Published:Updated:

ஆழ்வார்களும் நாலாயிர திவ்ய பிரபந்தமும்...

நாலாயிர திவ்ய பிரபந்தம்
பிரீமியம் ஸ்டோரி
News
நாலாயிர திவ்ய பிரபந்தம்

நான்காம் ஆயிரம் - 1102 பாடல்கள் - என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மிழ் வேதம், ஐந்தாவது வேதம், திராவிட வேதம், திராவிட பிரபந்தம் என்றெல்லாம் போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் 12 ஆழ்வார்களால் பாடப்பெற்றவை. இதை 10- ம் நூற்றாண்டில் அவதரித்த நாதமுனிகள் என்னும் அருளாளர் ‘ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்’ என்ற பெயரில் தொகுத்து அளித்தார். இவை 3892 பாசுரங்களே கொண்டிருந்தன.

பின்னர் மணவாள மாமுனிகள், திருவரங்கத்தமுதனார் அருளிய ‘இராமானுச நூற்றந்தாதி’யும் (108 பாசுரங்கள்) சேர்த்து ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற பெயரில் அருளினார். அவை:

முதலாயிரம் - 947 பாடல்கள்

இரண்டாம் ஆயிரம் - 1134 பாடல்கள்

மூன்றாம் ஆயிரம் - 817 பாடல்கள்

நான்காம் ஆயிரம் - 1102 பாடல்கள் - என நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆழ்வார்களும் நாலாயிர திவ்ய பிரபந்தமும்...

இதில் முதல் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி, திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்த விருத்தம், திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், நான்முகன் திருவந்தாதி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருஎழுகூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், இராமானுச நூற்றந்தாதி என 24 பிரபந்தங்கள் உள்ளன. இவற்றில் திருமங்கை ஆழ்வார் அதிக பாசுரங்களையும் (1253 பாசுரங்கள்) திருப்பாணாழ்வார் குறைவாகவும் (10 பாசுரங்கள்) எழுதியுள்ளார்கள்.

அழகுத் தமிழில் எழுதப்பட்ட இந்த பாடல்கள் தமிழகத்தில் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம் பேசும் வைணவர்களாலும் இந்தியா தாண்டி தாய்லாந்து, கம்போடியா போன்ற கிழக்காசிய நாடுகளிலும் பாடப்பட்டு வருகின்றன என்பதும் பெருமைக்குரிய விஷயம்.

- எஸ். பாலாஜி, திருச்சி-2

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz