பிரீமியம் ஸ்டோரி

`உயிர்களிடத்தில் அன்பு வேணும்; தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்’ என்று பாப்பா பாட்டில் குழந்தைகளுக்கு அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் பாரதியார். மகான்களுக்கும் மனம் பக்குவப்பட்டவர்களுக்கும் இந்த குணம் இயல்பிலேயே அமைந்துவிடுவது உண்டு. அந்த வரம் பகவான் ரமண மகரிஷிக்கு வாய்த்திருந்தது.

ஶ்ரீரமணர்
ஶ்ரீரமணர்

ஶ்ரீரமணாஸ்ரமத்தில் விருந்தினர்கள், பரதேசிகள் என அனைவருக்கும் உணவு வழங்கப்படும். அப்போதெல்லாம் அங்கே ஒரு வழக்கம் இருந்தது. விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட பிறகுதான் எளியோர், பரதேசிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதை யாரோ ஒரு புண்ணியவான் ஆசிரமத்தில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்தார்.

ஒரு நாள் ஆசிரமத்தின் வாசலில் வந்து நின்றார் ஒரு பரதேசி. உணவு கேட்டார். ஆசிரமத்திலிருந்த ஒருவர், `விருந்தினர்கள் சாப்பிட்ட பிறகு கொடுக்கிறோம். கொஞ்சம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

சாப்பாட்டு வேளை. பந்தி ஆரம்பமானது. விருந்தினர்கள் அமர்ந்துவிட்டார்கள். பகவான் ரமணரைக் காணவில்லை. ஆசிரமம் முழுக்கத் தேடியும் அவர் இல்லை. ஒருவர் வெளியே சென்று பார்த்தபோது, ஆசிரம மரத்தடியில் பரதேசிகளுடன் உட்கார்ந்திருந்தார் ரமணர். பதறிப்போன அவர் அழைத்தபோது, ``இதுவும் (தம்மை) ஒரு பரதேசிதான். உள்ளே சாப்பாடு ஆன பிறகு சாப்பிட்டால் போதும்’’ என்றார் புன்னகை மாறாமல் ரமணர். அதைக் கேட்டவர் துடித்துப்போனார்.

அவ்வளவுதான்...பரதேசியைக் காத்திருக்கச் சொன்ன ஆசிரமவாசி ஓடி வந்தார். ரமணரிடம் மன்னிப்புக் கேட்டார். அன்று முதல் ஆசிரமத்தில் பரதேசிகளுக்குத்தான் முதலில் சாப்பாடு! இன்றும் அந்த வழக்கம் தொடர்கிறது. ரமணரோடு சிறு வயதிலிருந்தே நெருக்கமாக இருந்தவர் ரங்கன். அவருடைய புதல்வியார் கே.மதுராம்பாள், தான் எழுதிய `தெய்வத்தின் நட்பு’ என்ற புத்தகத்தில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

எளியோர்க்கு இரங்கிய எத்தனையோ மகான்கள் நம் தேசத்தில் இருந்திருக்கிறார்கள்; இருக்கிறார்கள். சக மனிதர் மேல் அன்போ, அக்கறையோ இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

ணம் ஒன்றையே குறியாகக்கொண்டவர் அந்த மருத்துவர். அவரிடம் ஒருவர் வந்து 'என் கிட்ட நிறைய சொத்து இருக்கு, கூடவே கிட்னியில் நிறைய கல்லும் இருக்கு!'

'கவலைப்படாதீங்க.. ரெண்டையும் சுத்தமா கரைச்சிருவோம்!'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு