திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சூர்ப்பணகையின் அன்பு!

ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீராமன்

பி.சந்திரமெளலி

தேவரிஷி ஆனந்த குருவின் மகள் சுமுகி. அவள் ஆனந்தகுருவிடம் பயின்று வந்த சங்கசூடணனைக் காதலித்தாள்.

குருவின் மகள் என்பதால் காதலை ஏற்க மறுத்தான் சங்கசூடணன். அதனால் கோபம் கொண்ட சுமுகி அவன்மீது வீண் பழி சுமத்தினாள். இதை நம்பிய குரு, சங்கசூடணனின் தந்தையிடம் புகார் தெரிவித்தார்.

ஶ்ரீராமன்
ஶ்ரீராமன்

குரு அபச்சாரம் செய்த மகனின் கை, கால் களை வெட்டிவிட்டார் சங்கசூடணின் தந்தை. இறக்கும் தறுவாயில் சங்கசூடணன் பூமியில் விழுந்து, இது தர்மமா என்று அழுதான். அப்போது, பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் வெளிப்பட்டார்.

``வருந்தாதே சங்கசூடா, வீண் பழி சுமத்திய சுமுகியை மறுபிறப்பில் நானே பழிவாங்குவேன்'' என்று உறுதியளித்தார்.

சங்கசூடணன் மறுபிறப்பில் விபீஷணனாகப் பிறந்தான். அவன் தங்கையாக சுமுகிப் பிறந்து சூர்ப்பணகை என்றானாள். ஆதிசேஷனே லட்சுமணனாகப் பிறந்து அவளைத் தண்டித்து நீதியை நிலை நாட்டினார்.

சூர்ப்பணகை அரக்கர் குலத்தில் பிறந்தாலும் நல்ல அழகி. அவள் ஶ்ரீராமனை உண்மையாகவே காதலித்தாள். ஆனால் ராம அவதாரத்தில் பிறன் மனை நோக்காத பெருமான் என்பதால் ராமர் அவள் காதலை மறுத்தார். இதுவும் முந்தைய பிறவியின் தொடர் வினையே. ராம அவதாரத்தில் பெற முடியாத அன்பை சூர்ப்பணகை கிருஷ்ண அவதாரத்தில் அடைந் தாள். ஆம்! ராம அவதாரத்தில் நிராகரித்த தூய அன்பை கோகுலத்து கண்ணன் அடுத்த பிறவியில் ஏற்றுக் கொண்டான். எப்படி?

கம்சனை வதம் செய்ய மதுராவுக்கு வந்த கண்ணனும் பலராமனும் முதலில் சென்றது திரிவக்ரை எனும் மூதாட்டியின் வீட்டுக்குத்தான். பூ தொடுத்து கம்சனின் அரண்மனைக்கு விற்பனை செய்துவந்த திரிவக்ரை, கண்ணனைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாள். அவனே ஶ்ரீராமன் என்றும் அறிந்து, கண்ணனே தன் நாயகன் என்று வாழ்ந்து வந்தாள்.

அவளின் அன்புக்கு ஆட்பட்ட கண்ணனும் அவளைத் தேடிச் சென்றான். ராம அவதாரத்தில் சூர்ப்பணகைக்குத் தண்டனை கொடுத்த பலராமனுக்கு, அனைத்தையும் உணரவைத்து திரிவக்ரையை வணங்கச் செய்தார். அவளுக்கும் மோட்சம் அளித்தார்.

எந்த வினைக்கும் எதிர்வினை - உரிய பலன் நிச்சயம் உண்டு என்பதை உணர்த்தும் இதிகாசச் சம்பவங்கள் இவை.