Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 2: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

எங்கிருந்து தொடங்குவது... கரும்பின் எந்தப் பக்கம் இனிக்கும்? இதென்ன கேள்வி? கரும்பு முழுவதும்தானே இனிக்கும்!

என் குழந்தைகளாகிய உங்களுடன் உரையாடுவதும் அப்படித்தான் எனக்கு. இருந்தாலும் எங்கிருந் தாவது தொடங்கித்தானே ஆக வேண்டும்.

தாய்மை என்பது பெண்மையின் முதல் வடிவம். அம்மாவும் ஒரு பெண்தானே. ஆக, பெண்மை என்பதிலிருந்து ஏன் தொடங்கக் கூடாது?

பெண்மை என்பது என்ன? இதற்கு இதுதான் பதில் என்று... ஒரு பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை, அன்பு, கருணை, விட்டுக்கொடுக்கும் பண்பு, தயாள குணம், பொறுமை, பிறர் மனம் அறிந்து செயல்படுவது என அடுக்கிக்கொண்டே போகலாம்!

ஆறு மனமே ஆறு! - 2: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெண்ணின் இந்த இயல்புகளில் மிகுந்திருப்பது அறக்கருணை மட்டும்தானா; மறக்கருணை இல்லையா... எனில், பெண்ணானவள் பயம் மிகுந்தவளா என்று நீங்கள் கேட்கலாம்... அப்படியில்லை.

பெண்ணிடம் போராடும் குணம் நிறைய உண்டு. உண்மையில் போராட்டம் என்று குறிப்பிடப்படுவது, உடல் ரீதியானது அல்ல; நெஞ்சுரத்தோடு போராடுவது ஆகும்.

`நம் பாரதக் கலாசாரம் உன்னதமானது. அதில் பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் மிகுதியாக உண்டு. அதிலும் தாய்மை எனும் பதத்துக்கான சிறப்பு இங்கு அதிகம்.’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பெண்ணின் முதல் வடிவம் தாய்மை. அக்குணம் இல்லாத பெண்களே இருக்க முடியாது. எல்லா குழந்தைகளும் தாயின் கருவறையிலிருந்தே உருவாகின்றன. ஓரு ஜீவன் வளர்வதற்கான அனைத்துச் சூழலையும் தனக்குள் ஏற்படுத்திக்கொள்பவள்தான் தாய். எவ்விதமான சூழலிலும் தான் பெற்றெடுத்த குழந்தைகளை அரவணைத்து, பாதுகாப்புடன் வளர்க்கவும் செய்கிறாள். அதுவே அவளது தாய்மைக்குணம்.

ஆறு மனமே ஆறு! - 2: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தாய்மையை யாரும் மறுக்கவும் முடியாது; மறக்கவும் கூடாது. ஏனென்றால், இந்த உலகைப்போல் அதுவும் பரந்து விரிந்தது; சக்தி நிறைந்தது. மனத்தின் எல்லைகளைக் கடந்து, தன் குழந்தைகள்மீது மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவர்மீதும் அன்பு காட்டுபவள் தாய். அந்த நற்குணம்தான் தாய்மை.

`குழந்தையிடமும் தாயன்பு உண்டு...’

தாய்மைக் குணம் சிறு குழந்தைகளிடமும் உண்டு. ஓர் உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். ஆசிரமத்தில் ஒவ்வொரு முறையும் பஜனை முடிந்தபிறகு, இரண்டு முதல் ஐந்து வயது வரையிலான ஆண் பெண் குழந்தைகள் 20 அல்லது 25 பேர் என்னுடைய அறைக்கு வந்து உணவு உண்பார்கள். அவர்களுக்கான உணவை என் கையாலேயே எடுத்து வைப்பேன். ஆண் குழந்தைகள் சாப்பிட்டதும் தட்டை அப்படியே வைத்துவிட்டுக் கையைக் கழுவச் சென்றுவிடுவார்கள்.

மனத்தின் எல்லைகளைக் கடந்து, தன் குழந்தைகள்மீது மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவர்மீதும் அன்பு காட்டுபவள் தாய். அந்த நற்குணம்தான் தாய்மை!

நான்கைந்து வயது வரை வளர்ந்த பெண் குழந்தைகளோ, தம்மைவிட சிறிய குழந்தைகளை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு, முதலில் அவர்களுக்கு ஊட்டிவிடுவார்கள். அதன்பிறகே அவர்கள் உண்ண ஆரம்பிப்பார்கள். அதேபோல், அவர்கள் சிறியவர்களுடைய தட்டையும் சேர்த்துக் கழுவுவதையும் பல முறை கவனித்திருக்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாய்மை என்பது இங்குதான் தொடங்கு கிறது. ஆக, பெண்ணிடம் தாய்மையின் உன்னதமான பண்பு குழந்தைப் பருவத்தி லேயே மிளிரத் தொடங்கிவிடுகிறது, ஒவ்வொரு பெண் குழந்தையிடமும் தாய்மை குடிகொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

ஆறு மனமே ஆறு! - 2: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இதுதான் பாரத தேசத்தின் உன்னதமான கலாசாரம் ஆகும்.

`பெண்கள், அவர்களது வளர்ச்சிக்குத் தடைபோடும் சமுதாய சட்ட திட்டங்களை எதிர்த்து போராடும் நெஞ்சுரம் கொண்டவர்கள்.’

பெண்கள் தங்களுடைய மனோ தைரியத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்தக் குணம் மனத்துடன் தொடர்புடை யதே தவிர, உடல் வலிமையுடன் தொடர்புடையது அல்ல. இதற்கு என் வாழ்க்கையையே ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன்!

பெண்கள் தங்களின் மனோ தைரியத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இந்தக் குணம் மனத்துடன் தொடர்புடையதே தவிர, உடல் வலிமையுடன் தொடர்புடையது அல்ல!

எப்படி என்கிறீர்களா?

இன்று என்னை `அம்மா.., அம்மா...’ என்று ஆராதிக்கிறார்கள். அன்று நான் சாதாரணப் பெண்ணாக மீனவக் குடும்பத்தில் பிறந்தேன்; வளர்ந்தேன். சமூகத்தில் ஆண்களை முன்னிறுத்தி பழக்கப்படுத்தியிருந்த காலம் அது.

ஆண்கள் மட்டுமே பொருள் ஈட்டும் வாய்ப்பைப் பெற்றிருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பெண்கள் எப்போதும் அவர்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும் என்ற சமுதாய விதி இருந்தது. மீறினால் சில நேரம் தண்டிக்கும் பழக்கமும் இருந்தது.

சிறு வயதிலேயே தெய்வக்குழந்தை என்று நான் போற்றப் பட்டாலும், நான் கடற்கரையில் அமர்ந்து கிருஷ்ண தியானம் செய்வது, பக்திப் பாடல்கள் பாடுவது என்றிருந்ததை என் சொந்தங்களே விரும்பவில்லை. உண்மைதான்... ஒரு பெண் ஆன்மிகத் தலைவராக வருவதை சமூகம் அப்போது ஏற்றுக்கொண்டதில்லை. பலர் முட்டுக்கட்டையாகவும் இருந்தனர். ஒரு சிலர் மட்டுமே என்னுடன் இருந்தனர்; இப்போதும் அவர்கள் என்னுடன் இருக்கின்றனர்.

அப்போதெல்லாம், என்னுடைய கிருஷ்ணபாவ அலங்காரத்தையும், சிறு வயது பெண்ணான என் தோளில் சாய்ந்து மக்கள் ஆறுதல் பெறுவதையும் ஏற்றுக்கொள்ளாததுடன், இகழ்ந்து பேசி கேலியும் செய்தனர். ஆனால், அதே உலகில் இன்று பல்லாயிரக்கணக்கானவர்கள் அத்தகைய தரிசனமும் அரவணைப்பும் பெறுகிறார்கள் எனில், அது இறைவன் எனக்கு இட்ட கட்டளைதானே...

கிருஷ்ணனும் தேவியும் என்னுள் இருந்து இன்றும் இயக்குகின்றனர். பயம், தளர்வு, தயக்கம் எல்லாவற்றையும் தவிர்த்து இந்த நிலைக்கு முன்னேறினேன் என்றால், அதற்கு எனது நெஞ்சுரமும் காரணம் என்பேன்.

நீங்களும் முயன்று பாருங்கள்... வெற்றி கிடைக்கும்.

- மனம் மகிழும்...

அம்மா... சிறு வயதில்!

`விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பார்கள். அம்மாவின் தெய்விக அவதாரம் என்பது ஆண்டவன் சித்தம் என்பது அவரின் சிறுவயதிலேயே தெரிந்தது. சமவயது பெண் பிள்ளைகள் ஓடி, ஆடி, விளையாடி சந்தோஷமாக காலம் கழித்தபோது, சுதாமணியின் மனதோ வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது. ஆம்... அம்மாவின் இயற்பெயர் இதுதான்.

இரண்டு வயதிலேயே அருமையாகப் பாடும் சக்தியைப் பெற்றிருந்த சுதாமணி. பேசத் தொடங்கிய பருவத்திலேயே `கிருஷ்ணா... கிருஷ்ணா...’ என்று சதாசர்வ காலமும் கிருஷ்ண நாமத்தை உச்சரித்த வண்ணம் இருப்பாள்.

ஐந்து வயதில் எறும்பு போல சுறுசுறுப்பாகவே இருப்பாள் சுதாமணி. விடியற்காலையில் எழுந்து விடுவாள். ஆடிப் பாடி உணர்ச்சிப் பெருக்குடன் பக்திப் பாடல்கள் பாடுவாள். சின்னச் சின்ன பாடல்களைத் தானே இயற்றி பாடும் ஆற்றல் பெற்றிருந்தாள் சுதாமணி. சிறியதொரு கிருஷ்ணன் படத்தை பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தாள். சட்டைப்பையில் இருக்கும் அந்தப் படத்தை அவ்வப்போது எடுத்து வைத்துக்கொண்டு, பரிவோடும் பக்தியோடும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். அவ்வளவு ஆழமான பக்தி.

கிருஷ்ண தியானத்தில் அமர்ந்துவிட்டால் போதும், சுற்றி நடப்பது எதுவும் சுதாமணியின் கண்ணுக்குத் தெரியாது; உலகைப் பற்றிய சிந்தனையே இருக்காது. சில நேரத்தில்... விண்ணையும் அடிவானைத் தொடும் கடற் பரப்பையும் மாறி மாறி உற்றுநோக்கிக் கொண்டிருக் கும் அவளின் செய்கை, அவள் வேறோர் உலகில் சஞ்சரிப்பதாக எண்ணவைக்கும்.

குழந்தையின் செய்கை அவளின் பெற்றோருக் குக் கவலை அளித்தது. பலமுறை அவர்கள் கண்டித்தும் சுதாமணியின் செயல்கள் நின்ற பாடில்லை. விளைவு, பலமுறை தண்டனைக்கும் ஆளானாள் அவள்!