Published:Updated:

ஞானியும் நாயும்!

ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

அ.திருமலை, திருச்சி

ஞானியும் நாயும்!

அ.திருமலை, திருச்சி

Published:Updated:
ஆன்மிகக் கதை
பிரீமியம் ஸ்டோரி
ஆன்மிகக் கதை

ஓர் ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். ஒரு நாள் அவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், ‘‘ஐயா, தாங்கள் எப்படி இவ்வளவு ஞானம் பெற்றீர்கள்?’’ என்று வினவினார். அதற்கு அந்த ஞானி, ‘‘ஒரு நாய்தான் காரணம்’’ என்றார் இயல்பாக.

ஞானியும் நாயும்!

தைக் கேட்ட பக்தருக்குக் கோபம் வந்து விட்டது. ‘‘ஐயா, நான் விளையாட்டுக்காகக் கேட்கவில்லை. புரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் கேட்டேன். ஆனால், தாங்களோ ஒரு நாய்தான் காரணம் என்று வெகு சாதாரணமாகச் சொல்கிறீர்களே?’’ என்றார்.

‘‘வேடிக்கை இல்லையப்பா. நிஜமாகவே ஒரு நாய்தான் காரணம்!’’ என மீண்டும் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார் ஞானி:

‘‘ஒரு நாள் நான் குளக்கரையில் அமர்ந்திருந்தேன். அப்போது மிகுந்த தாகம் கொண்ட நாய் ஒன்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு தண்ணீரைத் தேடி குளத்துக்கு வந்தது. வந்த வேகத்தில் நீரைக் குடிக்க வாயைக் கொண்டு சென்ற நாய், சட்டென பின்வாங்கியது. சிறிது நேரம் குரைத்து விட்டு, மீண்டும் தண்ணீரைப் பார்த்தது. மறுபடியும் குரைக்க ஆரம்பித்துவிட்டது.

சிறிது நேரம் இவ்வாறே செய்து கொண்டிருந்த நாய், ஒரு கட்டத்தில் தாகம் மேலிடவே துணிச்சலோடு தண்ணீரில் வாய் வைத்துக் குடிக்க ஆரம்பித்து விட்டது. தண்ணீரைக் குடிக்கும்போதுதான் அந்த நாய், ‘இதுவரை தண்ணீருக்குள் தெரிந்தது தன்னுடைய பிம்பமே’ என்று உணர்ந்தது.

ஆக, அதுவரை அந்த நாய் தயங்கித் தயங்கி பயந்து நின்றதற்குக் காரணம் அதன் உருவமே! இந்தச் சம்பவத்தைப் பொறுமையாகப் பார்க்க நேர்ந்ததனால் எனக்கும் ஒரு தெளிவு கிடைத்தது. என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது ‘நான்’தான் என்பதை உணர்ந்தேன். ‘நான்’ என்ற அந்த அகம்பாவத்தை ஒழித்தபோது ஞானி ஆனேன்!’’ எனக் கூறி முடித்தார் ஞானி!

நவகிரகங்களின் அருள் யாருக்குக் கிடைக்கும்?

ன்பது கிரகங்களின் திருவருளையும் ஒருங்கே பெற ஐந்து இயல்புகள் அவசியம் என்று விளக்குகிறார்,ஜோதிடநூலான பலதீபிகையை அருளிய மந்திரேஸ்வரர். அவை என்னென்ன?

‘பிற உயிர்களுக்குத் துன்பம் விளைவிக்க நினைக்காத மனம், கட்டவிழ்த்து விடப்பட்ட புலன்களைக் கட்டுக்குள் அடக்கும் ஆற்றல், அற வழியில் மட்டுமே செல்வத்தைச் சேமிக்கும் இயல்பு, கடமையில் கவனம், கட்டுப்பாட்டைக் கட்டிக் காப்பதில் கெட்டிக்காரத்தனம் - இத்தனையும் எவரிடம் குடிகொண்டிருக்கிறதோ அவரை நவ கிரகங்கள் எப்போதும் வாழ்த்துகின்றன!’ என்கிறார் மந்திரேஸ்வரர்.


- கே.ராமசாமி, கடலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism