Published:Updated:

இழந்த பொருள்களைத் திரும்ப வழங்கும் சயனி ஏகாதசி விரதம்!

மழை பொழிந்து நாடு செழிக்க வழிபடவேண்டிய சயனி ஏகாதசி விரத மகிமைகள்!

ஏகாதசி
ஏகாதசி

திருமாலை வழிபடுவதற்கு உகந்த தினங்களுள் முக்கியமானது, ஏகாதசி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை தேய்பிறை என்று இருபருவங்களிலும் வரும் ஏகாதசி திதிகளானது மிகவும் தனிச்சிறப்புவாய்ந்தன. ஏகாதசி திதி அன்றுதான் திருமால் பல்வேறு அற்புதங்களைச் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம்

ராவணனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், வைகுண்டம் சென்று திருமாலிடம் தங்கள் இன்னல்களைச் சொல்லி முறையிட்டது ஒரு மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்றுதான். ஏகாதசி திதியன்று தன்னிடம் பக்தர்கள் வைத்த கோரிக்கையை பகவான், சீக்கிரம் நிறைவேற்றுவார் என்பதற்கேற்ப, ராமச்சந்திரமூர்த்தியாக அவதரித்து ராவணனை வதம் செய்தார் திருமால்.

திருமால் மோகினி அவதாரம் எடுத்ததும் ஓர் ஏகாதசி நாளில்தான். ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் ஏகாதசி விரதமிருந்துதான் திருமாலின் அருள்பெறும் பேறு பெற்றார்கள். வருடம் முழுவதும் ஏகாதசி விரதமிருந்து, துவாதசிப் பாரணை செய்த அம்பரீஷ மகாராஜாவைத் தவத்தில் சிறந்த துர்வாச முனிவரால் கூட எதுவும் செய்ய முடியவில்லை என்பதிலிருந்தே ஏகாதசியின் மகிமையை உணரலாம்.

உயிர்களின் உயிரான நீரே, இந்த உலகின் ஆதாரம். அதனாலேயே அதனை `ஜலநாராயணர்' என்று போற்றுகிறோம்.

நாளை (12.7.19) `சயனி ஏகாதசி.’ சயனி ஏகாதசியின் சிறப்புகள் குறித்து ஏகாதசி மகாத்மியம் விவரிக்கிறது.

முன்னொருகாலத்தில் `மாந்தாதா' என்கிற அரசன் இந்தப் பூவுலகை ஆண்டுவந்தான். நீதியும் நேர்மையும் தவறாத அவன் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி வாழ்ந்துவந்தனர். மாதம் மும்மாறி மழை பொழிந்து நாடு செழித்து விளங்கியது. ஒருமுறை அவன் நிலத்தில் பருவமழை பொய்த்தது. விவசாயிகள் கவலையுற்றனர். நாளாக நாளாக நீர் நிலைகளும் வறண்டு மக்கள் நீருக்குப் பரிதவித்தனர். நீதி தவறாத தன் ஆட்சியில் இவ்வாறு நிகழ்வது குறித்து மன்னன் வருந்தினான்.

அரசன்
அரசன்

மக்களும் மன்னனைச் சந்தித்து தங்கள் குறையைச் சொல்லி முறையிட்டனர். மன்னன் இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாகச் சொல்லியனுப்பினான். அப்போது அவனது மந்திரி, `கானகத்துக்குள் ஆங்கீரச ரிஷி ஆசிரமம் அமைத்துத் தவம் செய்துவருவதாகவும் அவரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம்' என்றும் கூறினார். மன்னனும் சம்மதித்து ஆங்கீரச முனிவரைச் சந்திக்கச் சென்றான்.

நாடெல்லாம் வறண்டிருந்தபோதும் ஆங்கீரசர் வாழ்ந்த காடு மட்டும் பசுமையும் குளுமையும் மாறாதிருந்தது. ஆசிரமத்தை அடைந்து அவரை வணங்கினான். மன்னனை வாழ்த்திய ரிஷி, `இவ்வளவு தூரம் கடுமையாகப் பயணம் செய்துவந்த காரணம் என்ன' என்பதை வினவினார்.

உனக்கு வரங்கள் பலவும் தரும் ஒரு விரதமொன்றை உபதேசிக்கிறேன். இதற்கு `சயனி ஏகாதசி' என்று பெயர்
ஆங்கீரச முனிவர்

மன்னனோ, `` முனிவரே, நீரே இந்த உலகின் ஆதாரம். அது பருவம் தவறாத மழையினால் உண்டாவது. அதுவே உயிர்களின் உயிராக இருக்கிறது. அதனாலேயே அதனை `ஜலநாராயணர்' என்று போற்றுகிறோம். ஆனால், இந்த ஆண்டு பருவ மழை பொய்த்துவிட்டது. நீர் இன்றி உயிர்கள் எல்லாம் வாடுகிறது. நீதி வழுவாமல் ஆட்சி செய்தும் மழையின்றித் தவிப்பது ஏன்?" என்று கேட்டான். அதற்கு ரிஷி சில கணம் யோசித்தார். மன்னனின் தயாள உள்ளத்தைச் சோதிக்க விரும்பினார்.

``மன்னா, உன் நாட்டில் அனைவரும் தர்மம் தவறாதவர்கள். ஆனால், ஒருவன் மட்டும் தர்மம் தவறியிருக்கிறான். அந்தணர் குலத்தைச் சேர்ந்த அவன், முறையான உபதேசம் பெறாமல் வேதச் சடங்குகளைச் செய்துவருகிறான். தன் குல தர்மத்தை மீறியதால் அவன் பொருட்டு நாடே இப்படி அல்லல் படுகிறது. நீ அவனைக் கொன்றுவிட்டால், மீண்டும் மழை பொழியும்" என்றார்.

`யார் தாங்கள் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற விரும்புகிறார்களோ அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சயனி ஏகாதசி'

மன்னனின் உள்ளமோ பரிதவித்தது.

``முனிவரே, ஒரு உயிரைக் கொன்று பல உயிரைக் காப்பதென்பது சரி என்று எனக்குப் படவில்லை. அந்த இறைவன் தயாள குணம் படைத்தவன் என்பதை நான் அறிவேன். அவனின் இரக்கத்தைப் பெற்று வளத்தை அடைய வழி காட்டுங்கள்" என்று வேண்டினான்.

நாடு திரும்பிய மன்னன் ரிஷி சொன்னவாறே, தானும் விரதத்தைக் கடைப்பிடித்துத் தன் நாட்டு மக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். மன்னன் சொல்லை ஏற்று மக்கள் அனைவரும் சயனி ஏகாதசி தினத்தன்று விரதமிருந்து நாராயணனைத் தொழுதனர். அதன் பலனாக விரதம் முடிந்த தினத்தின் இரவிலேயே வானம் கருத்து பெருமழை பொழிந்தது. நீர் நிலைகள் நிரம்பின. விவசாயிகள் தங்களின் உழவுத் தொழிலை மேற்கொண்டு மீண்டும் நாட்டை வளமான பாதையை நோக்கிச் செலுத்தினர்.

திருமால்
திருமால்

தற்போதும் பருவமழை போக்குக் காட்டிவருகிறது. நாமும் இந்த சயனி ஏகாதசி விரதம் அனுசரிக்கத் திருமாலின் அருள் கிடைத்து மழைப்பொழிவு உண்டாகும். மேலும், இழந்த எல்லா வளங்களும் நமக்குத் திரும்பக் கிடைக்கும்.

ஆங்கீரசர் மனம் மகிழ்ந்தார். தன் பிரஜை ஒவ்வொருவர் மேலும் அன்பு செலுத்தும் அந்த மன்னனை வாழ்த்தினான். நாமும் இந்த சயனி ஏகாதசி விரதம் அனுசரிக்கத் திருமாலின் அருள் கிடைத்து மழைப்பொழிவு உண்டாகும்

Vikatan
நாமும் இந்த சயனி ஏகாதசி விரதம் அனுசரிக்கத் திருமாலின் அருள் கிடைத்து மழைப்பொழிவு உண்டாகும்

``மன்னவா, உன் அன்பு உள்ளம் என்னை மகிழச் செய்தது. நான் உனக்கு வரங்கள் பலவும் தரும் ஒரு விரதமொன்றை உபதேசிக்கிறேன். இதற்கு `சயனி ஏகாதசி' என்று பெயர். வழக்கமான ஏகாதசி விரதத்தைவிட இந்த நாள் மிகவும் சக்திவாய்ந்தது. தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயனம் தொடங்கும் இந்தக் காலத்தில் நீ நாராயணனை விரதமிருந்து பூஜை செய்தால் உன் குறை தீரும். யார் தாங்கள் இழந்த செல்வங்களைத் திரும்பப் பெற விரும்புகிறார்களோ அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் சயனி ஏகாதசி" என்று உபதேசித்தார்.

சயனி ஏகாதசி - வெள்ளிக் கிழமை 12.7.19

ஏகாதசி திதி தொடங்கும் நேரம் : 12.7.19 : 4.19 AM

ஏகாதசி திதி முடிவடையும் நேரம் : 13.7.19 : 3:13 AM

திருமால்
திருமால்
விகடன்

பாரணை நேரம் :

13 - ம் தேதி காலை 6: 00 AM - 7 : 00 AM

பாரணை தினத்தில் துவாதசி முடிவடையும் நேரம் - இரவு 2:35 மணிக்கு.