காலம்... இந்தப் பிரபஞ்ச இயக்கத்தின் தத்துவம். தோன்றுவதும் அழிவதும் அதன் இயக்கங்களில் ஒன்று. அது உலகில் இதுநாளும் நிகழ்த்தும் வளர் சிதை மாற்றங்கள் ஏராளம். அதன் உச்சம்தான் உலகின் முடிவு. இதை தீர்க்கதரிசனமாய்ச் சொல்லும் ஞானநூல்கள் அபூர்வம்.

நம் புராணங்களும் காலக்ஞான நூல்களும் நான்கு யுகங்களை வகுத்துள்ளன. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்னும் இந்நான்கு யுகங்களிலும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் மகாபுருஷனாக பகவான் விளங்குகிறான். இப்போது நாம் இருப்பது கலியுகம். கலியுகம், அதர்மம் கோலோச்சும் யுகம். இந்த யுகத்தின் முடிவு எப்படி இருக்கும்?

மதம் சார்ந்த தீர்க்க தரிசனங்களைத் தாண்டி, மயன் தீர்க்க தரிசனம், நாஸ்டர்டாம் போன்ற வர்களின் தீர்க்க தரிசனம் ஆகியன மக்களை வெகுவாகக் கவர்பவை. தற்காலத்தில் பொதுவாகவே மேற்கிலிருந்து வரும் அனைத்தின் மீதும் பெரும் ஈர்ப்பு கொண்டவர்களாக நாம் இருக்கிறோம். அதனால்தான் நம் நாட்டின் காலக்ஞானிகள் பலரையும் அறியவில்லை.

நம் நாட்டில் வாழ்ந்து இந்தக் கலியுகத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் தன் தபோவலிமையால் அறிந்து அதைக் காலக்ஞானம் என்னும் நூலாக எழுதி வைத்து இன்றும் நம்மிடையே தன் சூட்சும சொரூபத்தோடு வாழ்ந்து அருள்பாலிக்கும் மகான் ஒருவரை தெரியுமா? அவர்தான் காலக்ஞானி ஶ்ரீவீரபிரம்மேந்திரர்.

ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி இப்புண்ணிய பூமியில் அவதரித்த யோகீஸ்வரர். முக்காலமும் உணர்ந்தவர். இறைவனைப்போலவே மகான்களும் முக்காலமும் உணர்ந்தவர்கள்தாம் என்றாலும் இறைவனுக்கும் மகான்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன தெரியுமா...

இறைவன் நம் பாவ புண்ணியங்களின் கணக்கு களுக்கு ஏற்றவாறு, தீர்ப்பு வழங்கும் நியாயாதிபதி. ஆனால் ஞானிகளும், மகான்களும் நம் தீய வினைகளைக் கருணையோடு மன்னித்து, நல்மார்கத்தைக் காட்டி, இறைவனின் அருளைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்தும் தயாளர்கள்.

இத்தகைய குருமார்களின் உதவியின்றி நம்மால் இறைவனை அடைய இயலாது. இந்தப்பிறவியின் பாவபுண்ணியங்களை மட்டுமல்ல, ஜன்மாந்திரங்களாகத் தொடரும் நம் வினைகளைத் தீர்க்கும் ஆற்றலை உடையவர்கள் மகான்கள். அப்படி ஒரு மகான் ஶ்ரீவீரபிரம்மேந்திரர்.

இவருடைய காலம் 13 - ம் நூற்றாண்டு. (சிலர் 15-ம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர்.) நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாத அற்புதங்களை நிகழ்த்தியவர் வீரபிரம்மேந்திரர்.

அவருடைய திவ்ய சரிதத்தையும், சிறப்பு வாய்ந்த உபதேசங்களையும், இன்றளவும் அவர் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அற்புதங்களையும் இத்தொடரில் காண்போம். அதற்கு முன்பாக அவர் இந்த உலகுக்கு அளித்த மாபெரும் ஞானப் பொக்கிஷமான காலக்ஞானம் நூலிலிருந்து ஒரு சிறு தகவலோடு தொடங்குவோம்.

ஶ்ரீவீரபிரம்மேந்திரர் அருளிய ‘காலக்ஞானம்’ என்று அழைக்கப்படும் புனித நூல் கலியுகத்தின் கடைசி 5,000 வருடங்களில் இவ்வுலகில் என்னவெல்லாம் நிகழும் என்பதை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு கூறுகிறது.

இந்நூலில் ஶ்ரீவீரபிரம்மேந்திர சுவாமி சுமார் பதினான்காயிரம் வாக்குகளை அருளியுள்ளார். இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி எழுதிய காலக்ஞானத் தில் இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பெருந்தொற்று பற்றிய குறிப்பும் உள்ளது.

2020-ம் ஆண்டில் கிழக்குப் பகுதியில் அமைந்த ஒரு நாட்டிலிருந்து விஷக்கிருமிகள் புறப்பட்டு, அது உலக நாடுகள் பலவற்றையும் தாக்கும், நம் தேசத்திலும் பலருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை ஒரு பாடலின் மூலம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். காலக்ஞான நூலில் 114-வது செய்யுளில் இவ்வகையான விஷக்கிருமியைக் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அவர் அருளியுள்ளார்.

ஈஸான்ய திக்லோ விஷ காலி புட்டேனு
லக்ஷ்லாதி பிரஜலு சாச்சேரு கோரன்கி
அனு ஜப்பு கோடி மந்திகிதகிலி
கோல்லுலாக தூக்கி சாச்சேரு.

அதுமட்டுமல்ல, இந்தப் புண்ணிய பூமியில் பாவங்கள் பெருகிய காரணத்தால், புனித ஆலயங்களான திருப்பதி முதல் அனைத்து ஆலயங்களும் ஒரு சில நாள்களுக்கு மூடப்படும் என்று, பல நூற்றாண்டுக்கு முன்பே மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் ஶ்ரீவீரபிரம்மேந்திரர்.

இது காலக்ஞானத்தின் சிறுதுளிதான். அந்த மகானின் அற்புத சரிதத்தில் இன்னும் அநேக அற்புதங்களையும், காலக்ஞானத்தின் சிறப்பு களையும் அறிந்துகொள்வோம் வாருங்கள்.

ஶ்ரீவீரபிரம்மேந்திர ஸ்வாமி, அணுகுவதற்கு எளியவர். அன்பும் பக்தியும் கொண்டாலே நம்மை ஆட்கொள்பவர். சரணடைந்தவர்களைக் காலமெல்லாம் காப்பவர். இப்படிப்பட்ட மகான் குறித்து அறிந்துகொள்ள நந்திகொண்டா என்ற கிராமத்துக்குச் செல்வோம் வாருங்கள்...

நந்திகொண்டா, முன்பு ஆந்திரம் தற்போதைய தெலுங்கானா. இங்கு விஜயபுரி என்ற நகரத்தின் அருகில் புனிதநதியான கிருஷ்ணா பாய்ந்து வளம் சேர்க்கும் கிராமங்களில் ஒன்று.

இப்பகுதி இக்ஷ்வாகு பரம்பரை மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதி என்று பெருமையுடன் சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இஷ்வாகு வம்சத்தில்தான் பிரபு ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்தார். அப்படிப்பட்ட புண்ணிய சிரேஷ்டர்களால் ஆட்சி செய்யப்பட்ட இந்தப் புனித ஸ்தலத்தில் 13-ம் நூற்றாண்டில், ஶ்ரீமன் நாராயணரின் அவதாரமாக அருள் பாலித்தவரே காலக்ஞானி வீரப்பிரமேந்திர ஸ்வாமி.

கிருஷ்ணா நதிக்கரையோரம் அறநெறியோடு பக்தி மார்க்கத்தில் தலைசிறந்து விளங்கிய தம்பதி வீர போஜயாச்சார்யா - வீரபாப்பம்மாள். இத்தம்பதியர் ‘பாபாக்னி’ என்ற மடத்தை நிறுவி, தர்ம காரியங்களுக்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டனர்.

தினமும் மூன்று முறை சர்வேஸ் வரருக்கு பூஜைகள் நிகழ்த்தி அன்னதானம் அளித்த பின்னரே தாம் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இவர்களை நந்திகொண்டா கிராமமே தம் பெற்றோராகக் கருதிப் போற்றி வந்தது. இவ்வளவு சிறப்புகள் இருந்தும் தமக்கு ஈமக்கிரியை செய்யக்கூட ஒரு புத்திர பாக்கியம் இல்லையே என்னும் கவலை வாட்டியது இந்தத் தம்பதியரை.தினமும் சர்வேஸ்வரனை தொழுது இடைவிடாது பூஜைகளும், தர்ம காரியங்களும் செய்து தமக்கு புத்திர பாக்கியம் அளிக்குமாறு மனதார பிரார்த்தனை செய்துவந்தனர் இருவரும்.

ஒருநாள் அவர்களின் இல்லத்திற்கு ஒரு துறவி வந்தார். அப்போது வீரபோஜயாச்சார்யா பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்குவ தற்காகச் சென்றிருந்தார். அவரின் மனைவி மட்டுமே அங்கு இருந்தார். அப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

“புனிதவதியே... இன்னும் சில நாள்களில் உங்களுக்கு ஒரு நற்செய்தி கிடைக்கப் போகிறது. சர்வேஸ்வரரின் திருவருளால் தவசீலர் மூலம் ஒரு குழந்தை உங்களைத் தேடி வரும். அக்குழந்தை உங்களுக்கு மட்டுமே புத்திரனாக இருக்கக் கூடிய சாமான்யக் குழந்தை அல்ல. இவ்வுலகில் தர்மத்தையும், பக்தி நெறியையும் தழைத்து ஓங்கச் செய்யும் தெய்வக் குழந்தை. அதனால் இருவரும் பெற்றோராகும் சௌபாக்கியத்தை அடைவீர்கள்!

அதுமட்டுல்ல, உங்களை வந்தடையும் அந்த தெய்விகக் குழந்தை, வளரும்போதே வேறெவருமே அறிய இயலாத காலச்சக்கரத்தின் சுழற்சியை முழுவதும் அறிந்ததாக விளங்கும்.

மகாபுருஷராக இவ்வுலகில் நிகழவிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் குறித்துத் துல்லியமாக வும் பகிரங்கமாகவும் அனைவருக்கும் அறிவிக்கும். இறைவனின் அவதாரமாக விளங்கப்போகும் அக்குழந்தை விரைவில் தங்கள் மடியில் தவழும்.

கருவில் குழந்தையைச் சுமக்கும் பாக்கியம் இல்லையென்று வருந்த வேண்டாம். இறைவனின் அவதாரமே உனக்குப் புத்திரனாக வரப்போகிறது. ஆம்! இருவரும் இதுவரை செய்த பூஜாபலனாக அந்த இறைவனே குழந்தையாக வந்து விளையாடி உங்களை மகிழ்விக்க சித்தமாக உள்ளார்” என்று கூறினார் அந்த சாது.

இதைக் கேட்ட ஶ்ரீமதிவீரபாப்பாம்மாள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அவர் அந்தச் சாதுவிடம்

`‘என் தந்தைக்கு நிகரானவரே! வறண்ட பாலை வனமாக இருந்த என் வயிறும், மனமும் இன்று உம் சொற்களால் குளிர்ந்தது. தாங்கள் தயைகூர்ந்து, எமக்கு தெய்விகப் புத்திரனை வழங்கவிருக்கும் தவசீலர் எங்குள்ளார் என்ற விவரத்தைக் கூறுங்கள். எம் புதல்வனைக் காணும் ஆவலில் நான் துடித்துக் கொண்டிருக்கிறேன்!” என்றார்.

இதைக் கேட்டு சாது, ‘`விரைவில் நீயும் உன் கணவரும் தீர்த்த யாத்திரை செல்வீர்கள். யாத்திரை நிறைவடைந்ததும், புனித சரஸ்வதி நதிக்கரையில் ஒரு தவசீலரை சந்திப்பீர்கள் . அவரே உங்களிடத்தில் அத்தகைய தெய்விகக் குழந்தையை ஒப்படைப்பார். அவரே அக்குழந்தையைப் பற்றிய விவரங்களையும் தெரிவிப்பார். இது சத்தியம்'' என்று கூறிவிட்டு மறைந்தார் துறவி!

அவர் சொன்னது பலித்ததா?

- தரிசிப்போம்...