Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு! - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
ஆறு மனமே ஆறு
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு
ஒருமுறை மேலை நாட்டு நிருபர் ஒருவர் என்னிடம் கேட்டார்:
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“பெண்கள் ஒருசில துறைகளில் செயல்பட வேண்டாம் என்பது போல் அம்மாவுடைய வாக்கு அமைந்திருப்பதாகச் சொல்கின்றனரே... அப்படியென்றால், அத்தகைய கருத்து பெண்களை நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்காதா?’’

நான் சிரித்தபடி பதில் சொன்னேன்: “சொல்வதை நன்கு உள்வாங்கி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். பெண்கள் மட்டுமல்ல; பத்திரிகை நண்பர்களும் எதையும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. பெண் அடுப்படியில் அடைந்துகிடக்க வேண்டியவள் அல்ல என்பதிலும் அவள் எல்லா துறைகளிலும் பிரகாசிக்க வேண்டியவள் என்பதிலும் எனக்கு மட்டுமல்ல, எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

நான் சொல்வது என்னவென்றால்... ஒரு மொழியைக் கற்கும்போது, முதலில் அடிப்படை எழுத்துக்களைக் கற்கவேண்டும். அதுபோல் பெண்ணைப் பற்றி அறியவேண்டுமானால், அவளுடைய வாழ்க்கைப் பாதையின் அடிப்படைக் குணாதிசயங்களைக் கண்டறிய வேண்டும். பெண்ணிடம் இயல்பாகக் காணப்படும் தாய்மை சக்தியின் - அடிப்படையில் எதையும் சாதிக்க இயலும் உறுதியான நம்பிக்கையே அத்தகைய குணமாகும்.

பெண் என்பவள், எந்தத் துறையை வேண்டுமானாலும் தேர்ந் தெடுத்துக்கொள்ளட்டும். கடவுளும் இயற்கையும் அவளுக்கு வரப் பிரசாதமாக அளித்துள்ள இத்தகைய குணத்தை மறந்துவிட்டு செயல்படக்கூடாது. ஆகவே, அதற்கேற்ற துறைகளை அவள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதே எனது கருத்து. ஆகவே, பெண்ணானவள் அவளின் வளர்ச்சிக்கு உதவாமல் வீழ்ச்சிக்குக் காரண மாகும் துறைகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். புரிகிறதா...’’ என்றேன் அவரிடம்.

ஆறு மனமே ஆறு! - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

நான் சொல்வது சரிதானே!

நம்முடைய இன்றைய நிலை என்ன?

பிற கலாசாரங்களிலிருந்து சிந்தனைகளைக் கடன் வாங்கி, நல்லது கெட்டதைப் பகுத்தாய்வு செய்யாமல், அப்படியே கண்மூடித்தனமாக பின்பற்றுவதே நமது இயல்பாகி வருகிறது. வேதங்களும் அவற்றின் மூலம் நமக்கு வழிகாட்டும் ரிஷிகளின் வாக்குகளும்தான் பாரதக் கலாசாரத்தின் உயிர்மூச்சாகும்.

அத்தகைய கலாசாரப் பண்பினை விட்டு அகன்று, அவற்றுக்கு எதிராக நாம் செயல்படுவது, நம்மையும் நமது கலாசாரத்தையும் நாமே அழித்துகொள்வதற்குச் சமம் ஆகும். ஆக, நமது கலாசாரத்தை மீட்டெடுப்பது உங்கள் கடமை; நிச்சயம் உங்களால் முடியும்.

கால, தேச வித்தியாசமின்றி உடல், மனம், அறிவு என அனைத்து வகையிலும் பெண் பல கொடுமைகளை அனுபவிக்கிறாள். வளர்ச்சி அடைந்த நாடுகளிலும்கூட, சிறிதளவு கூட்டல் - கழித்தல் இருக்குமே தவிர, அங்கும் இந்நிலை முற்றிலும் மாறவில்லை என்பதே உண்மை.

பெண்கள் என்ன பூனைக்குட்டிகளா? எப்போதும் வீட்டையே சுற்றி சுற்றி வருவதற்கு!

சிங்கம் போன்ற வீரமும் பலமும் பெண்ணி டம் உள்ளன. பெண் என்பவள் ஏற்றப்படும் மெழுகுவத்தி அல்ல; சுயமாகப் பிரகாசிக்கும் சூரியனைப் போன்றவள். இதை என்றென்றும் மனத்தில் கொள் மகளே!

அதேபோல், உரிமைக்காக போராட்டக் குரல் கொடுக்க வேண்டும் எனும் நிலை வந்தால், நிச்சயம் போராடவும் வேண்டும் என்பதையும் மனத்தில் கொள்ள வேண்டும். அதேநேரம்... இன்றொன்றையும் நினைவில் கொள்ளவேண்டும். போராட்டம் என்ற பெயரில் வாழ்க்கை முழுவ தும் போராடிக் கொண்டிருந்தால், வாழ்வின் இனிமையை இழப்போம்! ஆம்! ஆண்-பெண் இருவரும், உரிமையை விரும்பும் அதே நேரத்தில் விட்டுக் கொடுத் தும் வாழப் பழகவேண்டும்.

அர்த்தநாரீஸ்வர தத்துவம்!

`யார் பெரியவர்' என்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எப்போ தும் கடும் போட்டி உண்டு.

ஆண்-பெண் இருவரையும் உடலளவில்... அதாவது, எலும்பும் சதையும் கொண்ட தனித் தனி வடிவங்களாகத்தான் பார்க்க வேண்டுமா என்ன? இரு சக்திகளாகவே அந்த நிலையைக் காணவும் யோசிக்கவும் வேண்டும்.

ஆணுக்குள் பெண்ணும், பெண்ணுக்குள் ஆணும் அந்தர்யாமியாக இருக்கிறார்கள் என்பதே உண்மை. ஈசனின் அர்த்தநாரீஸ்வர திருவடிவம் உணர்த்துவது இதையே. நாம் படமாகவும் சிலையாகவும் பார்ப்பது போல், சிவன் பாதி; சக்தி பாதி உருவம் என்றில்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பதே தத்துவம். அதாவது இரண்டும் ஒன்றுக்குள் ஒன்றானது; பிரிக்க முடியாதது என்பதை புரியவைப்பதே அர்த்தநாரீஸ்வர வடிவம்!

இந்தத் தத்துவத்தைப் புரிந்துகொண்டால், ஆண்-பெண் இருவரும் சமம் என்ற உண்மை புரியும். `அப்படியானால், பெண்கள் தாழ்த்தப் படுவது ஓரவஞ்சனைதானே?’ என்று நீங்கள் கேட்கலாம். எல்லா ஆண் களும் அப்படி இல்லை. அதேபோல் எல்லா பெண் களும் அடங்கிப் போவது இல்லை என்பதும் உண்மை! விதிவிலக்கு என்பது வாழ்வின் பொது விதி. பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி, வாழ்க்கையின் இந்தப் பொது விதிக்கு விலக்கானவர்கள் அல்ல!

ஆறு மனமே ஆறு! - 9: ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அப்படிப் பார்த்தால், ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் ஆதிக்கவாதிகள் இருக்கத்தானே செய்வார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெண்களிடத்தும் ஆதிக்கக் குணம் கொண்டவர்கள் இருக்கின்றனர். விகிதம் மிகக் குறைவாக இருக்கலாம். பெண்களும் இதனைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதுதான் இயல்பு...

ஆணாதிக்கம் - பொதுவாக இதுதான் எல்லா பெண்களுடைய புகாராக இருக்கும். `உண்மைதான்’ என்று ஒரு சிலரும், `காரணம் யார்’ என்று எதிர் தரப்பினரும் கேட்கின்றனர். ஆண்களுக்கு அடங்கியே பெண்கள் வாழவேண்டும் என்ற விதியை யார் எழுதினார்கள் என்பது யாருக்கும் தெரியாது!

ஒரு வேளை, ஆளப்பிறந்தவர்கள் என்ற நினைப்பில் ஆண்களே இதை எழுதியிருக்க லாம். `இது ஆண்களுடைய பிறவிக் குணம்’ என்றும் சிலர் சொல்லலாம். ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே பொருள் ஈட்டும் நிலை இருந்ததால், இந்நிலை ஏற்பட்டிருக்கலாம்!

ஆனால், ஒரு விஷயத்தை எவரும் மறந்து விடக்கூடாது. பேரரசர்களை எதிர்த்துப் போரிட்டு ராஜ்ஜியத்தை மீட்ட வீர மங்கை களும் நம் நாட்டில் உண்டு. அவர்களைப் பற்றி வரலாற்றில் படித்தும் நிலைமை மாற வில்லையே?

ஆண்களில் பலரின் மனநிலை பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்.

ஒரு கிராமத்தில் பெண்ணொருத்தி தன்னலம் கருதாது மக்களுக்குத் தொண்டாற்றி வந்தாள். கிராமத்தின் மதத் தலைவர்கள், அவளை அப்பகுதியின் முதல் பெண் மத போதகராக நியமித்தனர். அதன் பிறகுதான் பிரச்னை தொடங்கியது.

அந்தப் பெண்மணியின் பரிவு, பணிவு, ஞானம் அனைத்தும் அந்த ஊர் மக்களைக் கவர்ந்தன. ஆண் மதத் தலைவர்கள் பொறாமை யில் வெந்துபோயினர். ஒரு முறை குருமார்கள் அனைவரும் பக்கத்துத் தீவில் நடந்த திரு விழாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆண் போதகர்கள் படகில் ஏறும்போது, ஏற்கெனவே அந்தப் பெண் போதகர் படகில் ஏறி அமர்ந் திருந்ததைக் கண்டு எரிச்சல் அடைந்தனர். `இங்குமா இவள்’ என்று சலித்துக்கொண்டனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் எரிபொருள் இல்லாமல் படகு நட்டாற்றில் நின்றுவிட்டது. எரிபொருள் நிரப்ப மறந்துவிட்டதை நினைத்துப் படகோட்டி புலம்பினான். அந்தச் சூழலில் படகில் இருப்பவர்களை விட்டுவிட்டு அவனால் அங்கிருந்து நகரமுடியாது. வேறு எவரேனும் சென்று எரிபொருள் வாங்கி வரலாம். ஆனால் மற்றவர்கள் தயங்க, அந்தப் பெண்மணி துணிச் சலுடன் முன்வந்தாள்.

“கவலை வேண்டாம் சகோதரர்களே. நான் எரிபொருள் வாங்கி வருகிறேன்” என்று கூறி, படகைவிட்டு இறங்கியவள், ஏதோ தரையில் நடப்பதுபோல் தண்ணீரின் மீது நடக்கத் தொடங்கினாள். ஆண் போதகர்கள் திகைத்தனர்!

ஆனாலும் `இந்த அற்புதம் கடவுளின் சித்தம்’ என்பதை உணரும் பக்குவம் இல்லாதவர்களுக்குப் பாராட்ட மனம் வருமா? பாராட்டாவிட்டாலும் பரவாயில்லையே... பரிகசிக்கவேண்டும் என்பதற் காக `‘இவளுக்கு நீந்தக்கூடத் தெரியவில்லையே” என்று ஏளனம் செய்தார்கள்!

இதுதான் ஆண்களில் பலருடைய இயல்பு. அது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்.

மாறாக நாம் எப்போதும் போல சாதனைகளை புரிந்தவண்ணம் இருப்போம்.

பெண்ணுக்கு, வலிமையே அவளின் இயல்பாக இருக்கவேண்டும். அது உன்னிடம் இருக்கிறதா என்று சோதித்துப் பாரேன் மகளே!

- மனம் மலரும்...

அம்மாவின் சிறு வயதில்...

சுதாமணிக்கு 15 வயதானதும் பெரியம்மா வீட்டிலிருந்து புறப்பட்டு, அமிர்தபுரியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ள கருநாகப்பள்ளிக்கு, மூத்த தாய்மாமன் ஆனந்தன் வீட்டுக்குச் சென்றாள். அங்கும் வேலைகளுக்குக் குறைவில்லை.

மிகவும் தன்மையாகவும் முகம் சுளிக்காமலும் பணி செய்த சுதாமணிக்கு, அவளின் அத்தை ஒருஜோடி கம்மலைப் பரிசளித்தார்.

எனினும் அவர்கள் வீட்டிலும் சுதாமணி வெகுநாள் நிலைக்கவில்லை. மீண்டும் பழைய கதைதான். ஏழை எளிய குடும்பங்களுக்கு, மாமா வீட்டிலிருந்து எதையாவது எடுத்து கொடுத்துக்கொண்டே இருந்தாள். ஆரம்பத்தில் இது யாருக்கும் தெரியாமல்தான் இருந்தது. ஒரு நாள் விஷயம் தெரிந்தபோது, அனைவரும் சுதாமணியின் மீது கோபம் கொண்டார்கள். சிலநேரம் தண்டனையும் கிடைத்தது.

இதுபோன்ற நிலை இன்னும் தொடரவேண்டுமா? இறைவனைத் தேடி, அவரைக் காண பயணத்தைத் தொடங்கவேண்டும் என முடிவெடுத்தாள் சுதாமணி. அவள் வீட்டைவிட்டுக் கிளம்பியபோது, வீட்டிலுள்ளவர்கள், அவர்கள் வாங்கிக்கொடுத்த பொருள்களைப் பிடுங்கிக்

கொண்டனர். அப்போது சுதாமணி சொன் னாள்: “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... உதவிகேட்டு நீங்கள் என்னைத் தேடி வரும் காலம் வரும். அதுவரையிலும் நான் உங்களைப் பார்க்கமாட்டேன்!’’

அம்மாவின் அந்த வாக்கு பலித்தது.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, அம்மா ஆன்மிகத் தலைமைப் பொறுப்பேற்றப் பிறகு, உதவி கேட்டு அவர்கள் வந்தனர். அம்மாவும் நடந்ததை மறந்து ஒருமுறை கருநாகப் பள்ளியிலிருந்த அவர்கள் வீட்டுக்கு விஜயம் செய்தார்!