Published:Updated:

குரங்கின் விளையாட்டு!

சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்

ராதாகுண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணிய ஸ்தலம்.

குரங்கின் விளையாட்டு!

ராதாகுண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணிய ஸ்தலம்.

Published:Updated:
சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்
பிரேமை பக்திக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்த ஸ்ரீராதா தேவி, சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புத சம்பவம்...

ராதாகுண்டம் என்ற பகுதி ராதாதேவி வாழ்ந்து அன்பைப் பரப்பிய புண்ணிய ஸ்தலம். சுவாமி விவேகானந்தர் இங்கே வந்து தங்கியிருந்தபோது, அவரிடம் ஒரே ஒரு துணிதான் இருந்தது. அதை ஒருநாள் அவர் கசக்கி உலர்த்தி வைத்திருந்தபோது, ஒரு குரங்கு வந்து தூக்கிக்கொண்டு போய், மரத்தின் உச்சாணிக் கிளையில் உட்கார்ந்து கொண்டது. சுவாமிஜி குரங்கிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் பயனில்லாமல் போனது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சுவாமிஜிக்குக் கோபம் வந்துவிட்டது. குரங்கின்மீது அல்ல; அந்தப் புண்ணிய ஸ்தலத்தில் பாதம் பதித்து வலம் வந்த ராதா தேவியிடம்! ‘எல்லோரும் உன்னைக் கருணையின் வடிவமாகப் போற்றுகிறார்கள். ஆனால், உன்னை தரிசிக்க வந்த இந்த ஏழையின் துணியைப் பறித்துக்கொண்டுவிட்டாயே? பக்கத்தில் உள்ள வனத்துக்குச் சென்று பட்டினி கிடந்து உயிரை விடுகிறேன். அந்தப் பழி உன்னையே சேரட்டும்’ என்று கூறியவராய் காட்டை நோக்கி ஓடலானார்.

சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தர்

எல்லாவற்றையும் எங்கிருந்தோ கவனித்துக்கொண்டிருந்த ஒருவன், காவி உடையையும் சிறிது உணவையும் எடுத்துக்கொண்டு காட்டுக்குச் சென்றான். அங்கே சுவாமிஜியைச் சந்தித்து அவற்றைக் கொடுத்துச் சென்றான். சுவாமிஜி யின் கண்களை நீர் திரையிட்டது. வேட்டியை அணிந்து உணவையும் உட்கொண்ட பின் வனத்திலிருந்து வெளியே வந்தார். துணியும் உணவும் கொடுத்த வாலிபனை எவ்வளவு தேடியும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், அவர் எங்கே துணியை முன்பு உலர்த்தி இருந்தாரோ, அங்கேயே அது காய்ந்துகொண்டிருந்தது. சுவாமிஜி, ஸ்ரீராதாதேவியின் திருவருளை வியந்து சிலிர்த்தார்.

- எம்.மாணிக்கம், கடலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism