Published:Updated:

பிள்ளைக்கறி கேட்டதேன்!

சிவனடியார்
பிரீமியம் ஸ்டோரி
சிவனடியார்

அன்பர்களைச் சோதிப்பது என்பதின் நோக்கம் அவர்களுடைய மேன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பது மட்டுமே.

பிள்ளைக்கறி கேட்டதேன்!

அன்பர்களைச் சோதிப்பது என்பதின் நோக்கம் அவர்களுடைய மேன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பது மட்டுமே.

Published:Updated:
சிவனடியார்
பிரீமியம் ஸ்டோரி
சிவனடியார்

பெரியபுராணம் பற்றி கூறும்போது, இன்றைய குழந்தைகளும் இளைஞர்களும் கேட்கும் சில கேள்விகளுக்குப் பதில் கூற சிரமமாயிருக்கும். பெரியபுராணத்தில் வரும் சிறுத்தொண்ட நாயனார் வரலாறு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

சிவனடியார்களுக்குத் தொண்டு செய்து உணவு அளித்து உபசரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த சிறுத்தொண்டரிடம் சிவனடியார் ஒருவர் பிள்ளைக்கறி வேண்டுமென்று கேட்டாராம். சேய் சீராளனை அரிந்து பரிமாற, அவர் சிந்தை குளிர்ந்து சிறுவன் சீராளனை உயிர்ப்பித்துக்கொடுத்து, சிறுத்தொண்டரை வாழ்த்திச் சென்றாராம் என்று கூறினால், “என்ன பிதற்றல்... அன்பர்களைச் சோதிக்கிறேன் என்று சிவபெருமான் இப்படியெல்லாமா நடந்து கொள்வார்...” என்று கேள்விகள் எழும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சிவனடியார்
சிவனடியார்

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பக்தர்களைச் சோதித்துதான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இறைவனுக்குக் கிடையாது. அன்பர்களைச் சோதிப்பது என்பதின் நோக்கம் அவர்களுடைய மேன்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்பது மட்டுமே. சிறுத்தொண்டர் இளவயதில் பரஞ்ஜோதி என்ற பெயருடன் நரசிம்மவர்ம பல்லவனின் படைத்தளபதியாக இருந்தார். அவர் வாதாபியைக் கைப்பற்றி எண்ணிலடங்கா எதிரிகளைக் கொன்று குவித்தார். கொலைபுரிதலையே தொழிலாக்கச் செய்தார் என்றுகூட சொல்லலாம். ஆனாலும் அவர் அந்தத் தொழிலை இறைவனின் ஆணையாக, விருப்பு வெறுப்பு இன்றி, சிந்தையில் சிவனை நிறுத்தி, பற்றற்ற நிலையில் செய்தார். பிறகு, பதவியைத் துறந்து, சிவவழிபாடு செய்து காலம் கழித்தார். இந்த நிலையில்தான் அவர் சோதிக்கப்பட்டார். ஆயிரமாயிரம் கொலைகள் செய்தவரை சிவனடி யார் என்று சிவன் ஏற்றுக்கொள்வார். ஆனால், உலகம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பற்றற்ற நிலையில், பலன்களைப் பரமனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு செய்யும் செயல் எதுவுமே செய்தவனை பாதிப்பதில்லை. பரஞ்சோதி போரில் கொலைகள் செய்தபோது கோபம், பழி உணர்ச்சி, சந்தோஷம் ஏதுமில்லாமல்தான் செய்தார் என்பது உண்மையானால், அதே மனநிலைதானே தன் மகனைக் கொல்லும்போது இருக்க வேண்டும். இதுதான் அவருக்குச் செய்யப்பட்ட சோதனையின் அடிநாதம். சிறுத்தொண்டர் அந்த சோதனையை எதிர்கொண்டு நிறைவேற்றினார்.

ஒருவேளை அவர் கர்மயோகியாக இல்லாமல் இருந்து சிவனடியாரை ஏசியிருந்தாலோ, அழுதிருந்தாலோ இறைவன் கண்டிப்பாகக் கேட்டிருப்பான். ‘இப்படித்தானே நீ கொலைசெய்த ஆயிரமாயிரம் வீரர்களின் தாய் தந்தையர் அழுதிருப்பார்கள்’ என்று. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. சிறுத்தொண்டநாயனார் ஒரு கர்மயோகியாக இருந்ததால், அவர் செயல்கள் அவரை பாதிக்கவில்லை. ஆயிரம் கொலைகள் செய்தவனிடம் இன்னும் ஓர் கொலை, அதுவும் உன் மகனை செய் பார்க்கலாம் என்று கேட்பது முட்டாள்தனமான கேள்வி அல்ல... It is the Most Justified Question.

- முத்து. இரத்தினம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism