Published:Updated:

திருடன் துறவியான கதை!

சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்

மகான்கள் வாழ்வில் - ஆன்மிகக் கதை

திருடன் துறவியான கதை!

மகான்கள் வாழ்வில் - ஆன்மிகக் கதை

Published:Updated:
சுவாமி விவேகானந்தர்
பிரீமியம் ஸ்டோரி
சுவாமி விவேகானந்தர்

ஒருமுறை சுவாமி விவேகானந்தர் ரிஷிகேஷ் சென்று இயற்கை தரிசனமும் இறை தரிசனமும் மகான்கள் தரிசனமும் செய்து மகிழ்ந்திருந்தார்.

ஒருநாள் அங்கு அவர் ஒரு துறவியைச் சந்தித்தார். அவரின் பார்வையில் தெரிந்த ஒளி விவேகானந்தரை மிகவும் கவர்ந் தது. அவரிடம் உரையாட ஆரம்பித்தார். பயணம், ஆன்மிகம் குறித்த விஷயங்கள், இந்த தேசத்தின் மகான்கள் என்று பேச்சு நீண்டது. பேச்சுவாக்கில் விவேகானந்தர் தான் சந்தித்த பவஹரி பாபா பற்றிக் குறிப்பிட்டதும் அந்தத் துறவியின் உடல் சிலிர்த்தது. அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

திருடன் துறவியான கதை!

“சுவாமி, பவஹரி மகராஜின் ஆசிரமத்தில் ஒரு திருடு நடந்தது. அதுகுறித்து உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும்” என்று பதில் உரைத்தார் சுவாமி விவேகானந்தர்.

“முழுமையாகத் தெரியுமா என்று தெரியவில்லை. நான் சொல்கிறேன். அது ஒரு இரவு வேளை. திருடன் ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டான். ஆசிரமத்துக்குள் பெரிதாக ஏதுமில்லை. என்றாலும் இருக்கும் சில பொருள்களை எடுத்துக்கொண்டான். ஏற்கெனவே அவன் வேறு இடங்களில் திருடியிருந்த பொருள் களோடு சேர்த்துக்கொண்டான். பின்பு அவசர அவசரமாக வெளியேற முயன்றான். அப்போது பவஹரி பாபா விழித்துக் கொண்டார்.

‘யாரது’ என்று சத்தம் கொடுத்தார். திருடன் வேகமாக ஓட முயன்றான். அப்போது அவன் கையிலிருந்த பை கீழே விழுந்துவிட்டது. அதைத் திரும்ப எடுக்க முயன்றால் மாட்டிக் கொள்ளலாம் என்று அவன் அதை அப்படியே போட்டுவிட்டு ஓட ஆரம்பித்தான்.

பவஹரிபாபாவோ எழுந்து அந்தப் பையை எடுத்துக் கொண்டு அவன் பின்னால் ஓட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் திருடன் அவர் கையில் சிக்கிக்கொண்டான். அப்போது அவனிடம் பாபா, “இதோ இது உன் பொருள். இதை ஏன் விட்டுச் செல்கிறாய்...” என்று கேட்டு அவன் கையில்கொடுத்தார். அந்தத் திருடனுக்கு உடல் சிலிர்த்தது. அந்தக் கணத்தில் அவன் வாழ்க்கை மாறிவிட்டது” என்றவர், விவேகானந்தரிடம் கேட்டார்.

“சுவாமி, அந்தத் திருடன் யார் என்று தெரியுமா...”

சுவாமிஜி துறவியையே பார்த்துக் கொண்டிருந்தார். “சுவாமி, அது நான்தான்” என்றார் அந்தத் துறவி. இருவரும் ஒரு கணம் அமைதியாக இருந்தனர். அந்தக் கணத்தில் இருவர் மனதிலும் பவஹரி பாபா பெரும் சிம்மாசனம் போட்டு அமர்ந்து ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்!