Published:Updated:

ஆறு மனமே ஆறு - 13 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

- தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

னிதன் - ரோபோ என்ற ஆய்வுக் கட்டுரை குறித்தும், ரோபோவின் மூளையில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் மனிதனின் கைவண்ணமே என்ற ஆய்வறிக்கையைப் பற்றியும் பார்த்தோம்.

பெண் குறித்த ரோபோவின் பதில்கள் நியாயமா என்று கேட்கிறார்கள். நியாய - அநியாயத்தை யார் பார்க்கிறார்கள்? ரோபோவை உருவாக்கிய மனிதனின் பார்வையும் அப்படித்தானே இருக்கிறது!

சமமாக ஏற்றுக்கொள்ளும் பாரதத்தின் வாழ்க்கைக் கண்ணோட்டம் என்பது, உடலை மட்டுமே மையமாகக் கொண்டதல்ல; ஆன்மாவை மைய மாகக் கொண்டதாகும் மக்களே. சட்டதிட்டங்களால் மட்டுமே இந்தக் குறைகளைச் சரி செய்ய முடியுமா என்ன... முடியாது. என்ன செய்ய வேண்டும்? மனிதன் சூழலை உணர்ந்து, தன்னைத் தானே திருத்திக்கொள்ள முயலும்போதுதான் மாற்றங்கள் நிகழும் மக்களே!

ஆறு மனமே ஆறு - 13 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

புற உலக அறிவு என்பது வெறும் தகவல் சேகரிப்பு முறை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். சம நிலை உறவு, அறநெறி போன்றவை விவேகத் தின் வழியே உருவாவன. கணவன் மனைவி உறவு உள்பட அனைத்து உறவுகளும் இறைவனை அறிவதற்கான மார்க்கமாகக் காணப்படுகின்றன!

ஆணாதிக்கம் முன் காலத்தில் தீவிரமாக இருந்த ஒன்றுதான். அன்று ஆண்கள் மட்டுமே பொருள் ஈட்டிய காரணத்தால், அவர்களுக்குச் சமூகம் அனைத்தையும் செய்வதற்கான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கொடுத்தது என்பதென்னவோ உண்மைதான். அத்தகைய அதிகாரத்தைக் கொண்டு பெண்களை அடிமைகளாக அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டனர். இன்று அந்த நிலை ஓரளவிற்கு மாறியிருக் கிறது என்றாலும், பல மனிதர்கள் இன்னும் மாறாமல் இருக்கிறார்களே.

தன்னைக் கட்டுப்படுத்தி வைத்தாலும் பெண்ணானவள் மனோதைரியத்தின் மூலம் அந்தக் கட்டுக்களை அறுத்தெறிந்து, தடைகளை உடைத்து வெளியே வரும் காலம் உருவாகியுள் ளது. அதுமட்டுமா? கல்வி அறிவு, சொந்தக்காலில் நிற்பதற்கான வாழ்வாதாரம், இவற்றைப் பெறுவதற்கான தைரியம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் பெற்று, பெண்ணானவள் சுதந்திரப் பறவையாக வானில் பறப்பது நிச்சயம் மக்களே!

குட்டக் குட்டக் குனிந்த வர்கள் நிமிர்ந்து நிற்கும்போது, திருந்தாத ஆண்களும் அடக்கி வாசிக்கவேண்டிய சூழல் உருவாகும். அது விரைவில் நடக்கட்டும். அதுவரை காத்திருப்பது அவசியம்!

உறவுகளிலேயே கணவன் - மனைவி உறவு என்பது மிகவும் பவித்திரமானது என்பர். அந்த உறவில் மட்டுமே சந்தானங்கள் உருவாகின்றன. குடும்பங்களாகி, குடும்பங்கள் தலைமுறைகளாகி, தலைமுறைகள் கிளைகளாகி சமூகமாகின்றன.

வாழ்வில் பொதுவாக ஆண் - பெண் இருவருக்கிடையே என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பல இடங்களில் பெரும்பாலும் அவர்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு அதிக வாய்ப்புண்டு. அதையே அவர்கள் விரும்புகிறார்கள்!

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கணவன் - மனைவி உறவில் பெரும்பாலும் `நீயா... நானா' எனும் போட்டி உருவாகிவிடுகிறது. உறவு களைக் கடந்த உணர்வுபூர்வமான, அழகான உறவு அது என்பதை மறந்து வாழ்கிறோம்!

நீங்கள் அந்த உறவை எப்படி வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளுங்கள். நம்முடைய சாஸ்திரங்கள், புராணங்கள், தத்துவங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

மகாபாரதத்தில் ஒரு சம்பவம்.

யக்ஷன் தர்மபுத்திரரிடம் கணவன் - மனைவி உறவு பற்றிய விளக்கத்தைக் கேட்கும்போது, `கணவனுக்கு உண்மையான தோழன் யார்?' என்று கேட்கிறான்.

அதற்கு தர்மபுத்திரர், `பார்யா தைவக்ருதா சகா' என்கிறார். அதாவது `மனைவி என்பவள் கணவனுக்கு உண்மையான தோழன்' என்று பதிலளிக்கிறார். மனுஸ்மிருதியும் தன் பங்குக்கு `பார்யா ஸ்ரேஷ்டதமா சகா' என்று சொல்கிறது. அதாவது `மனைவியே கணவனுக்கு மிகச் சிறந்த தோழன்’ என்கிறது.

ஆறு மனமே ஆறு - 13 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

இதைவிட எளிய, உண்மையான, ஆழமான பதில் வேறேதாவது இருந்தால், யாராவது சொல்லுங்களேன் பார்க்கலாம்... முடியாது மக்களே!

நம் முன்னோர்கள் அருமை யான வாழ்க்கைத் தத்துவங் களை விட்டுச் சென்றிருக்கின்றனர். ஆனால் காலத்தின் கோலம்... உலகமயமாக்கல், பல்வேறு கலாசாரங்களின் சங்கமம் அல்லது ஊடுருவல் காரணமாக, மனிதன் மனம் மாறி, தடம் மாறிச் செல்ல முற்படுகிறான். அதனால், முன்னோர் சொன்ன வாழ்க்கைத் தத்துவங்கள் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதுபோலத் தோன்றுகிறது!

சனாதன தர்மம் என்று அழைக்கப்படும் நிலையான தத்துவ நம்பிக்கை என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...

சனாதன தர்மம், வேதத்தை அடிப்படை யாகக் கொண்டு நம்மை வழி நடத்தும் ஒரு வழி காட்டி. அதன்படி நடைபெறும் திருமணங் களில் கணவன் - மனைவி உறவுக்கு அதிக முக்கியத்துவமும், உன்னதமான மதிப்பும் அளிக்கப்படுகின்றன.

ஆகவேதான் முன்னோர் ‘தாய்க்குப் பின் தாரம்’ என்று வலியுறுத்தியுள்ளனர். காலம் முழுவதும் கணவனுக்குத் துணையாக நிற்பவள், கணவனை நேர்மையான நன்னெறிப் பாதையில் வழி நடத்திச்செல்வதுடன், தானும் அவ்வழி நடப்பவள் என்றெல்லாம் மனைவியானவள் வர்ணிக்கப்படுகிறாள்.

அக்னிசாட்சியாக நடைபெறும் திருமணங்களில் மணமக்கள் இருவரும் மகாவிஷ்ணு - மகாலட்சுமி வடிவமாகின்றனர். ‘சப்தபதி’ என்ற ஒரு சடங்கு உண்டு. மணமகன், இடதுகையால் மணமகளின் வலது கையைப் பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்து, வலது கையினால் மணமகளின் காலின் கட்டை விரலைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வோர் அடியாக, உரிய மந்திரத்தைச் சொல்லி, ஏழு அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கச் செய்து, ஏழு உறுதி மொழிகளை ஏற்பான். இதையே `சப்தபதி' என்கிறது சாஸ்திரம். இது மிகவும் அர்த்தமுள்ள சடங்காகும்.

‘எல்லா பருவகாலங்களிலும் நன்மைகள் உண்டாகும்படி மகாவிஷ்ணு பின்தொடர்ந்து வரட்டும்’ என மணமகன் வேண்டிக்கொள்கிறான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சப்தபதியில் முதலடி எடுத்து வைக்கும்போது, `அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரம் போல் இல்லத்தில் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்' என்பதில் தொடங்கி, ஏழாவது அடி வரையிலும் சொல்லப்படும் மந்திரங்கள் தரும் விளக்கங்களைக் காண்போமா...

`ஏழடி எடுத்து என்னுடன் நடந்து வந்தவளே, இப்போது நீ என் துணைவியும் தோழியுமாகிறாய். உணவைப் பகிர்ந்துண்டு வாழ்வோம். சுக துக்கம் இருவருக்கும் சரி பாதியே! இருவரும் எப்போதும் சினேகத் துடன், நல்ல மனத்துடன், ஒருவரையொரு வர் விட்டுக்கொடுக்காமல், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல், வாழ்க்கை முழுக்க இணைபிரியா நண்பர்களாக இருப்போம். கர்மாக்களைச் செய்வதிலும் இணைந்தே சங்கல்பம் செய்து கொள்வோம்.

விரதங்களையும் இணைந்தே அனுஷ்டிப் போம். நான் ஆகாயம் என்றால் நீ பூமி; நான் மனம் என்றால் நீ அதன் வாக்கு; நீ ரிக் வேதமானால் நான் சாம வேதம். எப்படி இவை ஒன்றையொன்று சார்ந்து இணை பிரியாது இருக்கின்றனவோ, அப்படியே நாம் இருவரும் ஒற்றுமையாக இருப்போம்.

அதாவது நீயின்றி நானில்லை; நானின்றி நீ இல்லை. உறவுகளை மதித்து நடக்க வேண்டும், பதி-பத்தினி தர்மத்தையும், சந்ததிகளையும் பேணிப் பாதுகாக்க வேண்டும்...' என்று நீண்ட உறுதிமொழியை மணமகன் எடுத்துக் கொள்கிறான். அப்படியே நடந்திட வேண்டும் என்று மகா விஷ்ணுவிடம் வேண்டியும் கொள்கிறான்.

‘மித்திரனை, அதாவது நல்ல நண்பனைக் கைவிட்டவனுக்கு தர்மத்தில் பங்கில்லை’ என்கிறது யஜுர் வேதம். `குடும்ப வாழ்வில் தர்மம், காமம் போன்றவை நிலை கடந்து தடம் மாறிச் செல்லும்போது, அதனால் உறவுக்கு ஏற்படும் களங்கத்தினை நீக்கி, நடுநிலை வகிக்கும் சக்தி மனைவியிடம் மட்டுமே உள்ளது' என்கிறது மகாபாரதம். இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?

மனு ஸ்ம்ருதி சொல்வதையும் கேட்டுக் கொள்ளுங்கள். `சம்பாதித்ததை மனைவி யிடம் கொடு. அவள் வீட்டின் எஜமானியாய் குடும்பத்தைப் பாதுகாத்து, வீட்டின் நல்லது கெட்டது, சுத்தம் சுகாதாரம், மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுக்கு அதிபதியாய், அனைவரையும் வழி நடத்துபவளாய், பூரண அதிகாரத்துடன் செயல்படுவாள்” என்கிறது.

- மனம் மலரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு