Published:Updated:

ஆறு மனமே ஆறு! - 7: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன்

பிரீமியம் ஸ்டோரி

க்களே, ஏப்ரல் மாதத்தில் நான் படித்த ஒர் செய்தி. ஜலந்தர் வாழ் மக்கள் அனைவரும் இதுவரையிலும் காணாத இயற்கை அதிசயத்தை அவரவர் வீட்டு மாடியிலிருந்து கண்டனர். `ஒருவேளை, தங்களின் முன்னோர் கண்டிருப்பார் களோ' என்று முதியவர்களே மலைத்து நின்றனர்!

இமயத்தின் சங்கிலித்தொடர் வழித்தடமான சிந்த்பூர்ணி, ஜ்வாலாமுகி, சாமண்டா தேவி ஆகிய சக்தி பீட தேவிகளின் நவராத்திரி தரிசனத்தை அந்தத் தருணத்திலேயே தத்தமது வீட்டிலிருந்தபடியே தரிசிக்கும் பாக்கியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அன்று மதியத்துக்குள் சமூக ஊடகங்கள் இதை வைரலாக்கின. இந்தக் காட்சி, ஏற்கெனவே ஹோஷியாபூரில் கண்டதையும் விஞ்சியது என்றனர். ஹோஷியாபூரில் நடந்த அதிசயதான் என்ன?

ஜலந்தரிலிருந்து சுமார் 225 கி.மீ தொலைவில், இமயத்துக்கே வெள்ளிக் கவசமிட்டதுபோல், பளிச்சென்று வெண்பனியால் மூடப்பட்டு, அற்புதமாக- கம்பீரமாகக் காட்சியளித்தது தெளலாதர் சிகரம் (வெள்ளைச் சிகரம்)!

ஆறு மனமே ஆறு! - 7: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

ஏதோ அடுத்த வீட்டு மாடியில் இருப்பது போல், அவ்வளவு தெளிவாகக் காட்சியளித்த தாம். அவ்வளவு தொலைவிலிருக்கும் மலைத் தொடரை இங்ஙனம் தரிசிக்க முடிந்தது எப்படி. இயற்கையின் அதிசயமல்லவா?

லாக்டவுன் காரணமாக மக்களின் நடமாட்டம் இல்லையே, அதனாலா... போக்கு வரத்து, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் முடக்கப்பட்டு காற்று சுத்தமாகவும், நிர்மலமா கவும் இருந்ததாலா... என்ற விவாதங்கள் பல!

இயற்கையின் தூய்மைத் திருவிழா!

அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். மிகப்பெரும் ஆதாயம் இயற்கைக்குக் கிடைத்த தாகவே அம்மா பார்க்கிறேன். தெரிந்தோ, தெரியாமலோ ஆலயத்தில் ஏற்படும் புனிதம் அல்லது தூய்மைக் கேட்டினைக் களைய மந்திர ரூபமாக ‘சுத்[தம்]தி’ என்ற சடங்கை கடைப்பிடிப்பது உண்டு.

அதுவே, ஆண்டுதோறும் பவித்ரோத்ஸவம் எனும் பெருவிழாவாகக் கொண்டாப்படும். அதன்படி யோசித்தால், ஜலந்தரில் தோன்றிய அற்புதக்காட்சி, இயற்கை தனது தூய்மைத் திருவிழாவைக் கொண்டாடியதற்கான அத்தாட்சி என்றே சொல்லவேண்டும்.

இயற்கை தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எடுத்த எதிர் நடவடிக்கை என்று எடுத்துக் கொள்ளுங்கள் மக்களே!

எலும்பு முறிந்தால் வீக்கம் ஏற்படும். அது அந்தப் பகுதியின் பாதிப்பை, அந்தப் பகுதி குணமடையவேண்டிய அவசியத்தை உணர்த்தும் உடலின் எச்சரிக்கையாகும்.

தற்போதைய சூழலில், இறப்பவர்களின் எண்ணிக்கை வேதனையளிக்கிறது. உலகின் இயக்கத்தை நிலைகுலையச் செய்துள்ளது கொரோனா. ஏற்பட்ட நஷ்டத்தைக் கணக்கிட்டு மாளாது. இயற்கை இந்தக் காலத்தைப் பயன்படுத்தித் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்கிறது என்றே சொல்லவேண்டும்.

கங்கை போன்ற நதிகளிலும் மாசு பெருமளவு குறைந்து, பெரியளவிலான மீன்களும் அதில் காணப்பட்டதாகச் செய்திகள் உண்டு. காட்டு விலங்குகள் காட்டைவிட்டு ஊருக்குள் நடமாடுகின்றன. இயற்கையின் இணக்கம் மீட்டெடுக்கப்பட்டுச் சமநிலையைப் பார்க்க முடிகிறது. வலி அனைத்தும் இயற்கையை அழித்துப் பிழைக்கும் மனிதனுக்குத்தான். இயற்கைக்கோ திருவிழா! சரிதானே..?

நல்லதும் கெட்டதும்,,,

கொரோனா தொற்று ஒருவருக்கு நல்லது, மற்றொருவருக்குக் கெடுதல் என மாறி மாறி பரிசளிக்கிறது. கட்டுப்படுத்த முடியாதவை, தவிர்க்க முடியாதவை என்று மனித இனம் சிக்கெனப் பிடித்துக்கொண்டிருந்த பல விஷயங்கள் தவிர்க்கப்பட்டும் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டும்விட்டன கொரொனாவால்.

தேவையற்ற பண விரயம், வீண் செலவு கள் இப்போது இல்லை. இப்படியும் வாழ முடியும், வாழவேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறைக்கும், மூத்தவருக்கும் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் வேலைக்குச் செல்லும்போதும், வீட்டுக்குத் திரும்பும்போதும் பெரும்பாலும் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில்கூட குழந்தைகளை மடியிலிட்டுக் கொஞ்சாமல், மடிக்கணினியைத் கொஞ்சிக்கொண்டிருப்பீர்கள். குழந்தைகள் பாவம், அன்புக்காக ஏங்கும் நிலைமை இருந்தது.

இன்றைய சூழலில் பிள்ளைகளிடம் மட்டுமல்ல, வீட்டிலுள்ள அனைவரிடமும் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது இல்லையா? பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

ஆறு மனமே ஆறு! - 7: ஸ்ரீமாதா அமிர்ந்தானந்தமயி

இப்படியும் பார்ப்போம்! மாதக்கணக்கில் வீட்டிலேயே இருப்பதால், கணவன்-மனைவிக் கிடையே சச்சரவு ஏற்படுவதாகவும், சிலநேரம் கட்டுக்கடங்காமல் போவதாகவும் சமூக வலைத் தளங்களில் தகவல்கள்!

கொரோனா தொற்றிக்கொள்ளும் தற்போதைய அபாய நிலையில், பசிக்காகவோ ருசிக்காகவோ... இதுவரை வெளியே சாப்பிட் டுக் கொண்டிருந்தவர்களும் வீட்டில் சாப்பிடவேண்டியிருக்கிறது. பெண்களுக்கும் விதவிதமாக சமைக்கின்றனராம்!

இன்னொரு புறம், வியாபாரம் இல்லை. பலரும் வாழ்வாதாரம் இழந்து நிற்பது மன வருத்தத்தை அளிக்கிறது. அதேநேரம், ஆடம்பரத்திற்காக ஆயிரமாயிரம் பேர் கலந்துகொள்ளும் திருமணங்களும், பிற வைப வங்களும் நடப்பது அறவே நின்றுவிட்டதால், பல்லாயிரக்கணக்கான டன் உணவுப் பொருள்கள், குப்பைக்குப் போவது தவிர்க்கப் பட்டுள்ளது!

ஆக, கடினமானச் சூழலைப் புன்னகையுடன் எதிர்கொள்ளவேண்டும்.

துன்பம் - துயரம் நம் வாழ்வின் ஓர் அங்கம்தான். நடக்கும்போது காலில் முள் குத்தினால் என்ன செய்கிறோம்? முள்ளை அகற்றிவிட்டு தொடர்ந்து நடைபோடுகிறோம்; மீண்டும் முள் குத்திவிடாமல் பார்த்துக்கொள்கிறோம் அல்லவா? அப்படித்தான் இந்த நிலையும்.

எதிர்காலத்தில் இதைவிட மோசமான நிலை வந்தாலும் புன்னகையுடனும், தைரியத் துடனும் செயல்படுவீர்கள் அல்லவா?!

இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிலர் சிறிய சிக்கலையும் ஊதிப் பெரிதாக்குகின்றனர். ஆக்கபூர்வமாகச் செயல்பட்டால், எதையும் எதிர்த்துப் புன்னகையுடன் போராடலாம் செல்லங்களே!

ஸ்ரீகிருஷ்ணனின் புன்னகையை யார்தான் அறிந்திருக்கமாட்டார்கள். அவனது புன்னகையை மீறி துயரம் வெளிப்படாது. அத்துடன், சுற்றுப்புறத்தையும் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும். அந்தக் குணம் இப்போது நம்மிடம் இருக்கவேண்டியது அவசியம்.

பென்சிலை சீவினால் ஊக்கு தெரியும் அதை கொண்டுதான் எழுதுகிறோம், ஒரு காகிதம் எப்படிப்பட்டது எனக் கவலை கொள் ளாதே. அதில் வடிக்கப்பட்டிருப்பது அழகிய கவிதையா, ஓவியமா என்பதுதான் முக்கியம்.

தவறு செய்தாலும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு, மீண்டும் எழுதலாம்; வரையலாம். அதுபோலத்தான் நாமும் நாம் செய்யும் தவறு களைத் திருத்திக்கொண்டு வாழ வேண்டும்.

துன்பத்தை மற, புன்னகையை மறவாதே! `துன்பத்தை மற' என்றால் மூடி மறைத்துக் கொள் என்று அர்த்தம் இல்லை. புன்னகையோடு எதிர்த்து வென்றுக்காட்டு என்பதே பொருள்.

அம்மா பேச்சை கேளுங்கள்!

லாக்டவுன்... வீட்டுக்குள்ளயே வாழ்க்கை, சிலருக்கு வேலை இல்லை; சிலருக்கு வேலை இருந்தும் சம்பளம் இல்லை, புலம் பெயர்ந்த வர்களின் சிரமங்கள், மூத்த குடிமக்களின் கஷ்டம், வீடு வாசல் இல்லாதவர்கள் படும் அல்லல்... அதுவும் மாதக்கணக்கில்..... எப்போது விடியும் என்பது தெரியவில்லை!

கொரோனாவுடன் வாழவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். வாழ்ந்துக் கொண்டும் இருக்கிறோம். இருந்தாலும் மனம் தளராமல் ஆக்கபூர்வமாக செயல்பட்டு புன்னகையுடன் கடந்து செல்லவேண்டும்.

லட்சக்கணக்கான மக்கள் பலி, இந்தியாவில் முன்பிருந்ததைவிட பரவல் அதிகம். அடுத்து என்ன செய்வது? அனைவரும் ஒரு தாயின் மக்கள் போல் ஒற்றுமையோடு இணைந்து செயல்படவேண்டும்.

குடும்பங்கள் பிரிந்து, வெவ்வேறு மாநிலத் திலோ, வெளிநாடுகளிலோ வாழ வேண்டியிருக் கலாம். வாழ்க்கையை முன்னோக்கி வாழப் பழகிக்கொள்ளுங்கள். எது எப்படி இருந்தாலும் தைரியத்தைக் கைவிட வேண்டாம், அதுமட்டுமே நம்மை நல்லமுறையில் சிந்தித்து செயல்பட வைக்கும்.

கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். ஒருவருக்கொருவர் தொடர்பில் இருங்கள்; ஆறுதலாக பேசுங்கள். புத்துயிரூட்டி ஊக்குவிக்கும் நல்ல தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.

முடிந்த வரை அடுத்தவருக்கு உதவி செய்யுங் கள். நிலைமை எதுவானாலும் பதறவேண்டாம். குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளுங்கள். இப்படிச் செயல்பட்டால், உங்களுக்குள்ளேயும், உங்களை சுற்றியிருப்பவற்குள்ளும் மகிழ்ச்சியை ஏற்படுத்தமுடியும், ஸ்ரீகிருஷ்ணனைப் போல!

அடுத்து, அம்மாக்களின் அந்தக் காலத்து ஐந்தறைப் பெட்டிப் பொருளாதாரம்! கொடுத்த பணத்தை சிக்கனமாக செலவுசெய்து குடும்பத்தைச் சீரும் சிறப்புமாக நிர்வகித்தனர். இன்றோ வருமானம் அதிகம், இருப்பினும் சக்திக்கு மீறிய ஆசைகள், ஆடம்பரச் செலவுகள், இறுதியில் கடன் பிடியில் சிக்கிவிடுகிறீர்கள். சமாளிப்பது கஷ்டம்தான்! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்... வீணடிக்கப்படாத செல்வம் நம்மை வாழ வைக்கும்!

இந்தக் கொரோனா தொற்று, நமக்கு நல்ல பல பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற நிலை வந்தாலும் நம்பிக்கை யின் ஒளி மட்டும் நம்மைவிட்டு அகலாது என்பதை நிரூபித்துள்ளது.

அதுமட்டுமல்ல, நம் வாழ்க்கை பற்றிய பார்வையையும் முற்றிலும் மாற்றியமைத்து, நல் மாற்றங்களையும் அளித்துள்ளது. வாழ்க்கை சகஜ நிலை திரும்பியபிறகும் அந்த மாற்றங்கள் தொடர வேண்டும் மக்களே, சரியா?!

- மனம் மகிழும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு