Published:Updated:

ஆறு மனமே ஆறு - 14 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு - 14 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

காபாரதம், வேதங்கள் முதலான அனைத்தும் வாழ்வியலில் கணவன் மனைவி உறவைச் சிறப்பிக்கும் வழிகாட்டியாக உள்ளன. எனினும் இந்த ஞானநூல்கள் தரும் வழிகாட்டுதல்படி உங்களில் எத்தனைபேர் வாழ்கிறீர்கள்? ஓருசிலர், இவற்றின் மீது நம்பிக்கையற்று வாழ்க்கைப் பாதையை மாற்றிச் செல்லும் போதுதான் சங்கடங்கள் ஏற்படுகின்றன!

ஆணோ, பெண்ணோ... வரும் சங்கடங்களைச் சமயோசிதமாக எதிர்கொள்பவர் மட்டுமே உலகைக் காக்கும் தாய்மை குணத்தைப்

பெற முடியும் மக்களே. குழந்தைகளிடம் மட்டுமல்ல... மனித இனம், விலங்குகள், தாவரங்கள், மலைகள், பாறைகள் என சகலத்தையும் தாயன்புடன் அரவணைத்து வாழும்போது, அவள் அனைத்துக்குமே தாயாகிறாள். அப்போது கணவனும் அந்த வட்டத்துக்குள் வந்துவிடுகிறான். இதுவே தெய்விக அன்பாகும். இப்படியான நிலையையே ஆண்டவனின் வடிவமாகக் கருதுகின்றனர் பெரியோர்கள்.

இதுதான் கணவன் - மனைவி உறவு. புரிகிறதா மக்களே?

 ஆணும் பாதிக்கப்படுகிறானே…

இன்னொரு விஷயத்தையும் நம் மனத்தில் கொள்ளவேண்டும் என் செல்லங்களே! ஆண்களே அதிகப்படியான குற்றங்கள் செய்வதாகப் புள்ளிவிவரங்கள் சொன்னாலும், இப்போதுள்ள நிலைப்படி ஆண்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மைதான்.

எப்படி என்கிறாயா? அன்பு, கருணை மற்றும் பொறுமை எனும் பெண்ணின் அடிப்படைக் குணங்கள் மட்டுமே மனிதனின் இயல்பான முரட்டுத்தனம், மிகைப்பட செயல்படும் போக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் சக்திகளாகும். இந்தப் பண்புகள் பெண்கள் பலரிடம் வெகுவாக குறைந்துவருகின்றன. ஆகவே, ஆண்கள் சிலரும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல், சில தருணங்களில் ஆணின் குணங்களில் சில, பெண்களுக்குத் தேவைப்படுகின்றன. அப்போதுதான் அவள் தம் புனிதத்தைக் காப்பாற்றமுடியும்; சூழ்நிலைக் கைதியாகி கட்டுண்டு கிடக்கும் நிலையும் அவளுக்கு ஏற்படாது.

ஆறு மனமே ஆறு - 14 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

 பார்வை மாற வேண்டாமா?

நாம் எப்போதுமே அடுத்தவரிடமுள்ள நற்குணங்களைக் காண வேண்டுமானால், முதலில் நம் இதயம் நிர்மலமாக இருக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அகங்காரம், பொறாமை, வக்கிர புத்தி, வெறுப்பு ஆகியவற்றால் நம் பார்வை களங்கப்படுகிறது.

அதனால்தான் நம்மால் அடுத்தவரின் நற்குணங்களை நற்செயல்களை உணரவோ, ஏற்றுக்கொள்ளவோ, பாராட்டவோ, ஜீரணிக்கவோ முடிவதில்லை. அத்துடன் பலநேரங்களில் அவர்களோடு நட்பு பாராட்டவும் முடிவதில்லை!

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு குடியிருப்பில் புதுமணத் தம்பதி புதிதாகக் குடியேறினர். மறுநாள் காலையில் மனைவியானவள் கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டுத் தோட்டத்தில் உலர்த்தப்பட்டிருந்த துணிகளைப் பார்த்தாள்.

கணவனை அழைத்து “துணியை எப்படிச் சுத்தமாக துவைப்பது என்பதுகூட அடுத்த வீட்டில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குக் கற்றுத் தரவேண்டும் போலிருக் கிறதே...'' என்று பரிகாசம் செய்தாள்.

ஆறு மனமே ஆறு - 14 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

கணவன் பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டான். இப்படியே அடுத்தடுத்த நாள்களும் அவள் அடுத்த வீட்டுத் துணிகளைப் பற்றி கிண்டலடிப்பதும் கணவன் பதிலேதும் சென்றுவிடுவதும் தொடர்ந்தன.

ஒரு நாள் காலையில் அவசரமாகக் கணவனை அழைத்தவள், “அங்கே பாருங்களேன்... ஒரு வழியாக அடுத்து வீட்டுக்காரர்கள் துணியைச் சுத்தமாகத் துவைப்பது எப்படி என்று கற்றுக் கொண்டுவிட்டார்கள் போலும். இன்று துணிகள் மிகச் சுத்தமாக இருக்கின்றன!” என்றாள். அதற்குக் கணவன் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்.

“வேறொன்றும் இல்லை. இன்று நான் அதிகாலையே எழுந்து நம் வீட்டு ஜன்னலின் கண்ணாடிக் கதவுகளை முன்னும் பின்னுமாய் நன்றாகக் கழுவித் துடைத்துவிட்டேன். ஜன்னல் கண்ணாடிகள் பளிசென்றாகி விட்டன. அடுத்த வீட்டுத் துணிகளும் சுத்தமானவையாகத் தெரிகின்றன!''

ஆம்! நம் பார்வையை ஏதோ ஒன்று மறைத்து விடுகிறது. கண்ணாடி ஜன்னல் அழுக்கு படிந்து அசுத்தமாக இருந்திருக்கிறது. அந்தக் காரணத் தால் அடுத்த வீட்டுத் தோட்டத்தில் உலர்த்தப் பட்டிருந்த துணி அழுக்காகத் தெரிந்துள்ளது.

மனிதனின் அகங்காரம் உச்சம் அடையும் போது, தனது குறையை அறியாமல் மற்றவர் களை மட்டம்தட்டிப் பேசவும் கேலி செய்ய வும் தூண்டும்.

ஆக, எல்லாமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, மக்களே!

 கணவன்-மனைவி வேலைக்குச் செல்வது...

பெண்ணானவள் வேலைக்குச் செல்வதை நான் முழுவதுமாய் ஆதரிக்கிறேன். ஆனால் ஆணோ, பெண்ணோ வேலையைக் காரணம் காட்டி குடும்பத்தைத் தவிர்ப்பது சரியல்ல.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் செலவினங்கள் காரணமாக கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என்று காரணம் கூறலாம்.

உண்மை அது மட்டும்தானா? வீடு வாங்க வேண்டும், ஒன்றுக்கு இரண்டு கார்கள் வேண்டும், ஊர் மெச்ச ஆடம்பரமாக வாழ வேண்டும், தேவைக்கு மேல் பொருள் சேர்க்க வேண்டும் முதலான ஆசைகளும் காரணம்.

போலியான கெளரவம், தேவையற்ற ஆடம்பரம் ஆகியவற்றுக்காகவும் சேர்த்து சம்பாதித்து சமாளிக்கும் நிலையும் உண்டு. அதனாலேயே சில வீடுகளில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வது என்பது தவிர்க்க முடியாததாகிறது என்பதை யும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

வேலைக்கு சென்று சம்பாதித்தால் மட்டுமே

எல்லாம் சரியாகிவிடுமா?

குடும்பம், உறவுகள், குழந்தைகள் என்பது பற்றியெல்லாம் இன்னும் பேசுவோம்... என் செல்லங்களே!

- மலரும்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மா சிறு வயதில்...

பெண் பார்க்க வந்த அனைவரையும் ஒவ்வொருவிதமாகத் திருப்பியனுப்பி திருமணத்துக்கான தன் எதிர்ப்பைத் தீவிரமாக வெளிப்படுத்தினார் சுதாமணி.

ஒருநிலையில் திருமணத்துகான முயற்சிகள் தீவிரம் அடைய வீட்டை விட்டு வெளியேறி விடலாமா என்றும் எண்ணினார். ஒருநாள், வீட்டை விட்டும் கிளம்பிவிட்டார். வெளியில் வந்தபோது, செய்தித் தாள் ஒன்று பறந்து வந்து அவர் முன் விழுந்தது.

அதில், தனியாகச் சென்ற பெண்ணொருத்தி முரடர்களிடம் சிக்கித் தாக்கப்பட்ட செய்தி வெளியாகியிருந்தது. `வீட்டைவிட்டுப் போகக்கூடாது என்பதற்கான கடவுளின் எச்சரிக்கையோ?' என்று எண்ணி வீட்டுக்குத் திரும்பினார்.

வேறொரு நாள் கடலில் குதித்துவிடலாமா என்றும் அவர் யோசித்தாராம். அப்போது அவரின் மனம் `பிறப்பு - இறப்பு போன்றவற்றை முடிவு பண்ண நமக்கு என்ன உரிமை இருக்கிறது' என்று கேள்வி எழுப்பியது.

அதன்பின்னர் பக்தி மார்க்கத்தில் தியானிப்பது தீவிரமானது. பெரும்பாலும் பூஜையறையில் தூங்குவதையே வழக்கமாகக்கொண்டார். இடம் மாறி படுத்தால், வேண்டாத காட்சிகள் தோன்றின!

அதேநேரம், தூங்கும்போது கண்களை மூடினால் எங்கே கிருஷ்ண தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலை எழும். அதனால் உறக்கம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.

சில நேரங்களில், தானே கிருஷ்ணன் என்பது போல் உணர்வாராம். பூஜை அறையைத் தாளிட்டுக்

கொண்டு, கோபியருடன் மரங்களில் ஏறி விளை யாடுவது போலவும், பசுக்களுக்குத் தழை பறித்து உணவளிப்பது போலவும், கண்ணனுடன் வெகு தூரம் கைப்பிடித்து நடப்பது போலவும், பேரானந்த நிலையில் கிருஷ்ணனுடன் நடனமாடுவ

தாகவும் , குழலோசை தன்னிடமிருந்து வருவதாக உணரும் நிலைக்கும் தள்ளப்பட்டு ஆழ்நிலை பக்தியில் லயித்திருப்பாராம். மொத்தத்தில், உலகில் தம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்திலும் கிருஷ்ணனே உறைந்திருப்பதாக எண்ணம் கொண்டார் சுதாமணி.

இத்தகைய உணர்வுகளைப் பற்றி அம்மா பிற்காலத்தில் சொல்லும்போது, ``இயற்கையில் உள்ள அனைத்தையும் கண்ணனாகக் கண்டேன். கடற்கறை மணலில் கண்ணன் இருப்பதால் அதன்மீது நடப்பதற்கும் தயங்கினேன். பார்க்கும் மலர்களில் அவன் இருப்பதால் அவற்றைப் பறிக்கத் தோன்றாது. காற்று மெள்ள என்னைத் தழுவிச் செல்லும்போது கண்ணனே என்னைத் தழுவுவதாக உணர்ந்தேன். இடையிடையே `நானே கண்ணன்' எனும் உணர்வையும் பெற்றேன். நாளாக நாளாக இந்த நிலை தீவிரமானது. கண்ணன் வேறு, நான் வேறு இல்லை எனும் நிலையைத் தெளிவாக உணர்ந்தேன்” என்றார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism