Published:Updated:

முற்பிறவியில் நிகழ்ந்த அற்புதம்!

ஸ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராகவேந்திரர்

ஸ்ரீராகவேந்திரர்

முற்பிறவியில் நிகழ்ந்த அற்புதம்!

ஸ்ரீராகவேந்திரர்

Published:Updated:
ஸ்ரீராகவேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீராகவேந்திரர்

ஸ்ரீராகவேந்திரர் முற்பிறவியில் ஸ்ரீவியாசராஜராக அவதரித்திருந்தார். அந்த மகானின் அவதார நிகழ்வே ஓர் அற்புதமாகும்.

பன்னூர் என்னும் கிராமத்தில் ராமாசார்யர் சீதம்மை என்னும் தம்பதி வாழ்ந்தனர். அவர்களுக்குப் புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒரு நாள் எதிர்பாராத விதமாக ராமாசார்யர் இறந்துவிட்டார்.

சீதம்மை உடன்கட்டை ஏற விரும்பினார். உடன்கட்டை ஏறும் முன்பாக யாரேனும் ஒரு பெரியவரிடம் ஆசி பெற வேண்டும் என்பது விதி. அதற்காகக் காவிரிக் கரைக்குச் சென்றார் சீதம்மை.அங்கே ஸ்ரீபிரம்மண்ய தீர்த்தரைக் கண்டு அவரின் காலில் விழுந்தார். ஸ்ரீபிரம்மண்யர் `தீர்க்க சுமங்கலி பவ;' என்று வாழ்த்தினார். சீதம்மை அதிர்ச்சி அடைந்தார். தன் நிலையை விளக்கினார்.

ஸ்ரீராகவேந்திரர்
ஸ்ரீராகவேந்திரர்


ஸ்ரீபிரம்மண்யரோ புன்னகை யோடு, ``பெண்ணே! நானாக எதை யும் சொல்லவில்லை. அன்னை சரஸ்வதியே அவ்வாறு கூறினாள். எனவே கவலை வேண்டாம். உன் வீட்டைக் காட்டு'' என்று கூறி அவள் வீட்டுக்குச் சென்றார்.

ராமாசார்யரின் உடலின் முன்பு அமர்ந்து தன்வந்திரி மந்திரத்தை உச்சரித்தார் ஸ்ரீபிரம்மண்யர். என்ன ஆச்சர்யம் ராமாசார்யர் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தார். பிறகு தம்பதி  பிரம்மண்யரின் கால்களில் விழுந்து வணங்கினர்.

``ராமாசார்யா... உன்னை உயிர்ப்பித்ததற்கு ஈடாக உன் மகன் ஒருவனை எனக்குத் தர வேண்டும்'' என்றார் ஸ்ரீபிரம்மண்யர். இருவரும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டனர். குழந்தை பிறந்ததும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து ஸ்ரீபிரம்மண் யரிடம் சமர்ப்பித்தனர்.

அந்தக் குழந்தையே பிற்காலத் தில் உலகம் போற்றும் ஸ்ரீவியாச ராஜர் ஆனார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism