Published:Updated:

திருத்தொண்டர்தொகை உருவான வரலாறு... விறன்மிண்ட நாயனார்! ThiruthondarPuranam |

விறன்மிண்ட நாயனார்
விறன்மிண்ட நாயனார்

தொண்டர்தம் பெருமையை இந்த உலகம் உள்ள அளவும் நிலைக்கச் செய்ய வேண்டும் என்று திருவுளம் கொண்ட ஈசன், விறன்மிண்டர் மூலம் நிகழ்த்திய அற்புதம் இது!

அடியார்களின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைக்க இறைவன் திருவுளம் கொண்டார். சைவ நெறியில் அடியார்களே முதல். அதை உலகுக்கு எடுத்துரைக்கவும் எப்போதும் அடியார் பெருமை நிலைத்திருக்கவும் இறைவன் ஒரு திருவிளையாடலைப் புரிந்தார். அதற்கு விறன்மிண்டரை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்.

திருவாரூர்
திருவாரூர்

விறன்மிண்டர் சேரநாட்டுச் செங்குன்றத்தூரில் பிறந்தவர். செங்குன்றம் என்பது தற்போது திருச்செங்கோடு என்ற பெயரில் விளங்குகிற அர்த்தநாரீஸ்வரர் திருத்தலம் அமைந்த என்கிறார்கள். சிவன்பால் பெரும் பக்தியும், சிவனடியார்கள்பால் பேரன்பும் மிகுதியாய்க் கொண்டவர் விறன்மிண்டர். விறன்மிண்டர் அடியார் திருக்கூட்டத்துக்கு முதல் வணக்கம் செலுத்தியபிறகே கோயிலுக்குள் சென்று இறையை தரிசித்து வணங்கும் வழக்கம் கொண்டவர். தன் உள்ளம் நிறைந்த சிவபிரானைத் தலங்கள்தோறும் சென்று தரிசித்திட விரும்பினார் அப்பெருமகனார்.

சேரநாட்டுத் தலங்களை வழிபட்ட பின் சோழநாட்டுத் திருத்தலங்கள் தரிசிக்கப் பயணம் தொடங்கினார் விறன்மிண்டர். அதன்படி அவர் வந்தடைந்த திருத்தலம். திருவாரூர். திருவாரூர் ஈசனை வணங்கி அங்கேயே தங்கி வழிபாடுகள் செய்தார். அப்போது ஒருநாள், சிவத்தொண்டாற்றும் அடியார் திருக்கூட்டம் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் நிரம்பியிருந்தது. அப்போது அங்கே தேவார நால்வருள் ஒருவராக விளங்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகை புரிந்தார்.

சுந்தரர்
சுந்தரர்

அப்போது நடந்த நிகழ்வே திருத்தொண்டர்தொகை என்னும் அடியார் பெருமைபேசும் நூல் நமக்குக் கிடைக்கக் காரணமாக அமைந்தது. பிற்காலத்தில் அதுவே விரிவாகப் பெரிய புராணமும் ஆகியது. அந்த உருக்கமான நிகழ்வை இன்றைய தினந்தோறும் திருவருள் நிகழ்ச்சியில் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சுமதி ஶ்ரீ. கீழே உள்ள வீடியோவில் அதைக் காணுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு