Published:Updated:

துளிர்த்தது மூங்கில் காடு!

மனம் மலரட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மனம் மலரட்டும்

ஶ்ரீசுகபிரம்மர் சொன்ன கதை

துளிர்த்தது மூங்கில் காடு!

ஶ்ரீசுகபிரம்மர் சொன்ன கதை

Published:Updated:
மனம் மலரட்டும்
பிரீமியம் ஸ்டோரி
மனம் மலரட்டும்

மனமது செம்மையானால் வாழ்வும் எதிர் காலமும் சிறக்கும் என்பது பெரியொர்கள் காட்டிய வழி. சிதைந்த மனதில் சீரான எண்ணங்கள் மலர்வதில்லை. மனம் எப்போதும் மலர்ந்து திகழ, எதிர்மறை எண்ணங்களை ஆழ்மனதிலிருந்து அகற்றியாக வேண்டும். பரீக்ஷித்து மன்னனிடம் சுக பிரம்மர் சொன்ன கதை ஒன்று உண்டு.

மூங்கில் காட்டின் வழியே முனிவர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று வேகமாக உராய்ந்ததில், திடீரென்று தீப்பிடித்தது. காற்று வலுவாக வீசியதால், காடு முழுவதும் பற்றியெரிந்தது.

பச்சைப் பசேலென்று காட்சி தந்த கானகம் கரிந்து தணிந்தது. இதைக் கண்ட முனிவரின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மாதங்கள் சில மறைந்தன. முனிவர் அதே வழியில் திரும்பி வந்தபோது, கரிந்து கிடந்த காடு மீண்டும் துளிர்த் துத் தழைத்துப் பச்சைப் பசே லென்று அடர்ந்து கிடந்தது.

அந்த முனிவருக்கு ஒரு விஷயம் விளங்கியது.

மண்ணுக்கு மேலே, கண்ணுக்குத் தெரியும் காட்டுப் பகுதியைத் தான் கனல் விழுங்கியது. நிலத்தின் அடியில் மறைந்து கிடந்த மரங்களின் வேர்களை நெருப்புக் கரங்கள் தீண்டவே இல்லை. எனவே, மழை பொழிந்ததும் மரங்கள் தழைத்தன. காடு மறுவுயிர்ப்பு அடைந்தது.

நம் மனமும் அப்படியே! எதிர்மறை எண்ணங்களை, இதயத்தின் அடிஆழம் வரை இறங்கி நாம் அகற்றாவிடில், அவை மீண்டும் துளிர்க்கும். நமது வாழ்வை அலைக்கழிக்கும்.

மனத் தூய்மைக்கு ஏற்பவே வாழ்வில் இன்பம் வளரும். ஆகவே, எதிர்மறை எண்ணங்களை அகற்றி மனதில் தூய்மையை ஊட்டி, அதன் ஆற்றலைப் பெருக்க நாம் அனைவரும் முயல வேண்டும்.

- சி.மீனாட்சி, சிவகாசி