Published:Updated:

சிற்ப நாயகி!

இன்றைக்கும் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில்.

பிரீமியம் ஸ்டோரி

சப்த மாதர்கள்!

ந்த சப்த மாதர்கள் அருள்வது காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில். ராஜசிம்மேச்சரம் எனப் போற்றப்படும் இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மணற்கற்கள் என்று கூறப்படும் ஒருவகைக் கல்லால் உருவாக்கப்பெற்றவை. அவை கருங்கற் சிற்பங்களின் உறுதித் தன்மையை விட சற்றுக் குறைவு உடையவை.

சிற்ப நாயகி!

அந்த மணற்கற்சிற்பங்களை வழுவழுப்பாகச் செய்ய இயலாது. அதனால்தான் ராஜசிம்ம பல்லவன், கச்சிப்பேட்டுப் பெரிய தளியில் எடுத்த மணற் கற்சிற்பங்களின் மீது சுண்ணாம்புக் காரையைப் பூசி, அதன் மேல் வண்ணங்களைத் தீட்டச் செய்தான். இன்றைக்கும் கயிலாசநாதர் கோயில் சிற்பங்கள் சிலவற்றில் பழைய சுண்ணாம்புக் காரையையும், அதன்மேல் வண்ணங்கள் தீட்டப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். திருச்சுற்றின் மேற்புறம் சப்த மாதர் ஏழு பேரும் நீண்ட ஆசனம் ஒன்றில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.

திருமகள்!

ன்றைக்கும் பிரமிக்கத்தக்க அளவில் பிரமாண்டமாகத் திகழ்கிறது கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயில். கோயில் விமானத்தின் தென்புறம் தேவ கோஷ்டத்தில் திருமகளின் சிற்பம், சிற்பியின் அதிஅற்புதப் படைப்புக்குச் சான்று!

சிற்ப நாயகி!

திருமகள், பண்டைய காலத்தில் தாய் தெய்வமாகப் போற்றி வணங்கப்பட்டதாகச் சொல்கின்றன, கல்வெட்டுகள். மலர்ந்த தாமரைப் பூவின்மீது தாயார் அமர்ந்திருக்கிறாள். கருமை சூல்கொண்ட மேகங்கள் மழையைப் பொழியும். அதனால், அங்கே வளமையும் செழுமையும் அதிகரிக்கும். இதைச் சுட்டிக்காட்டுவதற்காக, தாமரைமீது திருமகள் அமர்ந்திருக்க, மேலே உள்ள இரண்டு யானைகளும் நீரைச் சொரியும்படி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. யானைகள், சூல் கொண்ட கருமேகங்களின் குறியீடு. இரண்டு யானைகளின் உடலானது பாதியாகவும், மீதியாக மேகங்களின் தோற்றமும் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைப் பார்த்தால், அந்த இடத்தை விட்டு நகரவே தோன்றாது, நமக்கு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

துர்கை!

லகப் புகழ்மிக்க தஞ்சை பெரியகோயில் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த காஞ்சி கயிலாசநாதர் கோயிலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்படியொரு வியப்பின் உச்சம், இந்த ஆலயம்! கோயிலின் நான்குபுறமும் பிரமாண்ட மதில் சூழ்ந்திருக்க, திருக்கயிலாய மலையாகவே திகழ்கிறது ஆலயம். இதை ராஜசிம்ம பல்லவ மன்னன் எடுப்பித்தான். எனவே, இந்தத் தலம் ‘ராஜசிம்ம பல்லவ ஈஸ்வரம்’ என்றே குறிப்பிடப்படுகிறது. கோயிலின் உள்ளே உள்ள பல சிற்றாலயங்களில் திகழும் தெய்வ வடிவங்கள் கொள்ளை அழகு. அவற்றில் துர்கையின் சிற்பம் பிரமிக்கவைக்கிறது.

சிற்ப நாயகி!

ஒற்றைக் காலைத் தூக்கியபடி, கடும் கோபமான முகத்துடன், சிங்கத்தின் முதுகின் மேல் தன் இடது காலை ஊன்றியபடி, தரையில் நின்றிருக்கும் துர்கையின் திருக்கோலத்தை வேறெங்கும் பார்ப்பது அரிதான ஒன்று. எட்டுத் திருக்கரங்களுடன் செம்மாந்து நிற்கும் தேவி, இடது கரங்களில் முறையே வில், கேடயம், சங்கு, கிளி ஆகியவற்றையும், வலது கரங்களில் அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றையும் ஏந்தியவாறு, ஒரு கரத்தை இடுப்பின் மீது வைத்தபடி நிற்கிறாள். இத்தனை இருந்தாலும், அவளின் முகத்தைக் கூர்ந்துகவனித்தால், அதில் ததும்பி நிற்கிற கருணையை உங்களால் உணரமுடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு