Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 5: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

என் செல்ல மக்களே, கோபப்படும்போது நமக்குள் எழும் அதிர்வலையும் ஒரு தாய் தன்னுடைய குழந்தையிடம் அன்பையும் பாசத்தையும் பரிமாறிக்கொள்ளும்போது எழும் அதிர்வலையும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படும். அதுபோலவே காதல், காமம் இரண்டிலும் வெவ்வேறு அதிர்வலைகளை உணர முடியும்.

அது போல், நிகழும் அல்லது நிகழப்போகும் ஒன்றை அதிர்வலைகளாக மனத்தளவில் உணரமுடியும் என்பது என் அனுபவம். இது வெறும் பேச்சில்லை!

உலகை துக்கத்தில் ஆழ்த்தும் ஏதோவொரு பெரும் நிகழ்வு இக்காலம் சம்பவிக்கும் என மூன்று வருடங்களுக்கு முன்பே என் உள்ளுணர்வு உணர்த்தியது. இயற்கைக்கு அணை போடமுடியுமோ, முடியாதோ... விளைவைக் கட்டுப்படுத்த வழி காண்பது உசிதமல்லவா? என்னால் என்ன செய்ய முடியும்? கண்ணுக்குத் தெரியாத எதிரியைச் சந்திக்க இறை வழிபாடு ஒன்றே உபாயம் என்றது என் மனம்.

நமக்குள் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை உணரச் செய்யும் தியானமும், இறை வழிபாட் டின் ஓர் அங்கம்தானே? அதில் ஏற்படும் அதிர்வலைகளை அடுத்தவருக்குள்ளும் எடுத்துச் செல்லமுடியும் என்பது அம்மாவின் அனுபவம். ஆகவே, தேவியின் துணைகொண்டு ‘வெண்மலர் தியான’ பயிற்சியைத் தேர்ந்தெடுத் தேன். கடந்த 2 ஆண்டுகளாக ‘வெண்மலர் தியானம்' என்னுடைய இறைவழிபாட்டில் இடம்பெற்று வருகிறது.

ஆறு மனமே ஆறு! - 5: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`இக்கட்டான இந்தக் கொரோனா பாதிப்புச் சூழலில், மனம் தளராமல் அமைதியோடு இன்னல்களைச் சந்திக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்' என செல்லப் பிள்ளைகள் கேட்க, அவர்களையும் சில மாதங்களாக என்னுடன் வெண்மலர் தியானப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறேன்.

கூட்டுவழிபாடு குறை தீர்க்கும் மாமருந்தாகும் இல்லையா?!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா பெருந்தொற்று விழித்தெழ ஓர் எச்சரிக்கை மணியா?

அதென்ன விழித்தெழ எச்சரிக்கை மணி? மனிதனிடம் அப்படி என்ன மாற்றம் தேவை? மனித நேயத்துடன், ஆண்டவனின் அருளைப் பெற்று, ஆன்மிகச் சிந்தனையுடன் நம்மைச் சுற்றி இருப்பவற்றுடனும் இயற்கையுடனும் ஒன்றிணைந்து வாழவேண்டும்.

மனிதன் என்பவன் பெரும்பாலும் `நான் சுகமாக இருக்கவேண்டும், அடுத்தவர் கவலை நமக்கேன்?' என்ற எண்ணம் கொண்ட சுயநலவாதி. ஆசைப்படு என்றால் பேராசைப் படுவான். அடக்கம் தேவை என்றால் அடங்க மறுப்பான். அஹங்காரம் - அது அவனது பிறவிக்குணம். இயற்கையைப் பற்றிய சிந்தனையே கிடையாது!

பாதிக்கப்பட்டால் `இயற்கை வஞ்சித்தது' என்பான். காண்பவற்றை எல்லாம் அடைய வேண்டும்; கண்டதையெல்லாம் உண்ண வேண்டும் என்பவையே மனித இயல்புகளாகி விட்டன. இவைதான் இக்கால மனித அடையாளங்களா?

ஆறு மனமே ஆறு! - 5: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

`அப்படி இல்லை' என்று நான் சொல்ல விரும்பினாலும், மனதோ `பெரும்பாலும் அதுவே உண்மை' என்கிறது. மனிதனின் நியாயமற்ற சில செயல்கள் அழிவுக்குக் காரணமாகின்றன என்பது உண்மைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தடுமாற்றமும் சுயநலமும்

கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருவன் மனம் போன போக்கில் யாத்திரை ஒன்றை மேற்கொண்டான். போகும் வழியில் ஓரிடத்தில் பணம், உடை, உணவு ஆகியவற்றைக் கொண்ட அவனது பை திருடு போனது.

எப்படி அது நிகழ்ந்தது... அது தேவையில்லை. பையோடு எல்லாம் போய்விட்டன. அது போதாதென்று, கடுமையான தாகம் வேறு. மற்றவையெல்லாம் பிறகு... முதலில் தண்ணீருக்கு ஏதாவது வழி இருக்கிறதா பார்ப்போம் என்று சுற்றும்முற்றும் பார்த்தான்.

வெகு தூரத்தில், குன்று போல் மேடான இடத்தில் கிணறு ஒன்றைக் கண்டான். அதை நோக்கி மெள்ள நடந்தான். கிணற்றுக்கு அருகிலும் சென்றுவிட்டான். அருகில் கைப் பம்பு ஒன்று இருந்தது. பம்பிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை. மனம் தளர்ந்து விரக்தியடைந்தான். மயங்கி விழும் நிலையில், சிறிய பானை தென்பட்டது. அதில் சிறிது தண்ணீர் இருந்தது. அதை எடுத்து குடிக்கலாம் என முயற்சி செய்யும்போது, `இந்தப் பானையில் உள்ள தண்ணீரை ஊற்றினால் பம்பு வேலை செய்யும். தேவையான தண்ணீரை எடுத்து பயன்படுத்திவிட்டு, மீண்டும் பானையில் தண்ணீரை நிரப்பிவிட்டுச் செல்லுங்கள்; அடுத்தவருக்குப் பயன்படும்' என்ற வாசகத்தைக் கண்டான்.

மனம் தடுமாறிக் கலங்கியது. பானைத் தண்ணீரை ஊற்றியும் பம்பில் தண்ணீர் வரவில்லையென்றால் என்ன செய்வது? உயிர் போய்விடுமோ என்ற பயம்; நீண்டதொரு மனப் போராட்டம்! தானே தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்ற சுயநலம் மேலோங்கியது.

ஆறு மனமே ஆறு! - 5: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இதிலிருந்து என்ன தெரிகிறது? நிலை தடுமாறும்போது, மனத்தை எண்ணம் விஞ்சி நிற்கும்; அப்போது சுயநலம் மட்டுமே எண்ணத்தை ஆக்கிரமிக்கும், மக்களே!

அவன் மனம் சமாதானம் அடைந்த போது, அடுத்தவருக்குத் தண்ணீர் கிடைக்க வில்லையென்றால் பெருங்குற்றம் அல்லவா என்று எண்ணினான். பானையின் தண்ணீரை பம்பில் ஊற்றி அடித்தான்; தண்ணீர் நிரம்ப வந்தது. தாகம் தீரக் குடித்தான். பானையையும் நிரப்பி வைத்தான்.

ஆக, ஒவ்வொருவரும் `தன்னைப்போலவே அடுத்தவரும்' என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். இந்த எண்ணத்தை மனத்தில் கொண்டால், தடுமாற்றம் ஏற்படாது; சுயநலம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது, தெரியுமா?

தொடர்ந்து, நமக்கான எச்சரிக்கைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். அதற்குமுன், வெண்மலர் தியானத்தைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.

வெண்மலர் தியானம்

மனத்தை ஓரிடத்தில் இருத்திக்கொள்ளுங்கள். விண்ணிலிருந்து இறை ஆற்றல் வெண் மலர்களைப் பூமியை நோக்கித் தூவுவதாகவும், அவை பூமியின் இயற்கைப் பொக்கிஷங்களான மண், நிலம், மலைகள், நதிகள், ஏரிகள், காடுகள், விலங்குகள் மீதும், மக்களாகிய நம் மீதும் விழுந்து - நம் மனத்துக்குள்ளும் நிரம்பி... வெண் பூக்களால் ஆன பிரம்மாண்டமான அமைதிப் போர்வை எங்கெங்கும் படர்ந்திருப்பதைப் போல் மனக் கண்ணில் காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அந்தக் காட்சி, மனிதனும் இயற்கையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த துருவங்கள் என்பதை உணர்த்தும். மேலும், கவலைக்கிடமான இன்றைய சூழலில் மன அமைதியையும், மற்றவரையும் துன்பத் திலிருந்து மீட்கும் நல் அதிர்வுகளையும் தரும். அதாவது நிம்மதியைத் தரும் நிழலாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும், இயற்கையைப் பாதுகாக்கும் மார்க்கமாகவும் திகழும். இதுதான் `வெண்மலர் தியானம்'. அதுசரி... வெண் மலர் எதற்காக?! வெண்மை மாசற்றது; அமைதி, சேவை, பரோபகாரம் ஆகிய குணங்களைக் குறிப்பது!

- மனம் மகிழும்...

அம்மா...சிறு வயதில்.

டகு சவாரிக்குக் காசில்லாமல், பண்டாரத் துருத்து கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்குச் செல்லும் 12 கி.மீ. நடைபயணம், சுதா மணிக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது.

கிருஷ்ண கானத்தைப் பாடியபடி செல்வதற்கு வசதியாகிவிட்டது. கடல் அலைகள் அதனை வரவேற்பது போல் அம்மாவின் கால்களை வருடிச் செல்லும். வயலுக்குக் காவல் சென்றாலும், தனிமை கிருஷ்ணகானத்தின் வசம்தான். அவ்வப்போது, நெல் அரைத்து வரும் வேலையும் கொடுப்பார்கள். அதில் சிறிதெடுத்து தேவையுள்ளவர்களுக்குக் கொடுப்பாள்.

அதற்காக பாட்டியிடம் திட்டும் அடியும் கிடைத்தாலும் கொடுத்தது யாருக்கு என்பதைச் சொல்லவே மாட்டாள். பாட்டி வீட்டில் பெரிய கிருஷ்ணன் படம் உண்டு. அதன் முன் நின்று பக்திப் பாடல்களைப் பாடுவாள். அவருடைய பெரிய மாமா `நாற்காலியில் உட்கார்ந்து பாடு' என்றால், `கடவுள் முன் நின்றுதான் பாட வேண் டும்' என்பார் அம்மா. ரம்மியமான குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடிவிடுவர். இறுதியில் விபூதி பூசி திருஷ்டி கழித்துவிடுவாராம் மாமா!

14-வது வயதில் பெரியம்மா வீட்டுக்கு வேலைக்குச் சென்றார். அந்த வீட்டுச் சூழலே வேறு. அவ்வீட்டுப் பிள்ளைகள் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள். அனைத்தையும் சுதாமணியே செய்யவேண்டும். அவர்களுக்குக் கடவுள் பக்தி கிடையாது. ஆகவே, கிருஷ்ண கானமும் அங்கு கட் ஆகிவிட்டது, கிடைத்த நேரத்தில் பக்தியில் ஈடுபட்டால், அங்குள்ள பிள்ளைகளின் தொல்லை அதிகமாகும். அந்தக் கிராமத்தில் உப்பங்கழிகள் அதிகம். அவற்றைத் தாண்டி தோணியில் சென்று தான் வீட்டுக்கு வேண்டிய குடிநீரைக் கொண்டு வரவேண்டும். அதையும் சுதாமணிதான் செய்தாக வேண்டும்!