Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 8: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு! - 8: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
பெண்களைப் போற்றுக... பெண்மையைப் போற்றுக...’ என்ற நம் விவாதத்துக்கு இடையே, காலத்தின் கட்டாயம் காரணமாக இந்தக் கொரொனா தொற்றுக் காலத்தில் நம் நிலை என்ன, நாம் செய்ய வேண்டியவை என்னென்ன என்பவை பற்றி தெளிவடையும் விதமாக, ஆறு மனமே ஆறு தேடலிலிருந்து சிறிது விலகிச் சென்றிருந் தோம். இப்போது ஆன்மிகத் தேடல் பாதைக்கு மீண்டும் திரும்பு கிறோம் மக்களே!

பெண் ஆளும் திறமையற்றவளா, அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கக் கூடாதா... இதென்ன கேள்வி... பெண் திறமையற்றவள் என்று யார் சொன்னது, வாய்ப்பு அளித்தால்தானே திறமை வெளிப்படும், பெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகிறதா இல்லையா, பெண்ணுக்கு அதிகாரம் எப்படி கிடைக்கும், கொடுக்கும் பணத்தை வைத்து கனஜோராக குடும்பத்தை வழிநடத்துபவளுக்குச் சம்பாதிக்கும் வாய்ப்பும் இருந்தால் எப்படியிருக்கும்...

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவை அனைத்தும் என் மனத்தில் எழும் கேள்விகள். அதனால்தான் பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்கிறேன். காலம் மாறி வருகிறது. காலத்துக்கேற்ப ஆற்றல் பெருகும்போது, சுயமாக பொருள் ஈட்டும் வாய்ப்பும் கிடைக்கவேண்டும். அப்போதுதான் பெண், அவள் குடும்பம், அவள் சார்ந்த சமுதாயம், நாடு அனைத்தும் வளம் பெறும். முதலில் அதற்கான வாய்ப்பைப் பெண்கள் போராடிப் பெற வேண்டும் மகளே!

சில பெண்கள் வீட்டில் இருந்தபடியே சிறு சிறு தொழில்களைச் செய்துப் பொருள் ஈட்டமுடியும். வேறுசிலருக்குக் கூட்டாகச் சேர்ந்து சம்பாதிக்கும் திறமை இருக்கும். வேறு சிலர் அலுவலகம் செல்பவராக இருப்பார். இன்னும் சில தானும் உழைத்து மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் அளவுக்கு ஆற்றல் படைத்தவர்களாக இருப்பார்கள்.

மகளே, இந்த வரிசையில் நீ எந்த வகையைச் சேர்ந்தவள் என்று அடையாளம் கண்டுகொள், அதற்கேற்ப செயல்படு; செம்மைப்படு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகம் உன் கையில் மகளே!

பெண் மென்மையானவள் மட்டும்தானா. பெண் மென்மையான வள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அதேநேரம் பெண்ணி டம் மன வலிமையும் உண்டு என்பதை நம்புங்கள். ஒரு காரியத்தைச் செய்ய உடல் வலிமை தேவைப்படும்போது, அதனை ஈடுசெய்யும் விதமாக பெண்ணானவள் மன வலிமை கொண்டவளாக மாறிவிடுகிறாள். அவள் ஆற்றும் பணிகளிலிருந்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.

பல வருடங்களுக்கு முன்பு ஜெனிவாவில் நடந்த ஒர் மாநாட்டில், ஜெனிஃபர் என்ற பெண்ணை என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள்.

அவர், நியுயார்க் நகரத் தீயணைப்புத் துறைப் பணியாளர். 2001-ல் நியுயார்க் இரட்டைக் கோபுரம் தாக்குதலுப் பிறகான மீட்புப் பணியில் இருந்தவர். அந்தப் பணி ஆண்களுக்கே மிகப்பெரிய சவாலாக இருந்ததென நாம் அறிவோம். ஜெனிஃபர் மிகவும் திறமையாகப் பணியாற்றினாராம்.

என்னை அவர் சந்தித்தபோது, இரட்டைக் கோபுரம் தாக்குதல் நடந்து ஓராண்டு ஆகியிருந்தது. அப்போதும்கூட, அவர் அந்த நிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. சம்பவ இடத்தில் கண்ட உயிரிழப்பு, களேபரங்கள், கூக்குரல்கள் அனைத்தும் அவருடைய மன நிலையை எப்படி பாதித்திருக்கும் என யோசித்து பாருங்கள்! எனினும் கடினமான பணியை மன உறுதியோடு செவ்வனே செய்து முடித்தாராம்.

இதிலிருந்து ஒரு விஷயத்தை நாம் நன்கு அறியமுடியும். பெண் மென்மையானவளே. அதேநேரம், தேவைப்படும்போது ஆற்றல் அனைத்தையும் ஒன்றிணைத்து செயல்படுவள்.

நான், ஜெனிஃபரை அரவணைத்து `அம்மாவின் ஆசியோடு ஆண்டவனின் அனுக்கிரகமும் உனக்குப் பரிபூரணமாக உண்டு’ என்று ஆசி வழங்கினேன். உலகில் ஜெனிஃபர் போன்ற பெண்கள் எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள் தெரியுமா?

சமுதாயத்தில் பெண்களுக்கான இடம் என்ன?

பெண்களுக்கான மரியாதையும் அவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பதிலும் நம் பாரத கலாசாரம் மிகச் சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டதாகும்.

பாரதத்தில் - கடவுள் வழிபாட்டில் ஆண் தெய்வங்களை மட்டுமே நாம் வழிபடுவதில்லை; பெண் வடிவில் தாயாக, தேவியாக தெய்வங்கள் வணங்கப்படுகின்றனர். முப்பெரும் தேவியரான துர்கா, லட்சுமி, சரஸ்வதியை முறையே கிரியா சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி என்று வழிபடுகிறோம். பெண்களைப் பாரத சமுதாயத்தில் உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்தனர் என்பதற்கு இதைவிட வேறு விளக்கம் தேவையா மகளே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நம் தர்மத்தில் மட்டுமா... பிற மதங்களில்?

இஸ்லாமியருக்கு உருவ வழிபாடு கிடையாது. முகமது நபியை இஸ்லாமியர்கள் இறைத்தூதராக நம்புகின்றனர். இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை எனச் சிலர் நினைக்கலாம். அப்படியான எண்ணமே தவறு. பெண்மையின் குணங்களாக கருணை, ஞானம், மேன்மை ஆகியவை திருக்குரானில் காணப்படுவது உண்மை. அதுமட்டுமல்ல, இறைக் கல்வி, சொத்துரிமை, திருமணம், உணவு, வாழ்வியல் அனைத்திலும் பெண்களுக்கான உரிமை பற்றி திருக்குரானில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்துவத்தில் பொதுவாக பரலோக பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியாகவும் வழிபடுவார்கள். இறையைத் தாயாக வணங்கும் முறை கிறிஸ்துவத்தின் எந்தப் பிரிவிலும் இல்லை. இயேசு கிறிஸ்து, உலகில் அவதரித்தது புனித கன்னி மேரியின் பரிசுத்த கர்ப்பத்திலிருந்து என ஆழமாக நம்புகின்றனர்.

எது எப்படியோ... கிருஷ்ணன், இயேசு கிறிஸ்து, புத்தர் போன்ற தெய்விக அவதாரங்கல் உலகில் தோன்றுவதற்கும் ஒரு தாய் தேவைப் படுகிறாள். அதுவே பெண்மையின் சக்தி.

ஆனாலும் தற்போது வரையிலும் ஏதோ ஒருவிதத்தில் பெண் அடிமைப்பட்டிருக்க வேண்டிய வாழ்வியல் முரண்பாடு உண்டு என்பதை மறுக்க இயலாது.

`எங்கே பெண் போற்றப்படுகிறாளோ அங்கே பூரணமான தெய்விகம் மலரும். அவள் அவமானப்படுத்தப்படும் இடம் அது எவ்வளவு உன்னதமானதாக இருந்தாலும் அங்கு நடைபெறும் செயல்கள் கண்ணுக்கு மேன்மையானவையாகத் தோன்றினாலும் அவை பயனற்றுப் போகும்’ என்கிறது மனுஸ்ம்ருதி.

ஆம், அது உண்மைதான் மகளே! ஓரு பெண் இருக்கும் இடம் ஒளி மயமாகவும், அன்பும் கருணையும் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே. இவை அனைத்தும்தானே தெய்விகத் தன்மை... இந்தக் குணங்களைக் கொண்ட பெண்ணைப் போற்றிப் பாராட்டும் இடத்தில் பூரணமான தெய்விகம் மலரும் என்பதுதானே உண்மை?!

ஒரு முறை மேலை நாட்டு நிருபர் ஒருவர் என்னிடம் “பெண்கள் ஒருசில துறைகளில் ஈடுபட வேண்டாம் என்பது போல் அம்மாவுடைய வாக்கு அமைந்திருப்பதாகச் சொல்கின்றனரே, அத்தகையக் கருத்து, பெண்களை நம்பிக்கை இழக்கச் செய்யாதா’’ என்று கேட்டார்.

நான் என்ன பதில் சொன்னேன் தெரியுமா?

அம்மாவின் சிறு வயதில்...

ந்து வயதில் கிராமத்துப் பள்ளியில் சேர்ந்த சுதாமணியின் அசாத்தியமான நினைவாற்றல், புரிந்துகொள்ளும் தன்மை, புத்திக் கூர்மை ஆகியவை ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தின.

ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி
ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே, பெரிய வகுப்புப் பாடங்களையும் காதால் கேட்டு எளிதில் மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுவாள். மூத்த சகோதரன் மனப்பாடம் செய்வதற்குத் திணறும் பாடங்களையும் எளிதில் உள்வாங்கி ஒப்பித்துவிடுவாள் சுதாமணி. படிப்பில் படுசுட்டி

சுதாமணி 4-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது, குடும்பத்துக்கு மிகப் பெரிய சோதனை ஏற்பட்டது. திடீரென்று சுதா மணியின் தாய் நோய்வாய்ப்பட்டார். அவருக்குப் புற்று நோய் என கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் உடன் பிறந்தவர்கள் ஒன்பது பேர். சுதாமணியுடன் சேர்த்து ஐந்து பெண்கள், நான்கு ஆண் பிள்ளைகள். தாயார் தமயந்தி நோய்வாய்ப்பட்ட பிறகு, வீட்டு வேலைகள் அனைத் தையும் சுதாமணியே செய்யவேண்டிய கட்டாயம். அத்துடன்... நிறத்தை வைத்து அவளைக் `கருப்பி’ என்றழைத்து வீட்டில் உள்ளோர் செய்யும் கேலி-கிண்டல்கள் வேறு. படிப்பும் தடைப்பட்டது.

சுதாமணியின் தாயார் தமயந்திக்கு விருப்பமே இல்லையென்றாலும், தன்னுடைய அம்மா வீட்டுக்கு மகள் சுதாமணியை வேலைக்கு அனுப்பவேண்டிய கட்டாயம். அவரின் அம்மா அதாவது சுதாமணியின் பாட்டி வீடு பறையகடவிலிருந்து 6 கி.மீ. தூரம்!

வழியில் அவள் காணும் காட்சிகள் மனத்தைச் சங்கடப்படுத்தும். சிலருக்குத் தேவைக்கும் அதிகமாக உணவு; மிச்சம்மீதியை குப்பையில் கொட்டுகின்றனர். சிலர் பட்டினியால் உயிரிழக்கின்றர். பலருக்கும் மருந்து வாங்கவும் காசில்லாத நிலை. முதியோர்கள் பலர் குடும்பத்தால் ஒதுக்கப்பட்டனர்.

இவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் சுதாமணி வேதனைப்பட்டாள். இந்த நிலைகளுக்கெல்லாம் காரணம் என்ன?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism