யிருக்கீங்க?’’

``எழுதறதுக்கு ஒண்ணும் இல்லை. அதான்..!’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz