திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

`நாதனும் நந்தியும்!'

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவபெருமான்

ஈசனின் திருவிளையாடல்!

`நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்திசொலப்
பிறைமுடி மேனியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்
குறைபட வெட்டி விழுமுக நந்திசெய் கொள்கையினால்
மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே'


ந்தப் பாடல் கொங்கு மண்டல சதகம் 19 -ல் உள்ளது. அற்புதமான இந்தப் பாடலின் பின்னணியில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு உள்ளது.

கோவையை அடுத்துள்ள பேரூர், முற்காலத்தில் `ஆறை நாடு' என்று அழைக்கப்பட்டது. இங்கு அருளும் ஈசனுக்கு பட்டீஸ்வரர் என்பது திருநாமம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒவ்வொரு தலமாகச் சென்று தரிசனம் செய்து வந்தார். அவ்வாறு அவர் பேரூருக்கும் வந்தார்.

திருவிளையாடல்கள் புரிவதில் விருப்பம் கொண்டவரான ஈசன், சுந்தரமூர்த்தி நாயனார் வரும் தருணத்தில் வயல்வெளிக் குச் சென்றுவிட்டார். முன்னதாக, ``நான் எங்கு செல்கிறேன் என்பதை யாரிடமும் சொல்லவேண்டாம்'' என்று நந்தியிடம் சொல்லிச் சென்றார்.

ரிஷபாரூடர் சிவபெருமான்
ரிஷபாரூடர் சிவபெருமான்

ஆலயத்தில் இறைவனைக் காணாது தவித்த சுந்தரர் நந்தியிடம் சென்று ``இறைவன் எங்கே?'' என்று கேட்டார்.

`சொல்லாதே' என்கிறார் இறைவன். `சொல்' என்று கேட்கிறார் அடியவர். இருவரின் சொல் லையும் மதிக்க வேண்டிய கட்டாயத்தில் நந்தி. சிவனடியார் கேட்கும் உதவியைச் செய்யாத பாவம் தன்னைப் பீடிக்குமே என்று எண்ணிய நந்திதேவர் ஓர் உபாயம் செய்தார்.

சாமர்த்தியமாகத் தன் கண் ஜாடையால் சுவாமி சென்ற திசையைச் சுந்தரருக்குக் காட்டி னார். அதைப் புரிந்துகொண்ட சுந்தரரும் வயலுக் குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தார்.

நந்தி தன் பேச்சை மதிக்கவில்லையே என்று கோபம் கொண்ட ஈசன் மண்வெட்டியால் நந்தியின் முகத்தில் தாக்கினார். செய்வதறியாத நந்தி, அடித்தாலும் அணைத்தாலும் அவனே துணை என்று சிவபெருமானை இறைஞ்சி வேண்டினார். உடனே நந்தியின் வெட்டுப் பட்ட முகம் மீண்டும் சீர் பெற்றது. இதைத்தான் அந்தப் பாடல் விளக்குகிறது. சிவபக்தியும் அடியார் பெருமையையும் விளக்கும் அற்புதமான இந்தப் பாடலைப் பாடி நாமும் பேரூர் பட்டீஸ்வரரைத் துதிப்போம்.