திருத்தலங்கள்
Published:Updated:

`ஏழையாக இரு!'

வாரியார் சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வாரியார் சுவாமிகள்

சிந்தனை விருந்து

துறவிகளின் வாக்கு தீட்சண்யமானது; அதேநேரத்தில் அர்த்தம் பொதிந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு இளம் வயதிலேயே அதை உணர்ந்து கொள்ளும் சம்பவம் ஒன்று வாய்த்தது. அப்போது வாரியார் சுவாமிகளுக்கு இருபத்தெட்டு வயது. வள்ளியூர் முருகன் கோயிலில் பிரசங்கம் செய்வதற்காக அவரை அழைத்திருந்தார்கள்.

`ஏழையாக இரு!'

ள்ளியூரில் மிளகாய் சுவாமிகள் என்று ஒருவர் இருந்தார். மிளகாயை அரைத்து உண்டு, மோரைக் குடிப்பார். அதனாலேயே அவருக்கு அந்தப் பெயர் வந்திருந்தது. அன்றைக்கு நான்கு மணி நேரம் பிரசங்கம் செய்தார் வாரியார். அவர் பேச்சில் ஊரே கட்டுண்டு கிடந்தது. பிரசங்கம் முடிந்ததும், அவருக்குப் பெரிய பொன்னாடையைப் போர்த்தினார் மிளகாய் சுவாமிகள்.

அதோடு, ``வாரியார் எப்போதும் ஏழையாகவே இருக்க வேண்டும் என்று முருகப்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்’’ என்றும் ஆசீர்வதித்தார். இதைக் கேட்டதும் வாரியார் சுவாமிகளின் முக மாற்றத்தைக் கண்டார் சுவாமிகள்.

``என்ன யோசிக்கின்றீர்... நீர் கோடீஸ்வரனாக இருந்தால் நாங்கள் அழைக்கும்போதெல்லாம் வருவீரா... நீர் ஏழையாக இருந்தால்தான் ஊர் ஊராகச் சென்று பிரசங்கம் செய்து முருகன் பெருமையைப் பரப்புவீர். அந்தக் காலத்தில் புலவர்கள் வறுமையில் வாழ்ந்ததால்தானே தமிழை வளர்த்தார்கள்... அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்.’’ என்றார். அதைக் கேட்டு வாரியார் உள்ளம் குளிர்ந்தது.

ஏழையாக இருப்பதை விடுங்கள்... சில பணக்காரர்களின் கதையைக் கேட்டாலே நமக்குத் தூக்கி வாரிப்போடும்.

ரு பெண் தன்னுடைய தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்... ``என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம் ஒருவழியா என் கணவர் லட்சாதிபதியாகிட்டார்.’’

``பரவால்லையே... உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கறதுக்கு முன்னாடி அவர் என்னவா இருந்தார்?’’

'கோடீஸ்வரராக இருந்தார்!'