Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 6: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

செல்லங்களே... ஒவ்வொரு நாளும், ஏதோவொரு விஷயத்தில், ‘நேரம் வந்துவிட்டது விழித்துக்கொள்' என்கிற எச்சரிக்கை மணி நம்மைச் சுற்றி ஒலித்துக்கொண்டேதான் இருக் கிறது. ஆனால், நம் சிந்தனைதான் எப்போதுமே உலக சுகங்களில் மூழ்கியிருக்கிறதே!

பிறகு எப்படி அந்த எச்சரிக்கை மணி நம்மை விழித்துக்கொள்ளச் செய்யும்? அதுமட்டுமா, பெரும்பாலும் அத்தகைய எச்சரிக்கைகள்மீது நாமும் அக்கறை காட்டுவது இல்லையே!

இதோ, நீங்கள் அக்கறை காட்ட வேண்டிய எச்சரிக்கைகள்!

அடுத்தவரின் வலியை நாம் உணரவேண்டும், அவர்களை நம்மில் ஒருவராக மனத்தளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

துன்பம் நமக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என உணர்ந்தாலே அடுத்தவர்மீது அக்கறை காட்ட முடியும் இல்லையா?

ஆறு மனமே ஆறு! - 6: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள் மனத்தை நன்னெறி சிந்தனை மார்க்கத்துக்கு அழைத்துச் செல்ல சரியான நேரம் இது. இப்போதெல்லாம் உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் இணையதளம் வழியாக அப்டேட் செய்துகொள் கிறோம். அதுபோல, மனம் எனும் ‘உள்-வலைதள’த்தையும் (Inner-net) ஆத்ம சோதனையில் ஈடுபடுத்தி, அவ்வப்போது ஏன் அப்டேட் செய்துகொள்ளக் கூடாது?

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொண்டு, சுக - துக்கங்களில் பங்கெடுத்து, பாதிக்கப்பட்டவரை அலட்சியப்படுத்தாமல் அக்கறை காட்டி வாழ்ந்தாலே போதும் என் மக்களே. இது எச்சரிக்கை ஒன்று!

ஆறு மனமே ஆறு! - 6: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

எல்லாமே தனக்கு மட்டுமே வேண்டும் என்ற பேராசை கூடாது! உலகின் வளங்கள் அனைத்தும் தனி மனிதச் சொத்து இல்லை, படைப்புகள் அனைத்தும் எல்லோருக்கும் பொதுவானவை என்றும், அவை வருங்கால சந்ததிகளுக்கும் உரித்தானவை என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சரி, நாம் செய்யும் தவறுதான் என்ன?

மாற்றத்தின் கட்டாயம், மனிதனின் சுயநலம், எல்லாவற்றிலும் சபலம்... இவைதானே நாம் இழைத்த, இழைக்கின்ற தவறுகள். இந்நிலை கடந்து முன்னேறுவது நம் கடமையும், அவசி யமும் ஆகும் என்பது எச்சரிக்கை இரண்டு!

நாம் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பொருள்கள் ஒவ்வொன்றுக்கும்... இந்தப் பொருளை இப்படிப் பயன்படுத்தவேண்டும், மோட்டார் அதிக நேரம் ஓடினால் எரிந்து விடும் போன்ற எச்சரிக்கைகள் அடங்கிய செயல்விளக்கக் கையேடு உள்ளது. அதுபோல்,

நம் வாழ்க்கை நெறிக்கான செயல்விளக்கக் கையேடுதான் ஆன்மிகம்.

அவசரகதி வாழ்க்கையில் மனிதன் பெரும்பாலும் கடவுளை யும் ஆன்மிகத்தையும் மறந்து, காலத்தை ஓட ஓட விரட்டுகிறான். பணம் தேவைதான். அதற்காக, அது மட்டுமே இலக்கு என்று பணத்தின் பின்னால் ஓடக் கூடாது என்பது எச்சரிக்கை மணி மூன்று.

கடவுள் பக்தியிலும்,ஆன்மிகத் திலும் நாட்டம் கொள்ள வேண்டும். வாழ்வின் நல்லது கெட்டது, மனித நேயம், அன்பு, சமத்துவம், எல்லோருக்கும் உதவுவது, கடவுள் நம்பிக்கை ஆகியவற்றைக் கற்றுக்கொடுப்பதே ஆன்மிகம்.

ஆறு மனமே ஆறு! - 6: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இக்கட்டான சூழலிலும் துன்பத்தை வென்று காட்டுங்கள், ஆண்டவனின் கருணையால் ஆக்க பூர்வமாகச் செயல்படுங்கள், முடிந்தவரையிலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்யுங்கள், யோகா பயிற்சி, ‘வெண் மலர் தியானத்தில் ஈடுபடுங்கள், மற்றவர்களையும் ஈடுபடுத்துங்கள், ஆன்மிகப் புத்தகங்களைப் படியுங்கள்... இப்படி எவ்வளவோ செய்யலாமே!

அதேபோல், இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வருடமும் பல ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அம்மா யாத்திரை செல்வது வழக்கம். ஒருமுறை வட இந்திய யாத்திரை மேற்கொண்டிருந்தோம்.

யாத்திரையில் பக்தர்கள், தொண்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் இருந்தோம். ஓரு நாள் உணவு வேளை நெருங்கியதும் ஓர் ஊரில் உண்டு இளைப்பாற வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். மிகப் பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்தோம்.

அதே மரத்தினடியில்தான் மகான் ஒருவர் தமது துறவற தவ வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கூறினார்கள். அனைவரும் அந்த மரத்தைச் சுற்றி வலம் வந்து, சிரத்தையுடன் வழிபடுவதைக் கண்டோம். காற்றில் மரத்தின் கிளைகள் அசையும்போது இலைகள் உதிர்வதையும், பக்தர்கள் அந்த இலைகளை, வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கும் பொருட்டு பக்தி சிரத்தையுடன் பிரசாதமாக எடுத்து செல்வதை யும் கண்டோம். அவர்கள், அந்த மரத்தைத் தெய்வமாக வழிபடு வதுடன், நல்ல முறையில் பாதுகாக்கவும் செய்கின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும் அங்கு மரமும், இயற்கையும் பாதுகாக்கப் படுகிறதல்லவா? இப்படி எல்லோரும் மரங்களையும், இயற்கையையும் பாதுகாத்து வணங்கினால், உலகம் பசுமைச் சோலையாகிவிடாதா?

நாம், உலகத்தை ஓர் வியாபார பூமியாக பார்க்க ஆரம்பித்துவிட்டோம்! அள்ள அள்ள குறையக் கூடாது எனும் பேராசை, வீண் ஆடம்பரம், போலி கெளரவம், தான் என்ற அகங்காரம் ஆகியவற்றின் மொத்த வடிவமாகிவிடுகிறான் மனிதன்.

ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால், தேவை இருக்கிறதோ இல்லையோ ஒவ்வொருவருக் கும் தனித் தனி கார். அவை, கார் ஷெட்டில் அலங்காரமாகத் தூங்கிக் கொண்டிருக்கும். அடுத்தத் தெருவில் உள்ள காய்கறி கடைக்குக்கூட ஆடி காரில் செல்கிறான்; அதில் ஒரு பெருமை! 10 மணி நேரத்தில் சாலைவழியே சென்று அடையலாம் என்றாலும், விமானத்தில் பயணிப்பதில்லையா?

இத்தகைய செயல்களால் வெளியேறும் நச்சுக்கழிவுகள் அனைத்தும் காற்றில் கலந்து மனிதனைச் சாய்க்கும் காலனாகிவிடுகின்றன. விதவிதமாக நோய்கள் உருவாகின்றன, லட்சக் கணக்கில் மக்கள் இறந்துபடுகின்றனர்.

இவற்றையெல்லாம் யோசித்துப் பார்த்தால், இயற்கையின் நோக்கமே அழிந்துவிடுகிறது என்பதை அறியமுடியும் செல்லங்களே. இயற்கை இல்லாமல் மனித இனமோ, கலாசாரமோ கிடையாது, ஆனால் மனித இனமே இல்லை என்றாலும் இயற்கை அழிவற்றது என நம்புங்கள்! இன்றைய நிலையில் இயற்கையை மதிக்க வேண்டும், பாதுகாத்து வாழவேண்டும் என்பதும் ஓர் எச்சரிக்கையாகும்.

செயற்கையே வாழ்க்கைமுறை என்றாகி விட்டதால், மாசற்ற சுற்றுப்புறம் என்பதை எங்கே பார்க்கமுடிகிறது? வளர்க்க வேண்டியதை அழிக்கிறோம்; அழிக்கவேண்டியதை உற்பத்தி செய்கிறோம்.

உலகின் உணவுச் சூழலில் சக்தியே இல்லை எனும்போது, எதிர்ப்பு சக்தி எங்கிருந்து கிடைக்கும்; அடிக்கடி காணாமல் போய் விடுகிறதே! இயற்கை ஊக்கிகளை நாம் பயன் படுத்தத் தவறினோமா அல்லது அதற்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதா?

செயற்கையான மருந்தைக் கண்டுபிடிக்க படாதபாடு படுகிறோமே... கண்டுபிடிக்கப்படும் வரை இழப்புகள் ஏராளம் அல்லவா?!

பிறந்த குழந்தைகளுக்கும் சரி... வயது முதிர்ந்தவர்களானாலும் சரி... உடலும் மனமும் பலவீனமாகி விடுகின்றன. மனிதன், `தான் வலிமைப் படைத்தவன்' என்று கர்வத்தோடு வாழ்ந்தாலும், அவன் தன்னுடைய பலவீனத்தை எதிர்த்து போராடும் தருணம் இது என்பதை இயற்கை உணர்த்துகிறது, இல்லையா?

இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும். இதுவும் இயற்கையின் விதிதானே என் மக்களே!

- மனம் மகிழும்...

அம்மா... சிறு வயதில்!

வீட்டில் அதிகம் கெடுபிடியும் கண்டிப்பும் உண்டு. விபூதி பூசிக் கொண்டால், `என்ன சிந்நியாசியாகப் போகிறாயா?' என்று கூறி விபூதிக்குத் தடை விதிக்கப்பட்டது.

முகத்துக்குப் பவுடர் பூசிக்கொள்ளக் கூடாது, பிறரிடம் சிரித்துப் பேசக்கூடாது, வண்ண பூப்போட்ட அழகான உடை அணியக் கூடாது. மீறி அணிந்தால் மனம் நோகும்படி பேசுவர்கள்.

ஒருமுறை புள்ளி போட்ட சட்டையை அணிந்ததால், அந்தச் சட்டையை எரித்துவிட்டனர். `சிறு வயதுப் பெண் இப்படி அசட்டையாக இருக்கக்கூடாது' என்று புத்திமதிவேறு சொல்வார்கள். இப்படி, பல கட்டுப்பாடுகள்!

வயது முதிர்ந்தவர்களை அப்பா, அம்மா என்றுதான் அழைப்பாள் சுதாமணி. வீட்டார், `கண்டவர்களையும் அப்படிக் கூப்பிடக் கூடாது' என்று கண்டிப்பார்கள். சுதாமணியோ `உண்மையான அப்பா அம்மாவை நான் இன்னும் கண்டபாடில்லை. ஆகவேதான் அப்படி அழைக்கிறேன்' என்று பதில் அளிப்பார்!

அவர் தன் பெற்றோரை அம்மா, அப்பா என்று அழைத்ததில்லை. அதற்கும் திட்டு விழும். `உயிரைக் கொடுப்பது இறைவன். எனவே இறைவன்தான் தாயும் தந்தையும் ஆவார்கள். நீங்கள் பெற்று வளர்த்தவர்கள். ஆகவே, நீங்கள் பெற்றோர் ஆவீர்கள்' என உறுதியாக சொல்வாரே தவிர, தன்னுடைய பழக்கத்தை அவர் மாற்றியதே இல்லை!